Samstag, 14. März 2009

ஐயா ஜெயபாலன்...

சேனனது பேட்டியைச் சோதிலிங்கம் கண்டு, தேசம் நெற்றில் விட்டிருக்கிறார்கள்.அதற்காககான எதிர்வினையை நாதன் தொடர்ந்து ஆற்றியபோது,அங்கே-இஃது மறுக்கப்படுகிறது-சுருக்கப்படுகிறது.ஜெயபாலனது கருத்தியல் தளமானது மிகவும் விரோதமான தளத்தைக் கொண்டிருக்கிறது?
இது,ஆரோக்கியமானதாகத் தெரியவில்லை.




எனவே, அப் பேட்டிக்கான விமர்சனத்தின் முழுமையும் இங்கே பிரசுரமாகிறது.


-உடைப்பு.







வணக்கம், ஐயா ஜெயபாலன்!

மீளவும் எழுத்தில் கைவைத்து விட்டீர்கள்.

ஏன் ,ஐயா உமக்க இந்த வேலை?

உமது புலமையை,வேறு நபர்களிடம் காட்டும்.

கீழ் எழுதியவற்றிற்கு,வினவு தளத்தின் தொடர்பை இணைத்திருந்தேன். தவிர்த்து விட்டீர்கள்.

பரீஸ் போராட்டம் பற்றி எழுதியிருந்தேன்,
உமது கருத்துப்பகுதியில் அதனைப் போடவில்லை.


உமது தளத்தில் இருக்கும் வாசகர்களுக்கு,
ஏன் தெரிவுச் சுதந்திரத்தை வழங்க மாட்டேன்
என்று அடம் பிடிக்கின்றீர்கள்?
ஒரு அமைப்பு உருவாக்கத்திற்கு குறுங்குழுவாதம் எவ்வாறு ,-தடையானது -ஒரு விடயமோஅதே போலதான், கருத்துக்களை மறைப்பாதாகும்!

இதற்கும், புலி கூறும் "ஏக" கருத்துக்கும் மாறுபாடு இருக்கின்றதா?
கருத்துகள் முட்டி மோதுகின்ற போதுதான் சரியான கருத்துக்களை வாசகர்கள் பெற்றுக் கொள்வார்கள். இந்த அணுகுமுறை தங்களிடம் இல்லாது ஏன்?
நீங்கள், அனுமதிக்கும் கருத்துக்கள், "வெறும் புலம்பல்கள் அல்லது அலட்டல்" கருத்துக்களை அனுமதிக்கும் நீங்கள்-ஒரு, கருத்தை முன்வைத்து ஒருவர் எழுதுகின்ற போது, முரண்பாடு இருப்பினும் வாசகனுக்கு அடைய வைப்பதுதான் மக்கள்நலன் கொண்ட ஊடக தர்மம்.

நீங்கள், உங்கள் மனவிருப்புக்கமைய கருத்துக்களை வெளியிடுகின்றீர்ள்.

இவை எமக்கு ஆச்சரியம் இல்லை. மாறாக, வாசகர்கள் இவ்வாறான ஜனநாயக மறுப்புக்களை அறிந்து கொள்ள வேண்டிய நிலை இருக்கின்றது.
இன்று, நேற்றல்ல புலிகளின் ஒற்றை அமைப்பு சிந்தனை கொண்ட நாட்களில் தெடாங்கி, மாற்றுக் கருத்துக்கு மக்களை அனுமதிக்கவில்லை. தான் விரும்பிய கருத்தைக் கூற ஒரு மனிதனுக்கு முழு உரிமையும் இருக்கின்றது. இதனை ஏன் தடைசெய்கின்றீர்கள்?
உங்கள் இணைய தளம் உங்கள் தனிச்சொத்து. அதில் உங்களுக்கு சொத்துரிமை உண்டு.

ஆனால் கருத்துக்கு மாற்று கருத்துக் கூறும் உரிமையை தடுப்பதற்கு அல்லது. அந்த கருத்தை வெட்டிக் கொத்துவதற்கு எவருக்கும் உரிமை இல்லை.
ஒருவர் இந்த தளத்தில் தான் எழுத வேண்டும் என்ற வரையறையும் இல்லை.

பொது மேடைகளில் பொறுப்புணர்வுடன் எவரும் எந்தக் கருத்தையும் முன்வைக்க முடியும்.

முன்னர் குறிப்பிட்டபடி,

நீஙகள் விரும்பும் முதலாளித்துவ ஜனநாயக சொல்லாடல்களுக்கு அமையவே எமது கருத்தை முன்வைக்கின்றோம்.
ஆயிரம் பூக்கள் மலரட்டும் வழிவிடுங்கள்...




***********************************************

சேனனது பேட்டிக்கான எதிர்வினையின் முழுமை:

http://thesamnet.co.uk/?p=8578



வன்னி மக்களுக்கான தமிழக மக்களின் போராட்டமும் தமிழக அரசியலும். -CWI உறுப்பினர் சேனனுடன் உரையாடல் : ரி சோதிலிங்கம்அவர்களின் பேட்டிக்கு ஒரு குறிப்புதமிழ் நாட்டில் குரல் கொடுக்கின்ற சக்திகளைப் பற்றிய செய்தியை இங்கு தருவது பொருத்தமாக இருக்கும்.

தமிழ் நாட்டைப் பொறுத்தவரை ம.க.இ.கவினரும் அவர்களின் தோழமை அமைப்புக்கள் இருக்கின்றன.

செங்கொடி (மா.லெ)
தீப்பொறி பத்திரிகை (மா.லெ வினோத் மிஸ்ரா)

மக்கள் யுத்தக்குழு

இவ்வாறான மாக்சீயக் அமைப்புகள் இருக்கின்றன. இதில் குறிப்பாக ம.க.இ.க ஒப்பிட்டளவில் தமிழகத்தில் செல்வாக்கை கொண்டிருக்கின்றது. ம.க.இ.க வினர் தில்லையில் தீட்சதர்களை வெற்றிகொள்வதற்கு சிவனடியார் ஆறுமுகம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற கோவில் போராட்டங்களுக்கு பங்களித்தனர். இன்று வெற்றியும் பெற்றுள்ளனர்.

இவைகள் செய்தியாக


இவ்வாறு மா.லெ இருக்கையில் சிவபக்தரான ஆறுமுகம் ஐயாவிற்கு தெரிந்திருந்த மா.லெ அமைப்பினரை வர்க்கப் புரட்சியை விரும்பும் உறுப்பினருக்கு தெரியாததை இட்டு வேதனைப் பட வேண்டியிருக்கின்றது.
இவை தெரியாமல் விட்டதற்கு குறுங்குழுவாதமே காரணம் எனக் கொள்ள முடிகின்றது. புலிகள் எவ்வாறு குறுங்குழுவாதிகளாக சீரளிந்தார்கள் என வரலாறு நமக்குக் காட்டிள்ளது. அடுத்தபாதையை உருவாக்கிக் கொள்வதற்கு குறுங்குழுவாதமும் ஒரு காரணமாகின்றது. "புலம்பெயர் குழுக்களின் அரசியல்.

மூன்றாவது அணியும்; மூக்கணாங் கயிறும்." சிறிரங்கன் ஒரு அமைப்பு உருவாக்கம் பற்றிக் பேசுகின்ற போது. இவ்வாறான குழுங்குழுவாதம் எவ்வாறு பாதமானது என்பதை தெரியப்படுத்துவது அவசியமானதாகும்.


ம.க.இ.கவினர் தில்லை வெற்றியின் போது தாம் நடத்திய போராட்டத்திற்கு பா.மா.க, வி.சிறுத்தைகள், பெ.தி.க போன்ற நட்புச்சக்திகள் பங்குபற்றினர் என தமது அறிக்கைகள் செய்திகளில் தெரிவித்தனர். இவ்வாறான பண்பை நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.ம.க.இ.க நடத்திய ஈழ ஆதரவுப் போராட்டங்களை பலதளங்களில் சென்று பார்க்க முடியும். உதாரணத்திற்கு http://vinavu.wordpress.com/2009/03/13/eelam29/



-நாதன்

1 Kommentar:

Anonym hat gesagt…

பொன்பரப்பி on March 14, 2009 12:05 pm “மக்கள் கலை இலக்கிய கழகம்” என்பது, இலங்கைப் பிரச்சனையைப் பற்றி தமிழகம் அறிவதற்கு முன்பே, “தனித் தமிழ்நாடு” சுயநிர்ணய உரிமை அடிப்படையில் அமைய ஆயுத போராட்டத்தை முன்வைத்த, அடிப்படைக் கொண்டது. “சைவத் தமிருக்காக (சிதம்பரம்)” இவர்கள் போராடினார்கள் என்பது கேலிக் கூத்து. ஆந்திராவின், “பிபில்ஸ் வார் குரூப்” -தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி போன்றவை, இந்தியாவில் நிலவுடமை சமுதாயம் வலுவிழந்து, அற்றுப் போன சூழலில், அதனால் ஒடுக்கப் பட்டவர்கள், என்று கூறப்பட்டவர்களின் வெளிப்பாடு ஆகும். ஆனால், அதே நிலைக்கு தாழ்ந்துவிட்ட, நிலவுடைமையாளர்களுடன் சமரசம் செதுக் கொண்டதின் வெளிப்பாடே, ராஷ்டிரிய சமிதி. பா.மா.கா வும்,விடுதலைச் சிறுத்தைகளும், “சாதிக் கட்சிகள்”. ம.க.இ.க. வில், பெரும்பாண்மை உருப்பினர்கள், இந்த இரண்டு “சாதியினரை” சேர்ந்தவர்களே!. இவர்களிடையேயான முரண்பாடே, பொன்பரப்பி கிராமத்தில், தமிழரசனைக் காட்டிக் கொடுத்ததும், கொலையும். இப்பொது ஜே.வி.பி. போன்று, எஞ்சிய சிலர், தங்கள் சாதிக் காரர்களை பிடித்துக் கொண்டு இந்திய கம்யூனிஸ்டுகள் வழியில், பாராளுமன்ற “பவரை” பிடிக்க முயற்சிக்கிறார்கள். சிதம்பரம் தீட்சிதர்களுக்கும், செட்டியார்களுக்கும் கோயில் சொத்து தகராறு உள்ளது, இடையில், அடியாளாக செயல்பட்டு பணம் சேர்ப்பதே வி.சி., அதெல்லம் சரி பிழைக்கட்டும், இதில் “புலி வேசமும்”, “புலிப்பூச்சாண்டியும்தான்” வித்தியசமாக தெரிகிறது. நிலைமை மோசமானால் யாருக்கு எதிராக ஆயுதங்களை பிரயோகிக்க வேண்டும் என்பதில் தமிழக மக்கள் தெளிவாகவே உள்ளனர்.

nathan on March 14, 2009 6:45 pm Your comment is awaiting moderation. பொன்பரப்பி அவர்களே
1. ம.க.இ.க தனித்தமிழகம் கேட்டு எந்தக் காலத்திலும் போராடியது இல்லை.
2. இவர்கள் மறைந்த வினோத் மிஸ்ரா தலைமையில் இருந்து வந்த மா.லெ அணியில் இருந்து வந்தவர்கள்.
3. சிதம்பரம் கோவில் வரலாறு பற்றி தவறாக தெரிவித்துள்ளீர்கள்.
4தெலுங்கானா போராட்டம்> நக்சல்பாரிகளின் போராட்டத்தை போட்டு குழுப்புகின்றீர்கள். இவைகள் இரண்டும் வெவ்வேறு வரலாற்றைக் கொண்டது. நக்சல்பாரி புரட்சியாளர்கள் 1964 வங்கத்தில் நடைபெற்று தொடங்கியது. இது சர்வதேச புரட்சிகர அரசியல் பாதையை தெரிவு செய்வது பற்றிய முரண்பாடுகளில் இருந்து தொடங்கியது.
5. ம.க.இ.க தேர்தல் பாதையை நிராகரிப்பவர்கள்
6.விசிறுத்தைகள் “ம.க.இ.கவினர் தில்லை வெற்றியின் போது தாம் நடத்திய போராட்டத்திற்கு பா.மா.க> வி.சிறுத்தைகள்> பெ.தி.க போன்ற நட்புச்சக்திகள் பங்குபற்றினர் என தமது அறிக்கைகள் செய்திகளில் தெரிவித்தனர். இவ்வாறான பண்பை நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.” பற்றி நீங்கள் கூறும் கருதுக்கும் நான் அவர்கள் தில்லைப் போராட்டத்திற்கு பங்களிப்புச் செய்தது பற்றித்தான் குறிப்பிட்டிருந்தேன்.
ஆனால் அவர்கள் வகுப்புவாதிகள்> அரசியல் ஆதாயத்திற்காக ஈழப்பிரச்சனையை பயன்படுத்துபவர்கள். இவர்கள் விமர்சனம் எமக்குண்டு.

Kommentar veröffentlichen