Samstag, 28. Februar 2009

புலிகள் ஆயுதங்களைக் கீழே வைத்தால் அது துரோகமா?

தடைக்கற்கள்...


மனித அவலங்களை அரசியல் இருப்புக்காக பாசீஸ்டுகள் பயன்படுத்துவதை உலகின் வரலாற்றில் காணமுடிகின்றது. இவ்வழியே இலங்கை மண்ணிலும் மக்களின் அழிவை மூலதனமாக வைத்தே அரசியல் இருப்பை உறுதி செய்கின்றனர். மனிதத்தை இழந்த மானிடர்களுக்கு மக்களின் உதிரம் என்பது தமது இருப்பின் பசளையாக மாறுகின்ற போது மக்களின் உயிர்கள் என்பது நுண்ணுயிர்களை விட பெறுமதியற்றதாக இருக்கின்றது. யுத்தவெறியால் இழக்கப்படும உயிர்களுக்கு கணக்கு கொடுக்கும் நிலையை அனைத்து மக்கள் பிரிவினரது உதவியுடன் உருவாக்கப்பட வேண்டும். இவைகள் தான் நீண்ட கால குறிக்கோளாக செயற்பட வேண்டும். இழப்புக்கள் யுத்த வெறி மூலம் மறைக்கப்படுகின்றது.


இழப்புகள் தமிழ் மக்களை மாத்திரம் பாதிக்கவில்லை. இலங்கையின் அனைத்துப் பிரிவினரையும் பாதித்துள்ளது. சிங்கள உழைக்கும் மக்களின் வாரிசுகள் சில சொற்பசலுகைக்காக படைகளில் இழந்து தமது உயிரை விட்டுள்ளனர். இதனால் தமது சொந்தங்களை இழந்த சிங்கள தாய்தந்தையர் தமது பிள்ளைகளை இழந்தது தெரியாது இருக்கின்றனர். யுத்தவெற்றியானது தமது சொந்தங்களை தேடுவதை தற்காலிகமாக முயற்சிக்காதவர்களாக இருக்கின்றனர். யுத்த வெறி ஊட்டப்பட்ட நிலையில் இருக்கின்ற மனேநிலையானது சிங்கள உழைக்கும் வர்க்கம் தமது இழப்புக்களை பற்றி சிந்திக்க காலம் தாழ்த்தப்படுகின்றது. இழப்புக்களை உணர்வதற்கான காலம் தாழ்த்துவதை தவிர்த்துக் கொள்வதற்கு யுத்த நிறுத்தம் என்பது அவசியமானதாகும்.

வன்னியில் இடம்பெறும் அவலத்தை காரணம் காட்டி சர்வதேச நாடுகள் தலையிடும் நிலை
தோன்றியுள்ளதை அவதானிக்கு முடிகின்றது. இந்தத் தலையீடு எப்போ- எவ்வாறு
நடைபெறப்போகின்றது என்பதை ஆரூடம் கூற முடியும். மக்கள் காப்பற்றப்படலாம். இவை
அவசியமான முன்தேவையாகும். ஆனால் அதனைத் தொடர்ந்து நிகழும் நிகழ்வுகள் தான் தமிழ்
மக்களின் எதிர்காலத்தை தீர்மானிப்பதாக இருக்கப்போகின்றது.


நாம் சர்வதேச நாடுகளின் சூழ்ச்சியை எவ்வாறு முறியடிக்கப் போகின்றோம் என்பது பற்றி அறிவுறுத்தல் நம்மிடம் மிக முக்கியமான தேவையாகின்றது.



இவற்றிற்கான புரிதல் விடுதலைப்புலிகளிடம் உள்ளதா?;

மக்களிடம் உள்ளதா?;



ஏன்புலியெதிர்ப்பாளர்களிடம் இருக்கின்றதா?


சிங்கள மக்களை அணிதிரட்டுவதில் உள்ள சிக்கல்:



சிங்கள மக்கள் தம் இழப்பை அறியாத வண்ணம் யுத்த வெற்றிகள் அவர்களை இனப்பெருமிதத்தினுள் ஆழ்த்தி வைத்திருக்கின்றது. இதற்கு அடிப்படையாக பெரும்பான்மையினர் இனவாதக் கட்சிகளை ஆதரிப்பதும், வர்க்க உணர்வு அற்ற நிலையும் காரணமாகின்றது. இனங்களுக்கிடையேயான ஒற்றுமையை வலியுறுத்தவல்ல மார்க்சீய லெனினிய சிந்தனை கொண்ட கட்சியாக தம்மை சுயவிளம்பரம் செய்யும் ஜே.வி.பியானது இனவாதிகளாக சிதைந்துள்ளனர். சிறுபான்மையினரை யுத்த வெறிகொண்டு ஒடுக்கும் எதிரியை பெரும்பான்மை இனத்தின் பாட்டாளிவர்க்கத்தின் கடமையானது



அன்னியச் சக்திகளின் தலையீடு என்பது இன்று தவிர்க்க முடியாத நிலையை அடைந்துள்ளது.
இவற்றை எதிர்கொள்ளக் கூடிய கட்டமைப்பு என்பது இலங்கை நாட்டிலேயே இல்லை. இவ்வாறான
பிற்போக்குவாதிகளான ஜே.வி.பி, புலிகளினால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த துரதிஸ்ர
நிலையை மாற்றிக் கொள்வதற்கு குறுங்குழுவாத நிலைப்பாட்டை தகற்தெறிவது முக்கியமான
செயற்பாடாகும்.



தமிழ் நாட்டில் ஆளும் வர்க்கம் போராட்டத்தை திசைதிருப்பியிருந்தனர். அடக்குமுறைக்கு துணைபோகும் சக்திகள் அதனை எதிர்க்கும் சக்திகளின் கவனத்தை திசைதிருப்பியிருந்தனர். இவ்வாற ஒரு செயற்பாட்ட அடக்குமுறையாளனுக்கு எதிராக திருப்ப முடியாத நிலைதான் இலங்கையில் இருக்கின்றது.



ஏகபிரதிநிதி கோசம்:



சிறிலங்கா அரசின் யுத்தவெறியை எதிர்க்கொள்ள தேவையானது அனைத்து முற்போக்குவாதிகளிடமும், மனிதநேயவாதிகளிடமும் கடமை சுமத்தப்பட்டுள்ளது. யுத்த நிறுத்தத்திற்கான போராட்டமானது இலங்கை தேசத்தில் அனைத்து மக்கள் மத்தியில் இருந்தும் எதிர்ப்பு வெளியேற வேண்டும். யுத்த எதிர்ப்பிற்கான பரந்த போராட்டங்கள் எதனையும் நடத்தவில்லை அல்லது நடத்த முடியவில்லை. யாழில் நடைபெற்று வன்னி மக்களை விடுதலை செய்யும்படி இ.பி.டி.பியினரால் திரட்டப்பட்ட போராட்டமும், தமிழ் தேசிய கூட்டணியினரும் செய்த போராட்டத்தின் போது புலியெதிர்ப்பணியில் இருக்கும் ஈ.பி.ஆர்.எல்.எவ் (நாபா) யுத்த நிறுத்தத்தைக் கோரும் போராட்டத்தில் இணைந்து கொண்டனர். இவைகள் எல்லாம் புலிகளின் பினாமிகள் என்ற எல்லைக்குள் சுருங்கி விட்டது.








த.தே.கூட்டமைப்பினரினர் கோரிக்கைக்கு மக்கள் இசையவில்லை எனக் புலியெதிர்ப்பாளர்கள்
கூறுகின்றனர். ஆனால் ஒரு சுதந்திரமாக சிந்திக்கும் நிலை இருக்குமாயின்
தம்சகோதரர்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள கொடுமையை எதிர்க்காமல் மக்கள்
இருக்கமாட்டார்கள். மக்கள் தாம் தப்பிப்பிழைப்பதையேதான் முதன்மை குறிக்கோளாக
கொண்டுள்ளனர். இதனால் தான் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வாழும்
மக்களும், யாழில் வாழும்- கிழக்கில் வாழும், கொழும்பில் வாழும் மக்களும்
அரசுக்கும் அதன் அடிவருடிகளுக்கும் கட்டுப்பட்டு வாழ்கின்றனர்.

இன்று இளையோர் அமைப்பே போராட்டங்களை முன்னெடுக்கின்றனர். இளையோர் தேசியத்தலைவர் பிரபா, புலிகளின் தாகம் தமிழீழம், புலிகளே ஏகபிரதிநிதிகள் என்பதை வைத்தே இன்றைய அவலத்தைத் போக்க போராடுகின்றனர். இளையோருக்கேயுடைய போர்க்குணம் என்பது விறுவிறுப்பாக செயற்பட முடிகின்றது. இவர்களுக்கு ஏற்றவாறு செயற்பட முடியாது (இளையோரின் உழைப்பை உறுஞ்சும் தற்காலிகமாக தலைமைதாக்குவதில் பின்வாங்கியுள்ளது) இந்தச் சமூக பொருளாதார அமைப்பின் நிமித்தம் ஒதுங்கிவிட்டனர். இளையோரே அதிகாரவர்க்கத்தின் உழைப்புச் சக்திகளாக உருவாகியிருக்கின்றது.



இந்த இளையோரை எண்ணி ஆத்திரப்பட முடியவில்லை. அரசியல் உணர்வற்ற நிலையில் இருக்கும் மக்களை எண்ணி ஆத்திரப்பட முடியாதோ அவ்வாறுதான் இளையோர் மட்டிலும் நிலைப்பாடக இருக்கின்றது.


இளையோர் மத்தியில் இருந்துவரும் வெறுப்பான வார்த்தை என்னவெனில் எவ்வாறு
போராடினாலும் எந்தச் சக்தியும் எமது மக்களுக்கு சாதகமாக காரியமாற்றுகின்றார்கள்
இல்லையே என்பதாகும். புலிகளின் ஏகபிரதிநிதித்துவ கருத்தாக்கத்தை வைத்தே தமிழ்
மக்களுக்கான உரிமையை அடைவதற்கு குறுக்கீடாக அனைத்து சக்திகளும் ஈடுபடுவர் என்பதை
புலிகள் உணரவேண்டும். இவற்றை வெற்றிகொள்ளும் வகையில் தமது ஏகபிரதிநிதித்துவக்
கொள்கையில் மாற்றத்தை கொண்டுவர வேண்டும்.



ஆனால் இவற்றை உணராது ஜிரிவியினர் கண்ணீர் துளிகள் என்ற நிகழ்ச்சியின் மூலமாக தமிழ்மக்களிடையே பல தாக்கங்கள் உருவாகியிருக்கின்றன. தொலைக்காட்சியின் தாக்கம் அரசியல் ரீதியாக பார்க்கின்ற போது புலிகளின் அரசியல் போக்கை எவ்வித விமர்சனம் இல்லாது ஏற்றுக் கொள்கின்றார்கள். புலிகளைப் பற்றிய விமர்சனம் என்பது இன்றைய சோகமான நிகழ்வுகள் நடக்கும் காலமாகையால் அவற்றை தவிர்ப்பது நல்லது எனக் கூறுகின்றனர். தொலைக்காட்சியானது குட்டுச் சட்டிக்குள் குரிரை ஓடிக் கொள்ளும் நிலைப்பாட்டில் இருந்து செயற்படுகின்றார்கள்.


தொலைக்காட்சியை திறந்தால் உணர்ச்சிப் பாடல்கள்


தமிழர்களின் ஒற்றுமை!



அவலங்களை கொண்ட காட்சிகள்:


இழப்புக்களினால் ஏற்படும் சோகம் அதனால் ஏற்படும் இவர்களின் நோக்கமானது இரத்தம் கொதிக்க வேண்டும்;உணர்வுபெறவேண்டும்; அவலங்களை வெளிக்கொணரவேண்டும். இவைகள் நியாயமானவையாகத் தோன்றினாலும் இது எதிர்வினையாற்றுகின்றது. தமிழ்மக்களின் குடும்பங்களிடையே உளவியல் பிரச்சனை என்பது உருவெடுக்கின்றது. ஏற்கனவே வன்னியில் தமது உறவினரைப் பற்றிய ஏக்கத்திலும், மக்களின் அவலங்களை பார்த்தும், கேட்டும் மக்கள் துயரத்தில் இருக்கையில் உளவியல் பிரச்சனை என்பது சமூகம் தழுவிய பிரச்சனையாக மாறுகின்றது. இழப்புக்களை வைத்தே தமது இருப்பை உறுதி செய்யும் அரசியல் இருக்கையில் இன்னும் இன்றும் மக்களின் துன்பம் துயரத்தை மறுவுற்பத்தி செய்து கொண்டேதான் போகவேண்டும். குறிப்பாக இங்கு உருவாகியிருக்கும் ஆதிக்க வர்க்க சிந்தனாசக்தி கொண்டவர்கள் இன்னும் இன்றும் ஆபத்தானவர்களாவர்.


புலிகள் ஆயுதத்தை கீழே வைத்தல் என்பது துரோகமே :


இன்றைய யுத்தத்தினால் இழக்கப்படுவது புலிகளின் அடிமட்டப் போராளிகள், தேசபக்தர்கள்,புலிகளின் குடும்ப உறுப்பினர்கள், அங்கவீனமான போராளிகள் எனவும் பொதுமக்களில் நோயாளிகள்,வயோதிபர் என எந்த பேதம் இல்லாது பாதிக்கப்படும் மக்களே புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கின்றார்கள். இவர்களில் ஒரு பகுதியினர் அரசிடம் சரணடைந்து சாவதை விட புலிகளுடன் இருந்தே சாவோம் எனத் திடத்துடன் இருக்கும் பொதுமக்களும் இருக்கின்றார்கள். இந்த முடிவிற்கு காரணம் சிறிலங்கா அரசின் காரணமாக ஏற்பட்ட வடு என்பதை ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும்.

இவ்வாறு இருக்கையில் எதிரியிடம் போராளிகள் தமது சரணடைவது மாத்திரம் அல்ல.

எந்தப் போராளிகளையும் எந்த அடக்குமுறையாளர்களும் தண்டனை கொடுக்க அதிகாரம் இல்லை.
தமிழ் மக்கள் தமது பிரச்சனைகளை தமது இறைமைக்கு உட்பட்டதை அவர்களே செய்து முடிப்பர்.
புலிகளின் தவறுகள் கூட தமிழ் மக்கள் இறைமைக்கு உட்பட்ட நிலையில் விசாரணைகள் தமிழ்
மக்கள் முன்னிலையில் நடைபெற வேண்டும். இந்த நிலைப்பாட்டை தவறென்று கூறுபவர்கள்
ஈராக்கில் அமெரிக்க படை சென்று சதாமை கைது செய்த போது புலியெதிர்ப்பில் ஓரு
பகுதினர் சதாமின் ஆட்சியை கவிட்டதற்கும்,மரண தண்டனை வழங்கியதற்கும் எதிர்ப்புக்
குரலை தெரிவித்திருந்தன. இதுசரியான நிலைப்பாடு இவ்வாறான நிலைப்பாடே தமிழ் மக்களின்
போராட்ட சக்திகள் சம்பந்த பட்டமட்டில் பொருந்தும்.



ஆயுங்கள் உட்பட கையழிக்க முடியாது. இவைகள் ஒரு அரசியல் தீர்வு வரை முடக்கி வைத்திருக்க வேண்டும். நேப்பாளத்தில் நடைபெற்றது போன்றதான ஒரு ஒப்பந்தத்தின் கீழ் செயற்படுத்தலாம்.


புலிகள் ஆயுதங்களை கீழே வைத்தல் என்பது துரோகம் இவைதான் சரியான நிலைப்பாடாகும்.
இன்றைய நிலையில் அடுத்த கட்டத்திற்கு எவ்வாறு நகர்வது என்பதைப் பற்றிய பிரச்சினை
தான் எம்முன்னோக்கியிருக்கின்றது. இந்த நிலைப்பாடாது புலியெதிர்ப்பாளர்கள்;
ஒடுக்குமுறையாளர்களின் விருப்பத்திற்கு நேர்மாறானது.

இவை மக்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் ஒரு காரணியாகின்றது.

புலிகளின் அதிகாரவர்க்க நிர்வாக கட்டமைப்பு அழிக்கப்படுகின்றது. ஆனாலும் புலிகளில் உள்ள தேசபக்தர்கள்; அடிமட்டப்போராளிகள் எல்லோரும் எதிரிகளிடம் சரணடைகின்ற போது அவர்கள் துடைத்தெறியப்படுவார்கள். இவர்கள் சரணடைந்தாலும் இவர்களின் நலனைப் பாதுகாத்தக் கொள்ளத்தக்க ஒரு ஜனநாயக கட்டமைப்பு இல்லை. ஒரு ஜனநாயகக் கட்டமைப்பு என்பது ஒரு பேச்சுவார்த்தை மூலமாக உருவாக்கப்பட வேண்டியதாகும். இவற்றில் சாத்தியமானது சிறுபகுதியில் தன்னும் யுத்த நிறுத்தின் மூலம் இடைக்காலத்துக்கு வாழ விடுவதும். பேச்சுவார்த்தை நிகழ்ச்சி நிரலில் இந்த மக்களின் போராளிகளின்>ஈ மக்களின் எதிர்காலம் பற்றி பேசி முடிவெடுக்கலாம்.


தேவையானது :


*உடனடி யுத்த நிறுத்தம்



*நிவாரணம் வழங்கள் இவை நீண்டகால தேவையை இவர்களுக்கு உடனடியாகவே அவர்கள் தேவையை உறுதி செய்வது.



*இடம் பெயர்ந்தவர்கள் தத்தம் உறவுகளுடன் மீளவும் இணைந்து கொள்வது


*படைகளை தத்தம் இடங்களில் நிலைகொள்ளல்



*பேச்சுவார்த்தைக்கான நிகழ்ச்சி நிரலை தயாரிப்பது



*புலிகள் ஏக பிரதிநிதித்துவ கோட்பாட்டை கைவிடல் வேண்டும்



*எவரும் தமது ஆயுதங்களுடன் அரச அல்லது புலிகள் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தினுள் ஆயுதங்களுடன் செல்லக்கூடாது.


அரசியல் தீர்வை நோக்கி:


தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம்


தமிழ் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை இருக்கு என்பதை ஏற்றுக் கொள்ளல் மாத்திரம் அல்லாமல் முஸ்லீம் மலையக மக்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும்.

வட- கிழக்கு இணைப்பு

அனைத்து மக்களுக்கும் குடியுரிமை அளிக்கப்பட வேண்டும்.



இந்த அடிப்படையில் தீர்வுத் திட்டத்தை ஆராய்வதற்கு முன்னர் சிறுபான்மையினருக்கான ஒரு அரசியல் பேச்சுவார்த்தைக்கான பிரதிநிதிகளை சிறுபான்மையினரே தெரிவு செய்தல்வேண்டும். இதன் மூலம் இதில் அங்கம் பெறும் உறுப்பினர்கள் தற்காலிகமாக வடக்கு-கிழக்கிற்கு இடைக்காலத்தில் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளுக்கு பொறுப்பாக இருப்பர். இவர்களை தெரிவு செய்வதற்கான ஒரு தேர்தலை நடத்துவது.இந்தத் தேர்தலில் புலிகள் உட்பட அனைத்துப் பிரிவினரும் போட்டியிட உரிமை கொடுக்கப்பட வேண்டும். (புலிகளின் ஏகபிரதிநிதித்துவ கருத்தாக்கத்தை வைத்தே தமிழ் மக்களுக்கான உரிமையை அடைவதற்கு குறுக்கீடாக அனைத்து சக்திகளும் ஈடுபடுவர் என்பதை புலிகள் உணரவேண்டும். இவற்றை வெற்றிகொள்ளும் வகையில் தமது ஏகபிரதிநிதித்துவக் கொள்கையில் மாற்றத்தை கொண்டுவர வேண்டும்.)வடக்கு -கிழக்கு என்னும் போது தமிழ்பேசும் முஸ்லீம்களுக்கான ஒரு அலகு உருவாக்கப்பட்டு அவர்களுக்கான பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.



இவ்வாறு தமிழ் மக்களே தமது அரசியல் பேச்சுவார்த்தைக்கான சபையை உருவாக்கிக் கொள்வதன் மூலம் உள்நாட்டு ஆட்சியாளர்கள் மற்றும் வெளிநாட்டு ஆட்சியாளர்களின் எதேர்ச்சாதிகரமாக தீர்வை திணிப்பதை தவிர்க்க முடியும் .



-நாதன்.

Samstag, 21. Februar 2009

புலிகளின் அடுத்த நகர்வு?


கொலைக்களம்.



சிறிலங்கா அரசு தாக்குதல் தொடுத்த பின்னரான காலங்களில் ஏன் இன்றுவரை கூட புலிகள் பலமாக திருப்பித் தாக்குவார்கள் என்றே எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் அவ்வாறு நடைபெறவில்லை மாறாக புலிகள் பெரும் நிலப்பரப்புகளாக விட்டு விட்டு எவ்வித எதிர்ப்பையும் காட்டாது பின்வாங்கிச் சென்றனர். இன்று சில மைல்பரப்பளவில் பெரும் மக்களுக்கிடையே புலிகள் இருப்பதாகவும் இறுதித்தாக்குதலுக்கு தயாரா இருப்பதாகவும் புலிகளின் ஆய்வாளர்கள் எழுதிக் கொள்கின்றார்கள். "விடுதலைப்புலிகளை பொறுத்தவரையில் இராணுவத்தை புதுக்குடியிருப்பு நோக்கி வரவைத்துள்ளனர். புதுக்குடியிருப்பு சமருக்காக அவர்கள் பெருமளவான கனரக ஆயுதங்களையும் நகர்த்தியுள்ளனர். விடுதலைப்புலிகள் வசம் 10 பிரதான போர் டாங்கிகள், பல டசின் கவச வாகனங்கள், இரண்டு பல்குழல் உந்துகணை செலுத்திகள், 200 மோட்டார்கள், 60 பீரங்கிககள் உட்பட பெருமளவான கனரக ஆயுதங்கள் உள்ளதாக நம்பப்படுகின்றது. சிறீலங்கா வான்படையினரின் வான் தாக்குதல்களில் இருந்து அவற்றை பாதுகாத்து இறுதிச்சமருக்காக தயார்படுத்தி வைத்துள்ளனர்.


முன்னைய அனுபவங்களில் இருந்து தெரிந்து கொண்டது ஒன்று தான் அதாவது விடுதலைப்புலிகள்
தமது கனரக ஆயுதங்களை நிலையான இடத்தில் வைத்து தொடர்ந்து பயன்படுத்துவதில்லை.
உதாரணமாக டாங்கி ஒரு இடத்தில் இருந்து சூடுகளை வழங்கினால் அது சில நிமிடங்களில்
வேறு இடத்திற்கு நகர்ந்து விடும். விடுதலைப்புலிகள் கவசத்தாக்குதல் படை பிரிவை
ஆரம்பித்துள்ளதாக படைத்தரப்பு ஒத்துக்கொண்டிருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
விமானங்களின் வரவை கண்டறியும் நவீன ராடார் வசதிகளும் விடுதலைப்புலிகள் வசம் உண்டு.

எனவே தான் வான்படை திடீர் தாக்குதல்களுக்கு தாழ்வாக பறக்கும் எம்ஐ-24 மற்றும் எம்ஐ-35 ரக உலங்குவானூர்திகளை பயன்படுத்தி வருகின்றது. ஆனால் அவற்றின் தாக்குதல் எல்லைகள் மட்டுப்படுத்தப்பட்டவை.

முல்லைத்தீவும், சாலைப்பகுதியும் நீரேரிகளை உடைய குடா பகுதிகளை கொண்டவை அந்த நீரேரிகளை தற்காலிக அமைக்கப்பட்ட பாலங்கள் மூலம் கடந்து 55 ஆவது படையணியும், 59 ஆவது படையணியும் கனரக வாகனங்களை புதுக்குடியிருப்பு நோக்கி நகர்த்தி வருகின்றன. ஆனால் விடுதலைப்புலிகள் திடீர் தாக்குதலை நிகழ்த்தும் போது அவர்கள் இந்த கனரக வாகனங்களை கைவிட்டே ஓடவேண்டியிருக்கும். எடுத்து செல்வது கடினம். புதுக்குடியிருப்பின் கரையோர பகுதிகளை இரு படையணிகள் கைப்பற்ற முனைந்து வருகையில் ஏனைய 5 டிவிசன்களும் தெற்கு மற்றும் மேற்கு திசைகளில் நகர்ந்து வருகின்றன. "

http://www.infotamil.ch/ta/news.php?2bFSo4e0dvh5e0ecBG5N3b4OcJ74d2d0h3cc2GvS2d434US3b023Nq3e

ஈழப்போர் வரலாற்றில் திருப்புமுனையை ஏற்படுத்த போகும் சமர் [ திங்கட்கிழமை, 16 பெப்ரவரி 2009, 15:29 GMT+01:00 ] [நிலவரம்]

புலிகளின் அடுத்த நகர்வு?

புலிகளின் ஆயுத பலம் இவ்வளவு பலத்தை வைத்துக் கொண்டு புலிகள் ஏன் மக்களை பாதுகாக்கவில்லை? இன்றுவரை கூட புலிகள் பலமாக திருப்பித் தாக்குவார்கள் என்றே எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் அழிவு தொடர்கின்றது. மக்களின் நலனை அக்கறையிருந்திருந்தால் கனரக ஆயுதங்களை பாவித்திருப்பார்கள். இது சிறுபிள்ளைத் தனமான கருத்தாகக் கூட எள்ளிநகையாடலாம். இதில்


*தொடர்ச்சியான ஆயுதவழிபாடு


*தலைமையைக் காப்பாற்றுவது


*மக்களின் இழப்பைக் காட்டி அனுதாபத்தை பெறுவது




மக்களின் இழப்புக்கள் மூலம் சர்வதேச அங்கீகாரம் பெறுவது அதாவது கொசவோ அல்லது கிழக்குதிமோர் போன்று தமிழீழத்திற்கான அங்கீகாரம் கிடைக்கும் என புலிகளின் தலைமை எண்ணியிருக்கலாம். ஏன் இன்று இழப்பின் பின்னராக கொடுக்கப்படுகின்ற சர்வதேச கவனம் கூட தம்மை நோக்கிய பார்வையை திருப்பியுள்ளதாகவே புலிகள் கருதுகின்றனர்.

மேலும் புலிகளில் உள்ள உறுப்பினர் வலுவைப் பற்றி "விடுதலைப்புலிகளின் பகுதியில் ஏறத்தாள 300இ000 மக்கள் வசிக்கின்றனர். அவர்களில் 10 விகிதமானவர்கள் போரிடும் தகமை உடையவாகள் என வைத்து கொண்டால் கூட அவர்களின் பலம் 30இ000 இனால் அதிகரித்துவிடும். விடுதலைப்புலிகளின் வசம் ஏற்கனவே 15இ000 பயிற்றப்பட்ட போரளிகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே அவர்களின் பலம் 45இ000 ஆக அதிகரிக்கலாம். விடுதலைப்புலிகளின் செயற்திறன் மிகவும் அதிகம்.

போர் நிறுத்தம் நடைமுறையில் இருந்த 6 ஆண்டு காலப்பகுதியில் அவர்கள் வீதிகளையும்இ
கட்டடங்களையும் கட்டிக்கொண்டு இருந்திருப்பார்களா அல்லது மக்கள் பாதுகாப்பு
படையையும்இ தமது தாக்குதல் படையணிகளையும் கட்டி எழுப்பியிருப்பார்களா என்பதை
நீங்களே தீர்மானித்து கொள்ளுங்கள். " ஆக இவர்கள் இங்கு கூறவருவது என்னவெனில்
நம்புங்கள் நம்புங்கள் தமிழீழ நாளை கிடைக்கும் என்பதையே.



இழப்பை காட்டி மக்களின் ஆதரவைப் பெறுவதே புலிகளின் கடந்த 25 வருடகால யுத்த தந்திரமாகும். சிறுசிறுதாக்குதல்கள் மூலமாக படைகளைக் கொல்வதும் தமது சகாக்களை இழந்த இராணுவம் வெறித்தாக்குதலை மேற்கொள்வதும் பின்னர் இதனால் ஏற்படும் கெடுபிடிகளினால் விரக்தியுற்ற இளைஞர்கள் இயக்கங்களில் சேர வழிவகுத்ததது. மக்களும் இராணுவத்தை வெறுக்கத் தொடங்கினர். அரசியல் ரீதியாக மக்களை திரட்டுவது பற்றிய எவ்வித முனைப்பும் புலிகளுக்கு இருந்ததில்லை. ஆனால் ஏதோ தாம் அரசியல் நடத்துதவாக காட்டிக் கொண்டாலும் எல்லாம் தலைவருக்கு தெரியும்> தலைவர் பார்த்துக் கொள்வார்,எல்லாம் தலைவரின் வழிகாட்டலில் தான் நடைபெறுகின்றது. இவ்வாறு ஒரு வெற்று மாயையை புலிகளின் தலைவரைச் சுற்றியே புலிகளின் அரசியல் அறிவு கட்டமைக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்களின் உரிமைக்கான தேவை என்பது இருந்த போதும் ஈழப்போராட்டம் என்பது தன்னியல்பாக வளர்ச்சியடைந்தது அல்ல. 1983 பின்னரான நிகழ்வில் இந்தியா மற்றும் ஏகாதிபத்திய சக்திகளின் தலையீடாது. இயக்கங்களை வீங்கி வெடிக்கச் செய்தது. 1987 பின்பகுதியில் இந்தியராணுவத்துடனான மோதல்கள் கூட புலிகளை வளர்த்தே விட்டது. அரசியல் கருத்து ரீதியாக புலிகள் இந்திய இராணுவ வெளியேற்றத்திற்கான வெகுஜன போராட்ட கட்டமைப்பை உருவாக்கவில்லை. இழப்புக்களை ஏற்படுத்தியே புலிகள் மக்கள் தம்பக்கம் திருப்பினர். இந்திய இராணுவம் செய்த கொலைகளுக்கு ஈடாக புலிகளும் கொலைகளைச் செய்தனர். பழிகளை மற்றவர்கள் மீது போட்டனர். இதன் பொருள் இந்தக் காலத்தில் இருந்த நிலவரத்தில் அப்பழுக்கற்ற சக்திகள் இருந்ததாக கூற முடியாது. அன்றைய காலத்தில் இருந்த சக்திகள் அனைத்தும் ஏதோவொரு வகையில் அனைத்துச் சக்திகளின் கைகளிலும் இரத்தம் தோய்ந்தே இருந்தது.


வழமையாக இவ்வாறு ஒரு பகுதியை இராணுவம் நெருக்குதல் கொடுத்தால் வேறுபகுதியில் அரசபடைகளின் கவனத்தை திசை திருப்புவதற்குகாக தாக்குதல்களை நடத்துவர். ஆனால் கிளிநொச்சி படைகள் வசம் வரும் வரையில் பாரிய திசைதிருப்பும் தாக்குதல்களை நடத்தவேயில்லை. இனிவருங்காலத்தில் வரவு செலவை கணக்கை காட்டுகின்ற போது எவ்வளவு தமிழ் மக்கள் படைகளால் கொல்லப்பட்டார்கள் என்பது மறைக்கப்படும் அல்லது மறக்கப்படும். ஆனால் எவ்வளவு இராணுவச் சடலங்கள் தென்னிலங்கைக்கு அனுப்பப்பட்டது. எவ்வளவு ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டது என்பது பற்றிய வரவுதான் பிரச்சாரத்தின் போது காட்டப்படும். இவை ஒன்றும் கற்பனை அல்ல உதாரணத்திற்கு எடுத்துக் கொள்வோம் சீலன் ஆனந்தன் ஆகிய இருவர் சுடப்பட்டு இறக்கின்றார்கள். அந்தவேளை இறந்தபோராளிகளின் துப்பாக்கியை பக்குவமாக தலைமையிடம் ஒப்படைக்கும் படி சீலன் கட்டளை இட்டதாக பிரச்சாரம் செய்யப்பட்டது. விக்ரர் கொலை செய்யப்பட்ட வேளையில் இராணுவத்தின் பிணங்களும்> தளபாடங்களும் முன்வைக்கப்பட்டு கொலை மறைக்கப்பட்டது. இவ்வாறு பலநூறு சம்பவங்களை குறிப்பிடலாம். இன்று புலிகளின் தலைமையும்ஈ முழு உறுப்பினர்களும் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் இருப்பதாக கொள்ள முடியாது. இவ்வளவு நெருக்கமான இடத்தினுள் பிரபாகரன் இருப்பாராயின் அவர் இருக்கும் இடம் எதிரிகளுக்கு தெரிய வந்திருக்கும். இவ்வாறு நெருக்கமான இடத்தினுள் பிரபா இருப்பதற்கு சந்தர்ப்பம் இல்லை. இவ்வாறு இருக்கும் இடம் தெரியும் பட்சத்தில் பிரபா இருக்கும் இடம் நோக்கியே விண்வெளிப் படங்களின் உதவியுடன் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கும்.

ஆனால்,

அரசைப் பொறுத்தவரையில் தற்கொலைத் தாக்குதலில் இருந்து தப்பிய
சரத்பொன்சேகா,ராஜபட்சே ஆகியோரின் பழிவாங்கும் படலம் இந்திய ஆழும் வர்க்கத்தின்
ஆசியுடன் நடத்தப்படுகின்றது. அரசிற்கு தெரியும் புலிகளின் கட்டுப்பாட்டுப்
பகுதிக்குள் புலிகளின் தலைவர் இல்லை என்பதும் எவ்வாறெனினும் இலங்கை முழுவதுமான
நகரங்களை தமது கட்டுப்பாட்டினுள் கொண்டு வருதே அரச பயங்கரவாதிகளின் எண்ணமாக
இருக்கின்றது. இதற்கு விலையாக தமிழ் மக்களின் உயிர்கள் இருப்பது பற்றி எந்தக்
கவலையும் இல்லை.


ஆனால் தமிழ் மக்களின் இழப்புக்கள் ஏற்படுத்துவதன் மூலமே புலிகள் தமது இருப்பை ஸ்திரப்படுத்துகின்றனர். புலிகள் மக்களை சுதந்திரமாக இராணுவக் கட்டுப்பாட்டினுள் செல்ல விரும்பியவர்களை செல்ல விட்டிருக்கலாம். அவ்வாறு செய்யவில்லை ஆயுதங்களையும் தமது தலைவர்களையும் காப்பாற்ற வேண்டி இன்றைய கொலைகளத்தை புலிகள் உருவாக்கியிருக்கின்றார்கள்.

புலகளின் ஊடகங்கள்மக்களை மூளைச்சலவை செய்வதில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன. "எமது மக்களின் அரசியல் அறிவு மறைக்கப்பட்டு இழப்புக்களை வைத்தே தமது இருப்பை பேணப்படுகின்றது.

இன்றைய நிலையில் பிராந்திய வல்லரசின்; மேற்கு நாடுகளின் அரசியல் நிகழ்ச்சி நிரலானது
பொருளாதார நலன்கருதி வரையப்பட்டதாகும். இவற்றை அம்பலப்படுத்தி மக்களை அணிதிரட்டவல்
இன்றைய அரசியல் நிகழ்வை புரியத்தக்க வகையில் அரசியல் ரீதியாக பலம் கொண்ட ஒரு
அமைப்பும் எம்மத்தியில் வேர் ஊன்ற முடியவில்லை.


இவ்வாறு மூளைச் சலவை செய்யப்படுகின்ற மக்களிடம் இருப்பது கோபம்; உலக நடப்பை புரிந்து கொள்ளக் கூடிய அறிவில்லாத நிலை. இந்த நிலையானது விரக்தியை உருவாக்கின்றது. இதனால் மேலும் மேலும் பாசீசம் தனது இருப்பை நிலைநிறுத்திக் கொள்ள சந்தர்ப்பம் கொடுக்கப்படுகின்றது. ஏனெனில் இழக்கப்படுவது எமது சகோதரர் அம்மா அப்பா; மாமா மாமி; சின்னம்மா பெரியம்மா; சித்தப்பா பெரியப்பா. ஆக இழப்புக்குள் உள்ளாவது எமது இரத்தம் இவ்வாறு நித்தம் இரத்தம் சிந்துகின்ற போது மற்றைய விளக்கங்கள் எவையும் நியாயம் அற்றதாக போகின்றது.

வரலாற்றை தவிர்த்த போக்கு இதனால் தான் இன்று இளையோரை போராட்டத்திற்கு தலைமை தாங்கப்படுகின்றார்கள் இதனால் ஏதோ முதிர்ந்தவர்கள் தாமாக வழியை விடவில்லை மாறாக முன்னையவர்களின் உழைப்பை குறிப்பிட்ட ஒரு அதிகாரவர்க்கம் புலம்பெயர்ந்த நாட்டில் உருவாக்கப்பட்டு அவர்களின் மேற்பார்வையில் கீழ் இன்றைய இளையவர்கள் அதிகார வர்க்கத்திற்கு ஊழியம் செய்ய மறுவுற்பத்தி செய்யப்பட்டிருக்கின்றார்கள். இவைகள் தேசத்தில் இருந்து சிந்தப்படும் உதிரத்தை மூலதனமாகக் கொண்டு உரம் போடப்படுகின்றது.இன்றைய மக்களிடத்தில் தோன்றியிருப்பது அரசியல் விழிப்புணர்வு அல்ல. இழப்புக்களினால் ஏற்பட்ட தன்னெழுச்சியான இரக்க உணர்வு இதில் இருந்து பெறப்படும் ஒவ்வொரு சிறிய சக்தியும் பாசீசத்தினை உயிரூட்டவல்ல விழைபொருட்களே."

புலியெதிர்ப்பாளர்கள்:

புலிகள் மற்றையது புலியெதிர்ப்பணி என இருதுருவங்கள் இருக்கின்றன. இவர்களைத் தவிர்த்தி தனியே ஒரு நிலைப்பாடு எடுக்க முடியாதா? அல்லது அவ்வாறு எடுப்பது தறவா? ஏனெனில் இன்றைக்கு மக்களை கொல்பவர்கள் அல்லது கொல்ல துணையோகின்றவர்கள் எல்லோரும் தத்தம் பக்கம் நிற்க வேண்டும் என்றே வலியுறுத்துகின்றனர்;. இவற்றை தவர்த்தி இருப்பவர்கள் சுதந்திரமாக இருக்க முடியாது என்பதே யதார்த்தம்.புலிகள் சகோதரப்படுகொலையை மேற்கொண்டு தமது தலைமைதான் தமிழ் மக்களின் ஏகதலைமை என வலிந்துதினிக்கப்பட்டது. கருத்துத் திணிப்பானது சமூகத்தில் சுதந்திரமாக கருத்துருவாக்கத்திற்கு சாவுமணி அடித்ததது. இதன் விழைவு இன்று புலிகள் முடக்கப்பட்ட நிலையில் மக்கள் சுதந்திரமாக ஒரு போராட்டத்தை நடத்த முடியாத நிலையில் தான் இருக்கின்றனர். இந்த அவலத்திற்கு புலிகளே பெரும்பொறுப்பாகும். அவ்வாறு யாரென்றாலும் மக்கள் நலனில் இருந்து கருத்துக் கூறுமிடத்தில் ஏதோவொரு துருவத்தினுள் முத்திரை குத்தப்பட்டு சேறடிக்கப்படுகின்றது. புலிகள் எவ்வாறு ஏகம் என்ற ஒன்றை நிலையில் மாற்றுக்கருத்துக் கொண்டோரை அரசியல் அரங்கில் இருந்து அன்னியப்படுத்தினார்களோ இன்று புலியெதிர்ப்பாளர்கள் மக்கள் நலன் கொண்ட எந்தச் செயற்பாடும் புலிகளுக்கு சார்பானது எனக்கூறுகின்றது.


"பாசிசப்புலிகளும் தவறு, பேரினவாதமும் தவறு என்று சீமையில் இருந்து கொண்டு
சித்தாந்தம் பேசும் இவர்கள் தாயகம் சென்று தனித்துவமான ஒரு அமைப்பை கட்டியெழுப்ப
வேண்டியதுதானே. பாசிசப்புலிகளையும், பேரினவாதத்தையும் எதிர்த்து வடக்கு கிழக்கில்
செயற்பட எண்ணியிருந்த சோசலிச சமத்துவக்கட்சி உறுப்பினர்கள் எதிர் கொண்ட மரண
அச்சுறுத்தலை இவர்கள் மறந்துதான் போவார்களா?... அவர்களது முயற்சிகளை பாசிசப்புலிகள்
ஒட்ட நறுக்கிஇ அந்த அமைப்பின் உறுப்பினர்களை கொன்றொழித்த வரலாறுகளை இவர்கள்
மறந்திருக்க மாட்டார்கள்.

"hவவி://றறற.pயயசஎயi.நெவ/pயநப.002002.hவஅ" இனவாத அரசை ஏற்றுக் கொள்ளும்படி புலியெதிர்ப்பாளர்கள் கூறுகின்றனர். ஓரு விடுதலை அமைப்பு என்பது சமூகத்தில் இருந்து தனது தேவையை நிவர்த்திசெய்யும் பொருட்டு உருவாகப்படுவது. அதனை புலம்பெயர்மண்ணில் இருந்து ஒன்றை உருவாக்க முடியாது. வரலாற்றின் தேவையின் நிமிர்த்தம் உருவாக்கப்படுவதற்கு அல்லது தலைமை தாங்குவதற்கு வானத்தில் இருந்து இறங்க வேண்டிய தேவையில்லை.

தமிழ் மக்களுக்கான எதிர்கால தீர்வு எவ்வாறு இருக்க வேண்டும் இதனை
புலியெதிர்ப்பாளர்கள் முன்வைப்பார்களா? அரசு என்ன தீர்வுத் திட்டத்தை
வைத்திருக்கின்றது என்பதை பார்க்கும் முன். புலியெதிர்ப்பாளர்கள் எவ்வகையாக தீர்வை
வைத்திருக்கின்றனர் என்பது மக்களுக்கு தேவையானதாகும்.

"அரைகுறைத்தீர்வுகளை ஏற்பதா என்று நீங்கள் கூறுகின்ற ஒவ்வொரு சந்தர்ப்பங்களின் போதும் யுத்தத்தை முடிவிற்கு கொண்டு வருவதற்கு மாறாக யுத்தத்தை நீங்களே ஊக்குவித்தும் வந்திருக்கிறீர்கள் என்பது தெளிவாகின்றது. " சரி கிழக்கு மாகாண அனுபவத்தை எடுத்துக் கொள்ளுங்கள் பிள்ளையான் வரி, மாகாணசபையின் பொலீஸ்படை வேண்டும் எனக் கோரிக்கை இட்டார். இதனை சிறிலங்கா அரசு ஏற்றுக் கொண்டதா? இதையேதான் வரதராஸ பெருமாள் 1990களில் கூறிவிட்டு கப்பலில் சென்றார். (வட,கிழக்கு சபை கலைப்பிற்கு புலிகள் காரணம் ) ஆக எதிரியானவன் தான் ஒடுக்கும் மக்களுக்கு எவ்வாறு நியாயமான தீர்வை முன்வைக்கும் என நம்பமுடிகின்றது.

கிழக்கு மாகாணசபைக்கு அதிகாரம் கொடுக்க வேண்டும் என கிழக்கின்
விடிவெள்ளிகளினால் போராட முடிந்ததா?

இதற்கு பதிலாக என்ன செய்கின்றனர். கிழக்கின் மானமிகுதலைவர் இனவாதிகளுடன் சங்கமமாகின்றார். ஒரே தலைவன் ஒரே கட்சி கூறிவிட்டு "ஃலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொள்வது தொடர்பில் இந்த வாரத்திற்குள் அறிவிக்கவிருப்பதாக ரி.எம்.வி.பி தலைவர் வி.முரளிதரன் எம்.பி தெரிவித்துள்ளார். பிராந்திய அடிப்படையில் அரசியல் கட்சிகளை வைத்திருப்பதை நான் விரும்பவில்லை. தேசிய அடிப்படையில் ஓர் அரசியலுக்குள் எமது மக்களை நுழைத்து அதற்கான அங்கீகாரத்தை அவர்களுக்கு பெற்றுக்கொடுக்க வேண்டும். எனவே இந்நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதியுடன் உரையாடி மேற்படி தீhமானத்தை எடுத்துள்ளோம். இது எமது மக்களுக்கு எதிர்காலத்தில் சிறந்த வளங்களைப் பெற்றுக் கொடுப்பதற்கான வாய்ப்பாக அமையுமெனவும் கருதுகின்றேன். அதேநேரத்தில் இனப்பிரச்சினை தீர்ப்பதற்கு இதுவொரு சிறந்த முன்னுதாரண நடவடிக்கையாக விளங்க வேண்டுமென்பதையும் கேட்டுக் கொள்கிறேன் என்றும் முரளிதரன் எம்.பி தெரிவித்துள்ளார். இதேவேளை தமது அமைப்பிலுள்ள சுமார் 1300பேர் படைகளில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், 200பேர் வரையில் படைகளில் இணைக்கப்பட்டு தமது முதல்மாத வேதனத்தைப் பெற்றிருப்பதாகவும் முரளிதரன் எம்.பி குறிப்பிட்டுள்ளார்." கிழக்கின் விடிவெள்ளிகள் தமது கதிரைகளை பாதுகாப்பதில் அண்ணன் பிரபாவிற்கு ஈடாக செயற்படுகின்றனர்.






புலிகளினால் மாத்திரம் அல்ல மற்றைய கட்சிகளும் ஒருவருக்கொருவர் குழிதோண்டிக் கொண்டுதான் இருக்கின்றார்கள். "தலையில் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்து காயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சைகள் பலனளிக்காத நிலையில் இவர் உயிரிழந்துள்ளார். இப்படுகொலை அண்மைக்காலமாக கிழக்கு மாகாண முதலமைச்சருக்கும் அவருடன் இணைந்து அரசியல் நடாத்தும் உறுப்பினர்களுக்கும் எதிராக செயற்படும் கருணா அம்மானின் ஆதரவாளர்களாலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மட்டுநகர் தகவல்கள் தெரிவிக்கின்றன. " வன்னியில் தமிழ் மக்கள் தமது சந்ததிகளை இழந்து கொண்டிருக்கின்றார்கள். இவ்வேளையில் களையெடுப்புக்களை தமிழ்கட்சிகளே தமக்கிடையே செய்து கொண்டிருக்கின்றன. புலியெதிர்ப்பணியும் மக்களை சுயமாக சிந்திக்கவிடாது மரணபயத்தை ஏற்படுத்துகின்றனர். கடத்தல், கப்பம், காணாமல்போதல் என்ற நிகழ்வுகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. வன்னி மக்களைபுலிகள் விடுவிக்க வேண்டும் என்று ஊர்வலம் யாழில் நடைபெற்றது. அந்த ஊர்வலம் சுதந்திரமாக அணிதிரட்டப்பட்டது எனக் கொள்ள முடியுமா? அங்கு உள்ளவர்கள் இ.பி.டி.பி அல்லது இராணுத்தின் தயவுடனேயே அங்கே நின்மதியாக இருக்க முடியும். இதன் நிர்ப்பந்தத்தால் மக்கள் ஊர்வலத்திற்கு வந்திருப்பர். இவ்வாறே புலிகளின் கட்டுப்பாட்டினுள் இருப்பவர்களும் புலிகளுக்கு இசைந்தே நடக்க வேண்டிய நிலை இருக்கின்றது. எவ்வித அழுத்தங்கள் இல்லாது தாமாக தேர்வு செய்யக் கூடிய உரிமையை மக்களுக்கு அனைவரும் கொடுக்க வேண்டும்.புலியெதிர்ப்பு இணையங்கள்:
புலியெதிர்ப்பு இணையங்கள் அரசிற்கு விசுவாசமாக நடப்பதில் அவர்களை விட்டால் யாரும் இல்லாத வகையில் சிறிலங்கா அரசிற்கு பிரச்சார பீரங்கிகளாகச் செயற்படுகின்றனர். இவர்களைப் பொறுத்தவரையில் புலியை யார் எதிர்க்கின்றார்களோ அவர்கள் எல்லோரும் நண்பர்கள். இவர்களுக்கு சோ, ஜெயலலிதா,இந்துராம், தமிழககாங்கிரஸ் எடுபிடிகள்,வணக்கத்துக்குரிய சுப்பிரமணிசாமி ஈடாக பலரும் இவர்களின் நட்புவட்டமாக இருக்கின்றது. சில தலையங்கங்களையும், செய்திகளையும் பார்ப்போம்.
நீதிக்குத் தலைகுனிவு!

உயர் நீதிமன்ற நீதிபதிகளின் முன்னால் சுப்பிரமணியன் சுவாமி வழக்கறிஞர்களால் தாக்கப்பட்ட சம்பவத்தைப் பார்க்கும்போதுஇ இங்கே நடப்பது மக்களாட்சிதானாஇ இது நல்லாட்சியா என்கிற கேள்வியை எழுப்பாமல் இருக்க முடியவில்லை.

தற்கொலைஇ தமிழ்ச் சமூகம்இ தமிழீழப்போராட்டம்!
சீமான் கைது எப்போது? தமிழக அரசு பதில்
மக்கள் ரிவிக்கு தடை என்று மக்கள் ரிவி கிளப்பிவிட்ட புரளி

விடுவிக்கப்படாத பகுதியிலிருந்து வெளியேறும் மக்கள் மீது புலிகள் துப்பாக்கிப் பிரயோகம் : ஐ.நா. பிரதிநிதி ஜோன் ஹோம்ஸ் குற்றச்சாட்டு இந்தியாவையும்இ பிரித்தானியாவையும் சாதகமாகக் கையாண்ட இலங்கை இலங்கையில் போரில் சிக்குண்டுள்ள மக்களின் அவல நிலை குறித்து ஐ.நா. கவலை: விடுதலைப்புலிகள் மீது கடும் கண்டனம்hவவி://றறற.அயபயஎயடல.உழஅ/தமிழகப் பயங்கரவாதிகளான விடுதலை சிறுத்தைகள் உறுப்பினர் தீக்குளித்து மரணம்; கலெக்டர் அலுவலகம் முன் பரபரப்பு சம்பவம்

இவ்வாறு இவர்களுக்கான கருத்து புலியை எதிர்ப்பதும்,புலியை எதிர்க்கின்ற அனைவரையும் தமது ஒத்த கருத்துக்குரியவர்களாக இணைத்துக் கொள்வதாகும். இவ்வாறே தீபம் தொலைக்காட்சிக்கு வழங்கிய பேட்டியில் சிவாஜிலிங்கம் தெரிவித்ததாவது:

கிறிஸ்தவர்கள் தாக்கப்படுகின்றார்கள் என கிறிஸ்தவ
அமைப்புக்களிடமும்,இந்துக்கள்தாக்கப்படுகின்றார்கள் என பா.ஜ.க தலைவர்
அத்வானியிடமும் முறையிட்டதாக கூறினார் என்றும் இதன் மூலம் ஈழமக்களுக்கு ஆதரவான
சக்திகளை திரட்ட முடியும் எனவும் கூறினார். பா.ஜ.க மதவாதக் கட்சியாகும். இவர்களின்
எந்தச் செயற்பாடும் தேர்தலை சார்ந்ததாகவே இருக்கும். இவர்கள் ஆட்சிப் பொறுப்பில்
இருந்தால் கூட இன்றைக்கு என்ன நிலை இருக்கின்றதோ அவ்வாறான நிலைதான்
இருந்திருக்கும். இவர்கள் எதிரியார்? நண்பர் யார் என்று திடமாக இருக்காது
சந்தர்ப்பவாதமாக நடந்து கொள்கின்றனர்.


பா.ஜ.க ஒரு ஆழும் வர்க்கத்தை சேர்ந்த ஒரு கட்சியாகும் இவர்கள் எவ்வாறு ஒரு தேசிய இனத்திற்கு ஆதரவாக செயற்பட முடியும். இந்தியாவில் இருக்கின்ற தேசிய இனங்களின் உரிமையை இந்த மதவாதிகள் தயாராக இருக்கின்றார்களா? தமது நாட்டிலே உரிமைக்காக போராடும் மக்கள் மீது கரிசனை கொள்ளாத அமைப்புக்கள் எமது விடுதலைகக்காக குரல் கொடுப்பதானது அவர்களுடைய அரசியல்நாடகத்திற்கு நாம் அமைத்துக் கொடுக்கும் களமாகும். அரசியல் நடிகர்கள் களங்கள் கிடைக்கும் போது வீரவசனம் பேசிவிட்டுப் போய்விடுவர். நடைமுறையில் இவர்கள் எல்லோரும் ஒடுக்குமுறையாளர்கள் தான்.

இவ்வாறாக தமிழகபாசீஸ்டுகள் எல்லோரும் புலிகளை எதிர்க்கின்றார்கள் என்பதற்காக
புலியெதிர்ப்பாளர்களின் நண்பர்களாக இருக்கின்றனர். இந்த அரசியல் கோமாளிகளின்
கருத்துக்களை புலியெதிர்ப்பை நிலைநிறுத்துவதற்காக துணைக்கு அழைக்கப்படுகின்றனர்.
சோ,ஜெயலலிதா,இந்துராம், தமிழககாங்கிரஸ் எடுபிடிகள்,வணக்கத்துக்குரிய
சுப்பிரமணிசாமி மனித குல விரோதிகளாக இருக்கின்றார்கள் இவர்களிடம் இருப்பது
சாதியத்திமிருடன் கூடிய ஆணவக் கருத்துக்கள்.


புதிய பாதை ஒன்று இல்லையா?

இன்றைய நிலையில் எந்தச் சக்திகளின் பின்னால் செல்லமுடியதா நிலைதான் இருக்கின்றது. தமிழர்களே தமிழர்களே இறுதிப் போராட்டத்திற்கு வாருங்கள் என்ற அழைப்பையும் ஏற்றுக் கொள்ள முடியாதுள்ளது. இவர்கள் போடும் யுத்தவெறியில் இருந்து மக்களை காப்பாற்றுவது தான் முதன்மையான கடமையாகும். இனவெறி அரசின் பேச்சாளர் கூறிவிட்டார் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசம் எல்லாம் நியாயப்படுத்தப்பட்ட தாக்குதல் தளங்கள் என. இவ்வாறு இருக்கையில் புலிகள் தமது தலைமையை முதலில் காப்பாற்றியிருப்பார்கள். ஆனால் இங்கு அகப்பட்டிருக்கும் மக்கள் அங்கு இருப்பதற்கு பலகாரணங்கள் இருக்கின்றன. புலிகளின் நெருங்கிய உறவினர்கள்> காயப்பட்ட போராளிகள்> தடுத்துவைக்கப்பட்ட மக்கள்> இராணுவத்திடம் சென்று சாவதை விட புலியின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் இருந்துவிட்டு போவோம் என மக்கள் இருக்கத்தான் செய்வார்கள். புலிகளின் அடிமட்டப் போராளிகளைக் காப்பதும் முக்கியமான கடமையாகும்.

இன்றைய ஊடகங்கள் எல்லாம் எதிர்நிலைக்குச் செல்கின்ற வழிமுறைகளில் தான் பிரச்சாரங்களை செய்கின்றன. மக்களில் பலவிதமான நிலையில் உள்ளவர்கள் இருக்கின்றார்கள்.

"தமிழ் மக்களை எடுத்துக் கொண்டால் பல்வேறுபட்ட அனுபவங்களையும்; சோகம்; பலதுன்ப துயங்களினால் ஏற்பட்ட வடுவென்பது மக்களிடையே ஆழ வேர் ஊண்றியுள்ளது. இவ்வகையான கசப்பான உணர்வு என்பது அனைத்து மக்கள் பிரிவினரிடையேயும் இருக்கின்றது. இந்த சகப்புணர்வை தீர்ப்பது என்பது நீண்ட செயற்பாடுகள் மூலமாகவே சாத்தியமாகும்.



பிரதானமாக தமிழ் மக்களிடையே இருக்கின்ற புலியெதிர்ப்பாளர்களை எடுத்துக் கொள்வோம் அல்லதுஅரசின் மீதுள்ள நம்பிக்கையீனத்தால் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தினுள் இருக்கின்ற மக்களை எடுத்துக் கொள்வோம் அல்லது
முஸ்லீம் மக்களை எடுத்துக் கொள்வோம்
சிங்கள மக்களை எடுத்துக் கொள்வோம்
அல்லது சில தனிநபர்களின் நிலைப்பாட்டை எடுத்துக் கொள்வோம்.

இவைகள் அனைத்தும் ஏதோ ஒரு சிந்தனை அல்லது ஒரு கருத்துச் சார்ந்தே இருக்கின்றது.

எல்லோரும் உலகத்தை ஒவ்வொரு விதத்தில் உலகத்தைப் பார்க்கின்றனர். இந்தப் பார்வையான
அவர் அவர் சிந்தனைக்கு ஏற்றால் போல் ஒவ்வொருவரும் திடமாக தமது கருத்துக்களில்
உறுதியாக இருக்கின்றனர். ஆனால் இந்தக் கருத்துக்களில் உள்ள மனிதவிரோதத்தன்மைகளை
களைந்தெடுப்பது எவ்வாறு என்பது முக்கிய கேள்வியாகும். மனிதவிரோதத் கருத்துக்கள்
என்ன என்பது பற்றிய திறந்த விவாதம் என்பது தேவையானதாகும்.

இவற்றில் இருந்துதான் சமூகத்திற்குகான கருத்துக்களை சென்றடைய முடியும். "


இங்கு மக்களிடம் தோன்றியுள்ள ஐயப்பாட்டை தீர்க்கவல்ல ஒரு வேலைமுறையை மேற்கொள்வதற்கா நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். இவ்வகையாக வேலைகளில் ஈடுபடுவது என்பது தேவையானதும் அவசியமானதாகும். இவற்றை தவிர்த்து விட்டு யுத்தத்தின் முனைப்புக்கு கொம்புசீவும் நிலையானது அபாயகரமானதாகும். நாம் புலிகளின் பக்கமோ ஒடுக்குபவன் பக்கமோ நிற்க முடியாது. நாம் ஒடுக்குமுறையாளர்களுடன் துணைபோக முடியாது. ஆழவேர் ஊன்றியுள்ள கசப்புணர்வை அகற்றப் போராட வேண்டிய நிலையில் உள்ளோம். எம்முன்னே இருக்கும் கடமைகள் அனைத்து இனங்களுக்குமான ஜனநாயக உரிமையை அங்கீகரிக்க வேண்டிப் போராட வேண்டியிருக்கையில் யுத்தமானது. இன்னும் இன்றும் பாசீசத்தை ஆழவேர் ஊன்றி வளர்ப்பதாகவே இருக்கின்றது. இன்றைய மக்களிடத்தில் தோன்றியிருப்பது அரசியல் விழிப்புணர்வு அல்ல. இழப்புக்களினால் ஏற்பட்ட தன்னெழுச்சியான இரக்க உணர்வு இதில் இருந்து பெறப்படும் ஒவ்வொரு சிறிய சக்தியும் பாசீசத்தினை உயிரூட்டவல்ல விழைபொருட்களே.


புலிகளின் தளங்களை அழிப்பதில் மாத்திரம் கவனம் செலுத்த முடியாது. புலியை முடியடிப்பது என்பது பரந்துபட்ட மக்களின் அரசியல் விழிப்புணர்ச்சியினால் மாத்திரம் தான் சாத்தியமாகும். சில தளபாடங்களையும் தளங்களையும் கைப்பற்றுவதன் மூலம் புலிகளை அழிக்க முடியாது. புலிகள் பழைய மாதிரி கெரில்லா போராட்டத்திற்கு தயாராக இருக்கின்றனர்.

இதில் யுத்தத்தை ஆதரிப்பது கூட புலியை வளர்த்தெடுக்கும் முறையோயாகும். இன்று
நடைபெறும் யுத்தம் கூட புலியை முழுமையாக அழிக்கும் நோக்கம் கொண்டில்லை. மக்கள்
எவ்வளவு அழிகின்றார்களோ அவ்வளவுக்கு அவ்வளவு புலம்பெயர்நாடுகளில் புலியைப்
பலப்படுத்தும்.புலியெதிர்ப்பாளர்களினால் அரசின் இனவழிப்பிற்கு உதவுவதன் மூலம்
மக்களுக்கு உரிமையை பெற்றுக் கொடுக்க முடியாது.

இவற்றை எல்லாம் அம்பலப்படுத்தும் ஒரு போராட்டவடிவமே அவசியமாகும். இவற்றிற்கும் பாசீச சக்திகளை ஆதரிப்பதற்கும் நடுவே நிறையவே மாறபாடு இருக்கின்றது. இன்றிருக்கும் தனிமனிதனின் பழியுணர்ச்சி உட்பட இனங்களுக்கிடையே இருக்கின்ற ஐயப்பாட்டை தவிர்ப்பதான செயற்பாடுகளே மாற்றத்தை கொண்டு வரும்.


இதனால் யார்ரெல்லாம் மக்களின் எதிரிகளாக இருக்கின்றார்களோ அவர்களை நோக்கிய கோரிக்கைகள் முக்கியமானதாகும். இந்த இடத்தில் அனைத்து பிரிவினரையும் மக்களின் எதிரிகளாக வரையறுக்கப்படுகின்றது.

-புலிகள்


-புலியெதிர்ப்பாளர்கள்


-சிறிலங்கா அரசும் அதன் கூட்டாளிகளான இந்திய மேற்கு அரசுகளுமாகும
அல்லல்படும் மக்களுக்கு தேவையானது


யுத்த நிறுத்தம்


நிவாரணம்


படைகளை முடக்குவது


தமது உறவுகளுடன் மீள்இணைவது


அரசியல் பேச்சுவார்த்தையை தொடங்குவது


புலிகள் ஏகக் கொள்கையை விடு


புலிகள் மக்களை கேடயமாக வைத்துக் கொள்ளாது அவர்களை விடுத்து

மாற்றுவழிகளில் போராடு !


-நாதன்.

Samstag, 14. Februar 2009

இடதுசாரிகள் மீதுள்ள பெரும்கடமை தான் என்ன?

இடதுசாரிகள் மீதுள்ள பெரும்கடமை .


மனித அவலங்கள் தொடர்ந்து கொண்டு இருக்கையில் எதனை தலையங்கமாக வைத்து தொடங்குவது எனத் தெரியிவில்லை. பலகொடுமைகள்நடந்து கொண்டிருக்கின்றன.

தற்காலத்தில் இராணுவ நடவடிக்ககையின் காலத்திலும் பின்னரான காலத்திலும் கவனிக்கபட வேண்டிய பல விடயங்கள் இருக்கின்றன.

சிறிலங்கா அரசு:

இன்று மூர்க்கத்தனமாக புலிகளின் கட்டுப் பாட்டுப் பிரதேசம் மீதான தாக்குதல். அரசே அறிவித்திருக்கின்றது சில நூற்றுக்கணக்கான போராளிகள் தான் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து போராடுவதாக அப்படியாயின் அரசின் இலக்கானது எவ்வகை விலை கொடுத்தாவது இடத்தைக் கைப்பற்றுவதாகும். இதன்காரணமாக மனிதாபிமானம் என்பதற்கே இடமில்லாதவாறு அரச படைகள் செய்ற்படுகின்றன.



* அரசிடம் வந்து சரணடைபவர்கள் மீதான துப்பாக்கிச் சூடு;

* வடிகட்டி
கைது செய்யப்படல்;

* காயப்பட்டவர்களையும் உறவினரையும் பிரித்து
வைத்தல்;

* காயப்பட்டவர்களை கவனிப்பதற்கு மருத்துவர்கள்
பற்றாக்குறை;

* காணாமல் போதல்.

குண்டு போட்டுக் கொல்லப்படுபவர்கள் அவர்கள் தங்கியிருந்து பதுங்குமுழிகளே அவர்களின் புதைகுழிகளாக மாறியிருக்கின்ற நிலமை. இதனால் தமது உறவுகளின் முகத்தைக் இறுதியாகக் கூட பார்க்க முடியாத அவலங்கள் . என அவலங்கள் தொடர்கின்றன. இவைகள் வெறும் ஊடகச் செய்திகள் அல்ல மாறாக எமது உறவுகளிடம் இருந்து நேரிடையாகப் பெறப்பட்ட கள தகவல்களாகும். பாசீட்டுக்களுக்குள்ளாக உளவியல் நிலையினை சிறிலங்கா ஆட்சியாளர்களிடம் காணப்படுகின்றது.

இன்றையப் பொழுதில் அனைவரும் புலிகள் அழியவேண்டும் எனக் கொள்கின்றனர். ஆனால் அழியப்படுவது அடிமட்டப் போராளிகளும் மக்களுமாவர்.

புலிகளின் தலைமையானது ஆயுதங்களையும் தமது குடும்பத்தையும் தம்மையும் பல போராளிகள் புடைசூழ பாதுகாப்பாக வாழ்கின்றனர். இதனை அறியாதவர்களாக அனைவரும் நடந்து கொள்கின்றனர்.

யுத்தநிறுத்தத்தை கொண்டுவரமாட்டேன் என்றுகூறுகின்ற பாசீச அரச தலைமை:

புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து வரக்கூடியவர்களும் வெளியே வர முடியாது இருக்கும் மக்களுக்கும் பற்பல காரணங்கள் இருக்கின்றனர். இவர்கள் விரும்பியோ விரும்பாமலே புலிகளின் கட்டுப்பாட்டிற்குள் இருந்து விட்டார்கள். இதனால் அனைவரும் அழிக்கப்படுவதற்கு துணை போக வேண்டுமா? அப்படி அரசிடம் சரணடைந்தால் அவர்களை புனருத்தாரனம் செய்யும் வகையில் வெளிப்படையாக ஒரு நிர்வாக அலகு இருக்கின்றதா? சுதந்திரமானதும் ஜனநாயக விழுமியங்களுக்கும் அமைய கட்டமைக்கப்பட்ட நிர்வாக அலகு இல்லாது வந்து சரணடையுங்கள் எனக் கூறுவதில் எவ்விதமான நேர்மையாக செயல்முறை அங்கு இல்லை. இது ஓரு பாசீசக் கட்டமைப்பு சுதந்திரமான கட்டமைப்பைக் கொண்டிருக்காது. சுதந்திரமான ஜனநாயக விழுமியங்களை மதிக்கின்ற ஒரு அலகை உருவாக்கப் கோருவது அவசியமாகும்.

புலியெதிர்ப்பாளர்கள்:



நேரிடையாகவே அரசுடன் சேர்ந்தியங்கும் டக்கிளஸ்/கருணா/ பிள்ளையான் /சிறி ரொலோ எனவும் புளொட்/இபிஆர்எல்எவ நாபா/ ஈரோஸ்/ சங்கரி எனவும் இவர்களின் மூலம் தமிழ் மக்களுக்காக உரிமையை பெற்றுக் கொடுக்க முடியுமா?

இன்று புலியெதிர்ப்பாளர்கள் பக்கத்தை எடுத்துக் கொண்டால் கிழக்கின் விடிவெள்ளிகள்
தங்களுக்கிடையே ஆப்புவைத்து யார்யாரை முதலில் போடுவது எனப் பார்த்துக்
கொண்டிருக்கின்றனர். கருணா தேசிய நீரோட்டத்தில் இணையப் போகின்றாராம். ஏனெனில்
அவரை தலைவர் என ஏற்றுக் கொள்ளவில்லையாம்.

பிள்ளையானோ 13 சட்டதிருத்தத்திற்கு அமைய அதிகாரம் இல்லை எனக்கூறுகின்றார்.

இதில் இவர்களின் மூத்த அண்ணா டக்கிளஸ் வடக்கிலேயே தங்கி மக்களுக்கு சேவை செய்து கொண்டிருக்கின்றார். இதில் சங்கரிக்கு பெரிய இடைஞ்சலாக டக்கிளஸ் இருக்கின்றார். வடக்கினதும் கிழக்கினதும் நிர்வாகிகள் தமிழ் மக்களுக்கு புலிகளே பிரச்சனை என்பதை மறக்காது அரசவிசுவாசமாக நடந்து கொள்கின்றனர்.

மற்றைய ஜ.த.தே.கூட்டமைப்பினர் சங்கரியை வைத்துக் கொண்டு ஆங்காங்கே தமது குரலை தெரியப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். இவர்களின் நிலையானது அண்ணன் எப்போ சாவான் திண்ணை எப்போ காலியாகும் என்பதாகும்.

புலம்பெயர்நாடுகளின் உள்ள மக்களை திரட்டுவது:


புலம்பெயர்நாடுகளின் உள்ள மக்களை திரட்டுவது என்பது இலகுவான விடயம் அல்ல. மக்களைத்
திரட்டுவது என்பது அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களை கூப்பிட்டு தமது
ஊர்வலங்களில்
அல்லது கூட்டங்களின் பேசவைப்பது என மாத்திரம் என்று தான்
விளங்கிக் கொள்கின்றனர்.
இதன் காரணத்தினால் அரசியல் கட்சி உறுப்பினர்களை தமது
கூட்டங்களில் பேசவைப்பதில் திருப்பி அடைகின்றனர்.


மக்களின் ஆதரவிற்கு சிறந்த உதாரணமாக பலஸ்தீனர்களுக்கு ஆதரவாக உலகெங்கிலும் நடைபெறும் போராட்டத்தையே உதாரணமாக கொள்ள முடியும். பலஸ்தீனர்களுக்கு கிடைக்கின்ற ஆதரவிற்கு இணையாக வேண்டாம் ஒரு சிறி அளவில் தன்னும் அந்தந்த நாட்டுமக்கள் குரல்கொடுக்க ஏன் முன்வரவில்லை என்பதை புலிகளின் ஆதரவாளர்கள் தமக்குத் தாமே கேள்வி கேட்கவேண்டும்.


ஏன் அவ்வாறு நடைபெறவில்லை என நாம் காரணம் கூறுகின்ற போது அவை புலயெதிர்ப்பாளர்கள் இவ்வாறுதான் கூறுவார்கள்என்ற கருத்தியலுக்குள் கொண்டுபோய் விடும்.


புலிகள் மக்களை அனாதரவாக விட்டுவிட்டு சென்று விட்டார்கள் என புலிகளின் விசுவாசிகள் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை.இன்று புலிகளைப் பொறுத்தவரையில் மக்களுடைய இழப்புக் மூலமாக தமது குறிக்கோளை அடைய முடியும் என தமது ஆதரவாளர்களுக்கு அறிவுறுத்துகின்றனர்.

அதாவது இழப்புக்கள் மூலமாக சர்வதேச அங்கீகாரம் கிடைக்கும் என நம்புகின்றனர்.

புலம்பெயர் மக்கள் போராட்டம் மற்றும் தமிழக மக்களிடையே ஏற்றபட்ட எழுச்சி மூலமாக தமக்கு சாதகமான நிலை உருவாகும் என நம்புகின்றனர்.மக்களின் இழப்பைக் கொண்டு பணம் சேகரிக்க முடியும்.


புலம்பெயர்ந்த மக்களிடையே இழப்பினால் ஏற்படும் அனுதாப அலையென்பது கசப்பான நினைவுகளை
மறப்போம் என்று புலிகளின் ஆதரவாளர்கள் கூறுகின்றனர். ஆனால் தமது போராட்ட முறையில்
ஏற்பட்ட தவறுகளுக்கு விமர்சனம் செய்ய இவர்களால் முடிவில்லை. இழப்பினால் பெறப்படும்
சூழ்நிலையை தொடர்ந்து வைத்திருப்பதன் மூலம் குறுகிய காலத்தில் தமது தேவையை அடைந்து
விடலாம் என்பதே புலிகள் மாறாத யுக்தியாக இருக்கின்றது.


ஆனால் இன்றைய நிலையில் புலிகளுக்கான அங்கீகாரம் கிடைப்பது என்பது முடியாத நிலையாகும். அப்படி அங்கீகாரம் கிடைக்கவேண்டுமெனில் ஏகாதிபத்திய மற்றும் பிராந்திய வல்லரசுகளிடையே எதிர்பாராத பகைமுரண்பாடு ஏற்பட்டால் தவிர வேறு சந்தர்ப்பமே இல்லை.

மக்களை அணிதிரட்டவதானது புலம்பெயர் மக்களையும் மற்றும் புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள தொழிலாளர் வர்க்கத்தவருடன் ஒன்றிணைவதாககும். புலம்பெயர் நாடுகளில் உள்ள மக்களை திரட்டுவது என்பது 1984களில் தமிழ் நாட்டு அரசியல்வாதிகளை நம்பி மாத்திரமே அரசியல் செயற்பாடுகள் மேற்கொள்ளப் பட்டன. சில விதிவிலக்கான சந்தர்ப்பங்களைத் தவிர பெரும் கட்சிகளை மையப்படுத்தியே அரசியல் வேலைகள்இடம் பெற்றன. அவ்வாறில்லாது. உழைக்கும் மக்களை அடிஅத்திவாராமாக கொண்டு ஆதரவுத்தளமானது உருவாக்கப்பட வேண்டும். சிவாஜிலிங்கம் கூறுவது போல இந்துக்கள் பாதிக்கப்படுகின்றார்கள் என்பதற்காக சிறுபான்மையினரின் உரிமையை ஒடுக்கும் பா.ஜ.க என்ற இந்துத்துவவாத பாசீசக் கட்சியை நோக்கி செல்ல முடியாது.


மற்றையது 22 நாடாளுமன்ற உறுப்பினர்களின் நிலையாது சிவாஜிலிங்கத்தின் பேட்டியை அவதானித்தபின்னர் அவர்களிடையே ஒற்றுமையான கருத்து இல்லை என்பதை அறிய முடிகின்றது. இவர்கள் ஒன்றாகச் செயற்படவில்லை என்பதை சுட்டிக் காட்டுகின்றார். சிவாஜிலிங்கத்தின் கருத்தென்பது இன்றும் சுயாதீனமாக இயங்கவல்ல கருத்துக்கள் அவரிடம் இல்லை. தற்காலச் சூழலை மையமாக் கொண்டு ஒரு போராட்டத்தை செயற்படுத்த முடியாத நிலையைத் தான் சிவாஜிலிங்கத்தின் பேட்டியின் மூலம் அறிய முடிகின்றது. இன்றைக்கு மக்கள் புலி என்ற எல்லைக்குள் மாத்திரம் நின்று சிந்திக்கின்றார்களோ அவ்வாறே க.தே.கூட்டமைப்பினர் கருத்து ரீதியாக வளராது மலடாகிப் போய்யுள்ளனர்.

தீக்குளிப்பது முதலான அரசியல் நடவடிக்கைகள் மூலம் புலம்பெயர்நாடுகளில் உள்ள தமிழ்
மக்களை புலிப்பாசீசம் தமக்கு புத்துயிர்ப்புக் கொடுப்பதிலேயே கவனத்தைச்
செலுத்துகின்றனர். ஆழமான அரசியல் உள்ளடக்கம் இல்லாத போராட்ட வடிவங்களும் பணம்
திரட்டுவதை மையமாகக் கொண்ட கோரிக்கைகளையுமே புலிகள் திரைமறைவில்
செயற்படுகின்றனர்.


இடதுசாரிகள் மீதுள்ள பெரும்கடமை தான் என்ன?:


புலிகளின் ஆதரவு தொலைக்காட்சிகள் தற்கொலையை தூண்டுவதிலும் இனவாதத்தை விதைப்பதிலும் பணம் பிடுங்குவதிலும் கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். இவற்றை தடுப்பது என்பது மக்களுக்காக கோரிக்கையை முன்வைத்த போராட்டங்களை இடதுசாரிகள் இணைந்து போராட்டம் நடத்தவதன் மூலமே ஒரு காத்திரமாக தாக்கத்தை கொடுக்க முடியாது.

இன்று இடதுசாரி அரசியல் பேசுபவர்கள் பல பிரிவுகளாகவும் உதிரிகளாகவும்
பிரிந்திருக்கின்றனர். இவர்கள் வெறும் விமர்சனம் செய்து கொண்டிருப்பதால் இன்றும்
இன்றும் பாசீசம் தொடர்ச்சியாக தனது வேரை ஆழ ஊன்றிக் கொள்ளச் சந்தர்ப்பம்
கொடுத்துவிட முடியாது. இடதுசாரிகள் நிலவரத்தை ஆய்வு செய்து அதற்கு
தகுத்தாற்போன்றதான அரசியல் செயல்வடிவங்களை கொடுக்க வேண்டும். ஏனெனில்
இனப்பிரச்சனையில் ஆரம்பகாலத்தில் விட்ட தவறுபோல இந்தக்க காலத்திலும் விடக்
கூடாது.




பரந்துபட்ட ஐக்கிய முன்னணி என்பது பல தளங்களை மையப்படுத்தியதாக இருக்க வேண்டும்.
எமக்கான கோரிக்கைகள் உடனடித் தேவை எனவும் நீண்டகாலத் தேவை என திட்டத்தில்
கொண்டிருக்க வேண்டும். ஏனெனில் நாம் எமது மக்களுக்காக தேவையை எந்தவிதமான பாசீச
சக்திகளை ஆதரிப்பதன் மூலம் பெற்றுக் கொள்ள முடியாது என்பதே உண்மையானதாகும்.




பாசீச எதிர்ப்பு என்ற அடித்தளத்தில் இருந்து உழைக்கும் மக்களுக்கான தேவை என்பதை நோக்கி விரிவடைந்து செல்ல வேண்டும். எவ்வாறு எதிர்காலத்தை வழிநடத்தப் போகின்றோம் என்பதைப் பொறுத்தே இலங்கையில் உழைக்கும் மக்களுக்கான விடிவைக் கொடுக்கும் போராட்டத்தை மாத்திரம் அல்ல. அனைத்து இனமக்களின் சுயநிர்ணயஉரிமையை பெற்றக் கொள்ளக் கூடிய ஒரு போராட்ட கட்டமைப்பை தொடர்ச்சியாக கொண்டு செல்லமுடியும். அதாவது புலிகளுடனோ அல்லது புலியெதிர்ப்பு அணியினரின் துரோத்தனத்தினால் தமிழ் மக்களுக்காக போராட்டம் முற்றுப் புள்ளபெற்றதாக இருகக்கூடாது.


சிறிலங்கா பாசீச அரசோ அல்லது ஏகாதிப்பத்தியங்களோ எமது மக்களுக்கான நியாயமான தீர்வை முன்வைக்கப் போவதில்லை. அரசியல் ரீதியாக வளர்ச்சியடையாது மலடாகிப் போன ஒரு சமூகத்தை போராட்ட ரீதியாக தொடர்ந்தும் வளர்த்தெடுப்பது என்பது பரந்து பட்ட ஒரு அரசியல் செயற்பாட்டினால் தான் சாத்தியமாகும்.



-நாதன்.

Dienstag, 10. Februar 2009

புலிகளே மக்கள் குடியிருப்பை விட்டு உங்களால் முடிந்தமுறையில் போராடுங்கள்

நாம் வலியுறுத்துவது
அனைத்து விதமான பாசீச சக்திகளிடத்தில்
இருந்து விடுதலையாகும்.




வெளிப்படுகின்ற பாசீசம் என்பது பலவகைப்படுகின்றது.



அரசபயங்காரவாதம்புலிகளின் பாசீசம் மற்றும் மாற்று இயக்கங்களின் மக்கள் வீரோத நடவடிக்கைகளை ஏற்றுக் கொள்ளுங்கள் என்பதாகும்.



இன்று சிறிலங்கா அரசின் பாசீச நடவடிக்கை என்பது தமிழ் மக்களை புலிகளிடம் இருந்து மீட்பதாக் கூறிக் கொண்டு தனது பாசீசத்தை தொடர்கின்றது. தான் தொடர்ந்திருக்கும் யுத்தத்தை விமர்சிப்பவர்கள் எல்லோரையுமே புலி முத்திரை குத்துகின்றது. 11/9 பின்னரான பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் புரிவதாக கூறிக் கொள்கின்ற இவர்கள் ஏகாதிப்பத்திய பித்தலாட்டத்தை தனது பாசீச நலனுக்காக தமிழ்மக்கள் மீதான இனவழிப்பை பயங்காரவாதத்திற்கு எதிரான போர் என்ற மாயைக்குள் வைத்திருக்க விடாப்பிடியாக செயற்படுகின்றது.




சிறிலங்கா அரசு பாசீசத்திற்கு எதிராக சிறு குரல்களைக் கூட புலியைப் பாதுகாப்பதாக கூறுகின்றது. (இவர்களைப் போலவே)
தமிழ் புலியெதிர்ப்பாளர்களைப் பொறுத்தவரை அரசு என்னசெய்கின்றதோ அவற்றை கண்மூடித்தனமாக புலிகளுக்கு எதிரான யுத்தமாக பிரஸ்தாபிக்கின்றனர். அங்கு மக்கள் படும் துன்பங்களை இட்டு எவ்வித மனவுறுத்தல்கள் இல்லாமலே அரச பாசீசத்தை வரவேற்கின்றனர்.



தமிழ் புலியெதிர்ப்பாளர்களும் அரசைப் போலவே புலிமுத்திரை குத்துகின்றனர்.


இதே போல புலிகளின் பாசீசத்தை விமர்சித்தால் அரசகைக்கூலிகள் என புலிகளும் முத்திரை குத்துகின்றனர்.



இவ்வாறு முத்திரை குத்துபவர்கள் மக்களுக்கான தேவை இருக்கின்றது என்பதை எவரும் ஏற்கத்தயாராக இல்லை.
நாம் வலியுறுத்துவது அனைத்து விதமான பாசீச சக்திகளிடத்தில் இருந்து விடுதலையாகும்.



இங்கு புலிகளின் அதிகார வர்க்கம் அழிவது பற்றிய பிரச்சனை அல்ல. புலிகளின் அடிமட்டப் போராளிகள் அழிவது பற்றிய பிரச்சனை மற்றையதுபொதுமக்களின் அழிவைப் பாதுகாப்பது.



அடுத்ததாக தமிழ் மக்களுக்கான உரிமையை எதிரிகளிடம் சோரம் போகாது எவ்வித விட்டுக் கொடுப்புக்கும் இடம் கொடாது சுயநிர்ணய உரிமைக்காக போராட்டத்தை அனைத்து தேசிய இனங்களின் ஐக்கியத்துடன் தொடர்வதாகும்.



>>> புலிகளே மக்கள் குடியிருப்பை விட்டு உங்களால் முடிந்தமுறையில் போராடுங்கள்<<<

இதில் என்ன தவறிருக்கின்றது? அரசின் தகவலின் படி 900 குறைவான போராளிகளே களத்தில் இருப்பதாக கூறுகின்றது. அப்படியாயின் மற்றைய போராளிகள் எங்கே?



அரசிற்கே தெரிந்து விட்டது புலிகளின் கட்டுப் பாட்டுப் பகுதிக்குள் புலிகளின் தலைமைத்துவம் மற்றும் பெரும்பான்மையான போராளிகள் இல்லை என்பதை.



இதிலிருந்து தெரிவது என்ன புலிகள் தலைமை தம்மை பாதுகாத்துக் கொள்வார்கள். ஆனால் அப்பகுதியில் வாழும் மக்கள் நிலைதான் என்ன? அப்படி இடைத்தங்கல் முகாமிக்கு வந்தாலும் அங்கு நடப்பது என்ன?

-நாதன்.