கொலைக்களம்.
சிறிலங்கா அரசு தாக்குதல் தொடுத்த பின்னரான காலங்களில் ஏன் இன்றுவரை கூட புலிகள் பலமாக திருப்பித் தாக்குவார்கள் என்றே எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் அவ்வாறு நடைபெறவில்லை மாறாக புலிகள் பெரும் நிலப்பரப்புகளாக விட்டு விட்டு எவ்வித எதிர்ப்பையும் காட்டாது பின்வாங்கிச் சென்றனர். இன்று சில மைல்பரப்பளவில் பெரும் மக்களுக்கிடையே புலிகள் இருப்பதாகவும் இறுதித்தாக்குதலுக்கு தயாரா இருப்பதாகவும் புலிகளின் ஆய்வாளர்கள் எழுதிக் கொள்கின்றார்கள். "விடுதலைப்புலிகளை பொறுத்தவரையில் இராணுவத்தை புதுக்குடியிருப்பு நோக்கி வரவைத்துள்ளனர். புதுக்குடியிருப்பு சமருக்காக அவர்கள் பெருமளவான கனரக ஆயுதங்களையும் நகர்த்தியுள்ளனர். விடுதலைப்புலிகள் வசம் 10 பிரதான போர் டாங்கிகள், பல டசின் கவச வாகனங்கள், இரண்டு பல்குழல் உந்துகணை செலுத்திகள், 200 மோட்டார்கள், 60 பீரங்கிககள் உட்பட பெருமளவான கனரக ஆயுதங்கள் உள்ளதாக நம்பப்படுகின்றது. சிறீலங்கா வான்படையினரின் வான் தாக்குதல்களில் இருந்து அவற்றை பாதுகாத்து இறுதிச்சமருக்காக தயார்படுத்தி வைத்துள்ளனர்.
முன்னைய அனுபவங்களில் இருந்து தெரிந்து கொண்டது ஒன்று தான் அதாவது விடுதலைப்புலிகள்
தமது கனரக ஆயுதங்களை நிலையான இடத்தில் வைத்து தொடர்ந்து பயன்படுத்துவதில்லை.
உதாரணமாக டாங்கி ஒரு இடத்தில் இருந்து சூடுகளை வழங்கினால் அது சில நிமிடங்களில்
வேறு இடத்திற்கு நகர்ந்து விடும். விடுதலைப்புலிகள் கவசத்தாக்குதல் படை பிரிவை
ஆரம்பித்துள்ளதாக படைத்தரப்பு ஒத்துக்கொண்டிருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
விமானங்களின் வரவை கண்டறியும் நவீன ராடார் வசதிகளும் விடுதலைப்புலிகள் வசம் உண்டு.
எனவே தான் வான்படை திடீர் தாக்குதல்களுக்கு தாழ்வாக பறக்கும் எம்ஐ-24 மற்றும் எம்ஐ-35 ரக உலங்குவானூர்திகளை பயன்படுத்தி வருகின்றது. ஆனால் அவற்றின் தாக்குதல் எல்லைகள் மட்டுப்படுத்தப்பட்டவை.
முல்லைத்தீவும், சாலைப்பகுதியும் நீரேரிகளை உடைய குடா பகுதிகளை கொண்டவை அந்த நீரேரிகளை தற்காலிக அமைக்கப்பட்ட பாலங்கள் மூலம் கடந்து 55 ஆவது படையணியும், 59 ஆவது படையணியும் கனரக வாகனங்களை புதுக்குடியிருப்பு நோக்கி நகர்த்தி வருகின்றன. ஆனால் விடுதலைப்புலிகள் திடீர் தாக்குதலை நிகழ்த்தும் போது அவர்கள் இந்த கனரக வாகனங்களை கைவிட்டே ஓடவேண்டியிருக்கும். எடுத்து செல்வது கடினம். புதுக்குடியிருப்பின் கரையோர பகுதிகளை இரு படையணிகள் கைப்பற்ற முனைந்து வருகையில் ஏனைய 5 டிவிசன்களும் தெற்கு மற்றும் மேற்கு திசைகளில் நகர்ந்து வருகின்றன. "
http://www.infotamil.ch/ta/news.php?2bFSo4e0dvh5e0ecBG5N3b4OcJ74d2d0h3cc2GvS2d434US3b023Nq3e
ஈழப்போர் வரலாற்றில் திருப்புமுனையை ஏற்படுத்த போகும் சமர் [ திங்கட்கிழமை, 16 பெப்ரவரி 2009, 15:29 GMT+01:00 ] [நிலவரம்]
புலிகளின் அடுத்த நகர்வு?
புலிகளின் ஆயுத பலம் இவ்வளவு பலத்தை வைத்துக் கொண்டு புலிகள் ஏன் மக்களை பாதுகாக்கவில்லை? இன்றுவரை கூட புலிகள் பலமாக திருப்பித் தாக்குவார்கள் என்றே எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் அழிவு தொடர்கின்றது. மக்களின் நலனை அக்கறையிருந்திருந்தால் கனரக ஆயுதங்களை பாவித்திருப்பார்கள். இது சிறுபிள்ளைத் தனமான கருத்தாகக் கூட எள்ளிநகையாடலாம். இதில்
*தொடர்ச்சியான ஆயுதவழிபாடு
*தலைமையைக் காப்பாற்றுவது
*மக்களின் இழப்பைக் காட்டி அனுதாபத்தை பெறுவது
மக்களின் இழப்புக்கள் மூலம் சர்வதேச அங்கீகாரம் பெறுவது அதாவது கொசவோ அல்லது கிழக்குதிமோர் போன்று தமிழீழத்திற்கான அங்கீகாரம் கிடைக்கும் என புலிகளின் தலைமை எண்ணியிருக்கலாம். ஏன் இன்று இழப்பின் பின்னராக கொடுக்கப்படுகின்ற சர்வதேச கவனம் கூட தம்மை நோக்கிய பார்வையை திருப்பியுள்ளதாகவே புலிகள் கருதுகின்றனர்.
மேலும் புலிகளில் உள்ள உறுப்பினர் வலுவைப் பற்றி "விடுதலைப்புலிகளின் பகுதியில் ஏறத்தாள 300இ000 மக்கள் வசிக்கின்றனர். அவர்களில் 10 விகிதமானவர்கள் போரிடும் தகமை உடையவாகள் என வைத்து கொண்டால் கூட அவர்களின் பலம் 30இ000 இனால் அதிகரித்துவிடும். விடுதலைப்புலிகளின் வசம் ஏற்கனவே 15இ000 பயிற்றப்பட்ட போரளிகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே அவர்களின் பலம் 45இ000 ஆக அதிகரிக்கலாம். விடுதலைப்புலிகளின் செயற்திறன் மிகவும் அதிகம்.
போர் நிறுத்தம் நடைமுறையில் இருந்த 6 ஆண்டு காலப்பகுதியில் அவர்கள் வீதிகளையும்இ
கட்டடங்களையும் கட்டிக்கொண்டு இருந்திருப்பார்களா அல்லது மக்கள் பாதுகாப்பு
படையையும்இ தமது தாக்குதல் படையணிகளையும் கட்டி எழுப்பியிருப்பார்களா என்பதை
நீங்களே தீர்மானித்து கொள்ளுங்கள். " ஆக இவர்கள் இங்கு கூறவருவது என்னவெனில்
நம்புங்கள் நம்புங்கள் தமிழீழ நாளை கிடைக்கும் என்பதையே.
இழப்பை காட்டி மக்களின் ஆதரவைப் பெறுவதே புலிகளின் கடந்த 25 வருடகால யுத்த தந்திரமாகும். சிறுசிறுதாக்குதல்கள் மூலமாக படைகளைக் கொல்வதும் தமது சகாக்களை இழந்த இராணுவம் வெறித்தாக்குதலை மேற்கொள்வதும் பின்னர் இதனால் ஏற்படும் கெடுபிடிகளினால் விரக்தியுற்ற இளைஞர்கள் இயக்கங்களில் சேர வழிவகுத்ததது. மக்களும் இராணுவத்தை வெறுக்கத் தொடங்கினர். அரசியல் ரீதியாக மக்களை திரட்டுவது பற்றிய எவ்வித முனைப்பும் புலிகளுக்கு இருந்ததில்லை. ஆனால் ஏதோ தாம் அரசியல் நடத்துதவாக காட்டிக் கொண்டாலும் எல்லாம் தலைவருக்கு தெரியும்> தலைவர் பார்த்துக் கொள்வார்,எல்லாம் தலைவரின் வழிகாட்டலில் தான் நடைபெறுகின்றது. இவ்வாறு ஒரு வெற்று மாயையை புலிகளின் தலைவரைச் சுற்றியே புலிகளின் அரசியல் அறிவு கட்டமைக்கப்பட்டுள்ளது.
தமிழ் மக்களின் உரிமைக்கான தேவை என்பது இருந்த போதும் ஈழப்போராட்டம் என்பது தன்னியல்பாக வளர்ச்சியடைந்தது அல்ல. 1983 பின்னரான நிகழ்வில் இந்தியா மற்றும் ஏகாதிபத்திய சக்திகளின் தலையீடாது. இயக்கங்களை வீங்கி வெடிக்கச் செய்தது. 1987 பின்பகுதியில் இந்தியராணுவத்துடனான மோதல்கள் கூட புலிகளை வளர்த்தே விட்டது. அரசியல் கருத்து ரீதியாக புலிகள் இந்திய இராணுவ வெளியேற்றத்திற்கான வெகுஜன போராட்ட கட்டமைப்பை உருவாக்கவில்லை. இழப்புக்களை ஏற்படுத்தியே புலிகள் மக்கள் தம்பக்கம் திருப்பினர். இந்திய இராணுவம் செய்த கொலைகளுக்கு ஈடாக புலிகளும் கொலைகளைச் செய்தனர். பழிகளை மற்றவர்கள் மீது போட்டனர். இதன் பொருள் இந்தக் காலத்தில் இருந்த நிலவரத்தில் அப்பழுக்கற்ற சக்திகள் இருந்ததாக கூற முடியாது. அன்றைய காலத்தில் இருந்த சக்திகள் அனைத்தும் ஏதோவொரு வகையில் அனைத்துச் சக்திகளின் கைகளிலும் இரத்தம் தோய்ந்தே இருந்தது.
வழமையாக இவ்வாறு ஒரு பகுதியை இராணுவம் நெருக்குதல் கொடுத்தால் வேறுபகுதியில் அரசபடைகளின் கவனத்தை திசை திருப்புவதற்குகாக தாக்குதல்களை நடத்துவர். ஆனால் கிளிநொச்சி படைகள் வசம் வரும் வரையில் பாரிய திசைதிருப்பும் தாக்குதல்களை நடத்தவேயில்லை. இனிவருங்காலத்தில் வரவு செலவை கணக்கை காட்டுகின்ற போது எவ்வளவு தமிழ் மக்கள் படைகளால் கொல்லப்பட்டார்கள் என்பது மறைக்கப்படும் அல்லது மறக்கப்படும். ஆனால் எவ்வளவு இராணுவச் சடலங்கள் தென்னிலங்கைக்கு அனுப்பப்பட்டது. எவ்வளவு ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டது என்பது பற்றிய வரவுதான் பிரச்சாரத்தின் போது காட்டப்படும். இவை ஒன்றும் கற்பனை அல்ல உதாரணத்திற்கு எடுத்துக் கொள்வோம் சீலன் ஆனந்தன் ஆகிய இருவர் சுடப்பட்டு இறக்கின்றார்கள். அந்தவேளை இறந்தபோராளிகளின் துப்பாக்கியை பக்குவமாக தலைமையிடம் ஒப்படைக்கும் படி சீலன் கட்டளை இட்டதாக பிரச்சாரம் செய்யப்பட்டது. விக்ரர் கொலை செய்யப்பட்ட வேளையில் இராணுவத்தின் பிணங்களும்> தளபாடங்களும் முன்வைக்கப்பட்டு கொலை மறைக்கப்பட்டது. இவ்வாறு பலநூறு சம்பவங்களை குறிப்பிடலாம். இன்று புலிகளின் தலைமையும்ஈ முழு உறுப்பினர்களும் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் இருப்பதாக கொள்ள முடியாது. இவ்வளவு நெருக்கமான இடத்தினுள் பிரபாகரன் இருப்பாராயின் அவர் இருக்கும் இடம் எதிரிகளுக்கு தெரிய வந்திருக்கும். இவ்வாறு நெருக்கமான இடத்தினுள் பிரபா இருப்பதற்கு சந்தர்ப்பம் இல்லை. இவ்வாறு இருக்கும் இடம் தெரியும் பட்சத்தில் பிரபா இருக்கும் இடம் நோக்கியே விண்வெளிப் படங்களின் உதவியுடன் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கும்.
ஆனால்,
அரசைப் பொறுத்தவரையில் தற்கொலைத் தாக்குதலில் இருந்து தப்பிய
சரத்பொன்சேகா,ராஜபட்சே ஆகியோரின் பழிவாங்கும் படலம் இந்திய ஆழும் வர்க்கத்தின்
ஆசியுடன் நடத்தப்படுகின்றது. அரசிற்கு தெரியும் புலிகளின் கட்டுப்பாட்டுப்
பகுதிக்குள் புலிகளின் தலைவர் இல்லை என்பதும் எவ்வாறெனினும் இலங்கை முழுவதுமான
நகரங்களை தமது கட்டுப்பாட்டினுள் கொண்டு வருதே அரச பயங்கரவாதிகளின் எண்ணமாக
இருக்கின்றது. இதற்கு விலையாக தமிழ் மக்களின் உயிர்கள் இருப்பது பற்றி எந்தக்
கவலையும் இல்லை.
ஆனால் தமிழ் மக்களின் இழப்புக்கள் ஏற்படுத்துவதன் மூலமே புலிகள் தமது இருப்பை ஸ்திரப்படுத்துகின்றனர். புலிகள் மக்களை சுதந்திரமாக இராணுவக் கட்டுப்பாட்டினுள் செல்ல விரும்பியவர்களை செல்ல விட்டிருக்கலாம். அவ்வாறு செய்யவில்லை ஆயுதங்களையும் தமது தலைவர்களையும் காப்பாற்ற வேண்டி இன்றைய கொலைகளத்தை புலிகள் உருவாக்கியிருக்கின்றார்கள்.
புலகளின் ஊடகங்கள்மக்களை மூளைச்சலவை செய்வதில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன. "எமது மக்களின் அரசியல் அறிவு மறைக்கப்பட்டு இழப்புக்களை வைத்தே தமது இருப்பை பேணப்படுகின்றது.
இன்றைய நிலையில் பிராந்திய வல்லரசின்; மேற்கு நாடுகளின் அரசியல் நிகழ்ச்சி நிரலானது
பொருளாதார நலன்கருதி வரையப்பட்டதாகும். இவற்றை அம்பலப்படுத்தி மக்களை அணிதிரட்டவல்
இன்றைய அரசியல் நிகழ்வை புரியத்தக்க வகையில் அரசியல் ரீதியாக பலம் கொண்ட ஒரு
அமைப்பும் எம்மத்தியில் வேர் ஊன்ற முடியவில்லை.
இவ்வாறு மூளைச் சலவை செய்யப்படுகின்ற மக்களிடம் இருப்பது கோபம்; உலக நடப்பை புரிந்து கொள்ளக் கூடிய அறிவில்லாத நிலை. இந்த நிலையானது விரக்தியை உருவாக்கின்றது. இதனால் மேலும் மேலும் பாசீசம் தனது இருப்பை நிலைநிறுத்திக் கொள்ள சந்தர்ப்பம் கொடுக்கப்படுகின்றது. ஏனெனில் இழக்கப்படுவது எமது சகோதரர் அம்மா அப்பா; மாமா மாமி; சின்னம்மா பெரியம்மா; சித்தப்பா பெரியப்பா. ஆக இழப்புக்குள் உள்ளாவது எமது இரத்தம் இவ்வாறு நித்தம் இரத்தம் சிந்துகின்ற போது மற்றைய விளக்கங்கள் எவையும் நியாயம் அற்றதாக போகின்றது.
வரலாற்றை தவிர்த்த போக்கு இதனால் தான் இன்று இளையோரை போராட்டத்திற்கு தலைமை தாங்கப்படுகின்றார்கள் இதனால் ஏதோ முதிர்ந்தவர்கள் தாமாக வழியை விடவில்லை மாறாக முன்னையவர்களின் உழைப்பை குறிப்பிட்ட ஒரு அதிகாரவர்க்கம் புலம்பெயர்ந்த நாட்டில் உருவாக்கப்பட்டு அவர்களின் மேற்பார்வையில் கீழ் இன்றைய இளையவர்கள் அதிகார வர்க்கத்திற்கு ஊழியம் செய்ய மறுவுற்பத்தி செய்யப்பட்டிருக்கின்றார்கள். இவைகள் தேசத்தில் இருந்து சிந்தப்படும் உதிரத்தை மூலதனமாகக் கொண்டு உரம் போடப்படுகின்றது.இன்றைய மக்களிடத்தில் தோன்றியிருப்பது அரசியல் விழிப்புணர்வு அல்ல. இழப்புக்களினால் ஏற்பட்ட தன்னெழுச்சியான இரக்க உணர்வு இதில் இருந்து பெறப்படும் ஒவ்வொரு சிறிய சக்தியும் பாசீசத்தினை உயிரூட்டவல்ல விழைபொருட்களே."
புலியெதிர்ப்பாளர்கள்:
புலிகள் மற்றையது புலியெதிர்ப்பணி என இருதுருவங்கள் இருக்கின்றன. இவர்களைத் தவிர்த்தி தனியே ஒரு நிலைப்பாடு எடுக்க முடியாதா? அல்லது அவ்வாறு எடுப்பது தறவா? ஏனெனில் இன்றைக்கு மக்களை கொல்பவர்கள் அல்லது கொல்ல துணையோகின்றவர்கள் எல்லோரும் தத்தம் பக்கம் நிற்க வேண்டும் என்றே வலியுறுத்துகின்றனர்;. இவற்றை தவர்த்தி இருப்பவர்கள் சுதந்திரமாக இருக்க முடியாது என்பதே யதார்த்தம்.புலிகள் சகோதரப்படுகொலையை மேற்கொண்டு தமது தலைமைதான் தமிழ் மக்களின் ஏகதலைமை என வலிந்துதினிக்கப்பட்டது. கருத்துத் திணிப்பானது சமூகத்தில் சுதந்திரமாக கருத்துருவாக்கத்திற்கு சாவுமணி அடித்ததது. இதன் விழைவு இன்று புலிகள் முடக்கப்பட்ட நிலையில் மக்கள் சுதந்திரமாக ஒரு போராட்டத்தை நடத்த முடியாத நிலையில் தான் இருக்கின்றனர். இந்த அவலத்திற்கு புலிகளே பெரும்பொறுப்பாகும். அவ்வாறு யாரென்றாலும் மக்கள் நலனில் இருந்து கருத்துக் கூறுமிடத்தில் ஏதோவொரு துருவத்தினுள் முத்திரை குத்தப்பட்டு சேறடிக்கப்படுகின்றது. புலிகள் எவ்வாறு ஏகம் என்ற ஒன்றை நிலையில் மாற்றுக்கருத்துக் கொண்டோரை அரசியல் அரங்கில் இருந்து அன்னியப்படுத்தினார்களோ இன்று புலியெதிர்ப்பாளர்கள் மக்கள் நலன் கொண்ட எந்தச் செயற்பாடும் புலிகளுக்கு சார்பானது எனக்கூறுகின்றது.
"பாசிசப்புலிகளும் தவறு, பேரினவாதமும் தவறு என்று சீமையில் இருந்து கொண்டு
சித்தாந்தம் பேசும் இவர்கள் தாயகம் சென்று தனித்துவமான ஒரு அமைப்பை கட்டியெழுப்ப
வேண்டியதுதானே. பாசிசப்புலிகளையும், பேரினவாதத்தையும் எதிர்த்து வடக்கு கிழக்கில்
செயற்பட எண்ணியிருந்த சோசலிச சமத்துவக்கட்சி உறுப்பினர்கள் எதிர் கொண்ட மரண
அச்சுறுத்தலை இவர்கள் மறந்துதான் போவார்களா?... அவர்களது முயற்சிகளை பாசிசப்புலிகள்
ஒட்ட நறுக்கிஇ அந்த அமைப்பின் உறுப்பினர்களை கொன்றொழித்த வரலாறுகளை இவர்கள்
மறந்திருக்க மாட்டார்கள்.
"hவவி://றறற.pயயசஎயi.நெவ/pயநப.002002.hவஅ" இனவாத அரசை ஏற்றுக் கொள்ளும்படி புலியெதிர்ப்பாளர்கள் கூறுகின்றனர். ஓரு விடுதலை அமைப்பு என்பது சமூகத்தில் இருந்து தனது தேவையை நிவர்த்திசெய்யும் பொருட்டு உருவாகப்படுவது. அதனை புலம்பெயர்மண்ணில் இருந்து ஒன்றை உருவாக்க முடியாது. வரலாற்றின் தேவையின் நிமிர்த்தம் உருவாக்கப்படுவதற்கு அல்லது தலைமை தாங்குவதற்கு வானத்தில் இருந்து இறங்க வேண்டிய தேவையில்லை.
தமிழ் மக்களுக்கான எதிர்கால தீர்வு எவ்வாறு இருக்க வேண்டும் இதனை
புலியெதிர்ப்பாளர்கள் முன்வைப்பார்களா? அரசு என்ன தீர்வுத் திட்டத்தை
வைத்திருக்கின்றது என்பதை பார்க்கும் முன். புலியெதிர்ப்பாளர்கள் எவ்வகையாக தீர்வை
வைத்திருக்கின்றனர் என்பது மக்களுக்கு தேவையானதாகும்.
"அரைகுறைத்தீர்வுகளை ஏற்பதா என்று நீங்கள் கூறுகின்ற ஒவ்வொரு சந்தர்ப்பங்களின் போதும் யுத்தத்தை முடிவிற்கு கொண்டு வருவதற்கு மாறாக யுத்தத்தை நீங்களே ஊக்குவித்தும் வந்திருக்கிறீர்கள் என்பது தெளிவாகின்றது. " சரி கிழக்கு மாகாண அனுபவத்தை எடுத்துக் கொள்ளுங்கள் பிள்ளையான் வரி, மாகாணசபையின் பொலீஸ்படை வேண்டும் எனக் கோரிக்கை இட்டார். இதனை சிறிலங்கா அரசு ஏற்றுக் கொண்டதா? இதையேதான் வரதராஸ பெருமாள் 1990களில் கூறிவிட்டு கப்பலில் சென்றார். (வட,கிழக்கு சபை கலைப்பிற்கு புலிகள் காரணம் ) ஆக எதிரியானவன் தான் ஒடுக்கும் மக்களுக்கு எவ்வாறு நியாயமான தீர்வை முன்வைக்கும் என நம்பமுடிகின்றது.
கிழக்கு மாகாணசபைக்கு அதிகாரம் கொடுக்க வேண்டும் என கிழக்கின்
விடிவெள்ளிகளினால் போராட முடிந்ததா?
இதற்கு பதிலாக என்ன செய்கின்றனர். கிழக்கின் மானமிகுதலைவர் இனவாதிகளுடன் சங்கமமாகின்றார். ஒரே தலைவன் ஒரே கட்சி கூறிவிட்டு "ஃலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொள்வது தொடர்பில் இந்த வாரத்திற்குள் அறிவிக்கவிருப்பதாக ரி.எம்.வி.பி தலைவர் வி.முரளிதரன் எம்.பி தெரிவித்துள்ளார். பிராந்திய அடிப்படையில் அரசியல் கட்சிகளை வைத்திருப்பதை நான் விரும்பவில்லை. தேசிய அடிப்படையில் ஓர் அரசியலுக்குள் எமது மக்களை நுழைத்து அதற்கான அங்கீகாரத்தை அவர்களுக்கு பெற்றுக்கொடுக்க வேண்டும். எனவே இந்நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதியுடன் உரையாடி மேற்படி தீhமானத்தை எடுத்துள்ளோம். இது எமது மக்களுக்கு எதிர்காலத்தில் சிறந்த வளங்களைப் பெற்றுக் கொடுப்பதற்கான வாய்ப்பாக அமையுமெனவும் கருதுகின்றேன். அதேநேரத்தில் இனப்பிரச்சினை தீர்ப்பதற்கு இதுவொரு சிறந்த முன்னுதாரண நடவடிக்கையாக விளங்க வேண்டுமென்பதையும் கேட்டுக் கொள்கிறேன் என்றும் முரளிதரன் எம்.பி தெரிவித்துள்ளார். இதேவேளை தமது அமைப்பிலுள்ள சுமார் 1300பேர் படைகளில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், 200பேர் வரையில் படைகளில் இணைக்கப்பட்டு தமது முதல்மாத வேதனத்தைப் பெற்றிருப்பதாகவும் முரளிதரன் எம்.பி குறிப்பிட்டுள்ளார்." கிழக்கின் விடிவெள்ளிகள் தமது கதிரைகளை பாதுகாப்பதில் அண்ணன் பிரபாவிற்கு ஈடாக செயற்படுகின்றனர்.

புலிகளினால் மாத்திரம் அல்ல மற்றைய கட்சிகளும் ஒருவருக்கொருவர் குழிதோண்டிக் கொண்டுதான் இருக்கின்றார்கள். "தலையில் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்து காயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சைகள் பலனளிக்காத நிலையில் இவர் உயிரிழந்துள்ளார். இப்படுகொலை அண்மைக்காலமாக கிழக்கு மாகாண முதலமைச்சருக்கும் அவருடன் இணைந்து அரசியல் நடாத்தும் உறுப்பினர்களுக்கும் எதிராக செயற்படும் கருணா அம்மானின் ஆதரவாளர்களாலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மட்டுநகர் தகவல்கள் தெரிவிக்கின்றன. " வன்னியில் தமிழ் மக்கள் தமது சந்ததிகளை இழந்து கொண்டிருக்கின்றார்கள். இவ்வேளையில் களையெடுப்புக்களை தமிழ்கட்சிகளே தமக்கிடையே செய்து கொண்டிருக்கின்றன. புலியெதிர்ப்பணியும் மக்களை சுயமாக சிந்திக்கவிடாது மரணபயத்தை ஏற்படுத்துகின்றனர். கடத்தல், கப்பம், காணாமல்போதல் என்ற நிகழ்வுகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. வன்னி மக்களைபுலிகள் விடுவிக்க வேண்டும் என்று ஊர்வலம் யாழில் நடைபெற்றது. அந்த ஊர்வலம் சுதந்திரமாக அணிதிரட்டப்பட்டது எனக் கொள்ள முடியுமா? அங்கு உள்ளவர்கள் இ.பி.டி.பி அல்லது இராணுத்தின் தயவுடனேயே அங்கே நின்மதியாக இருக்க முடியும். இதன் நிர்ப்பந்தத்தால் மக்கள் ஊர்வலத்திற்கு வந்திருப்பர். இவ்வாறே புலிகளின் கட்டுப்பாட்டினுள் இருப்பவர்களும் புலிகளுக்கு இசைந்தே நடக்க வேண்டிய நிலை இருக்கின்றது. எவ்வித அழுத்தங்கள் இல்லாது தாமாக தேர்வு செய்யக் கூடிய உரிமையை மக்களுக்கு அனைவரும் கொடுக்க வேண்டும்.புலியெதிர்ப்பு இணையங்கள்:
புலியெதிர்ப்பு இணையங்கள் அரசிற்கு விசுவாசமாக நடப்பதில் அவர்களை விட்டால் யாரும் இல்லாத வகையில் சிறிலங்கா அரசிற்கு பிரச்சார பீரங்கிகளாகச் செயற்படுகின்றனர். இவர்களைப் பொறுத்தவரையில் புலியை யார் எதிர்க்கின்றார்களோ அவர்கள் எல்லோரும் நண்பர்கள். இவர்களுக்கு சோ, ஜெயலலிதா,இந்துராம், தமிழககாங்கிரஸ் எடுபிடிகள்,வணக்கத்துக்குரிய சுப்பிரமணிசாமி ஈடாக பலரும் இவர்களின் நட்புவட்டமாக இருக்கின்றது. சில தலையங்கங்களையும், செய்திகளையும் பார்ப்போம்.
நீதிக்குத் தலைகுனிவு!
உயர் நீதிமன்ற நீதிபதிகளின் முன்னால் சுப்பிரமணியன் சுவாமி வழக்கறிஞர்களால் தாக்கப்பட்ட சம்பவத்தைப் பார்க்கும்போதுஇ இங்கே நடப்பது மக்களாட்சிதானாஇ இது நல்லாட்சியா என்கிற கேள்வியை எழுப்பாமல் இருக்க முடியவில்லை.
தற்கொலைஇ தமிழ்ச் சமூகம்இ தமிழீழப்போராட்டம்!
சீமான் கைது எப்போது? தமிழக அரசு பதில்
மக்கள் ரிவிக்கு தடை என்று மக்கள் ரிவி கிளப்பிவிட்ட புரளி
விடுவிக்கப்படாத பகுதியிலிருந்து வெளியேறும் மக்கள் மீது புலிகள் துப்பாக்கிப் பிரயோகம் : ஐ.நா. பிரதிநிதி ஜோன் ஹோம்ஸ் குற்றச்சாட்டு இந்தியாவையும்இ பிரித்தானியாவையும் சாதகமாகக் கையாண்ட இலங்கை இலங்கையில் போரில் சிக்குண்டுள்ள மக்களின் அவல நிலை குறித்து ஐ.நா. கவலை: விடுதலைப்புலிகள் மீது கடும் கண்டனம்hவவி://றறற.அயபயஎயடல.உழஅ/தமிழகப் பயங்கரவாதிகளான விடுதலை சிறுத்தைகள் உறுப்பினர் தீக்குளித்து மரணம்; கலெக்டர் அலுவலகம் முன் பரபரப்பு சம்பவம்
இவ்வாறு இவர்களுக்கான கருத்து புலியை எதிர்ப்பதும்,புலியை எதிர்க்கின்ற அனைவரையும் தமது ஒத்த கருத்துக்குரியவர்களாக இணைத்துக் கொள்வதாகும். இவ்வாறே தீபம் தொலைக்காட்சிக்கு வழங்கிய பேட்டியில் சிவாஜிலிங்கம் தெரிவித்ததாவது:
கிறிஸ்தவர்கள் தாக்கப்படுகின்றார்கள் என கிறிஸ்தவ
அமைப்புக்களிடமும்,இந்துக்கள்தாக்கப்படுகின்றார்கள் என பா.ஜ.க தலைவர்
அத்வானியிடமும் முறையிட்டதாக கூறினார் என்றும் இதன் மூலம் ஈழமக்களுக்கு ஆதரவான
சக்திகளை திரட்ட முடியும் எனவும் கூறினார். பா.ஜ.க மதவாதக் கட்சியாகும். இவர்களின்
எந்தச் செயற்பாடும் தேர்தலை சார்ந்ததாகவே இருக்கும். இவர்கள் ஆட்சிப் பொறுப்பில்
இருந்தால் கூட இன்றைக்கு என்ன நிலை இருக்கின்றதோ அவ்வாறான நிலைதான்
இருந்திருக்கும். இவர்கள் எதிரியார்? நண்பர் யார் என்று திடமாக இருக்காது
சந்தர்ப்பவாதமாக நடந்து கொள்கின்றனர்.
பா.ஜ.க ஒரு ஆழும் வர்க்கத்தை சேர்ந்த ஒரு கட்சியாகும் இவர்கள் எவ்வாறு ஒரு தேசிய இனத்திற்கு ஆதரவாக செயற்பட முடியும். இந்தியாவில் இருக்கின்ற தேசிய இனங்களின் உரிமையை இந்த மதவாதிகள் தயாராக இருக்கின்றார்களா? தமது நாட்டிலே உரிமைக்காக போராடும் மக்கள் மீது கரிசனை கொள்ளாத அமைப்புக்கள் எமது விடுதலைகக்காக குரல் கொடுப்பதானது அவர்களுடைய அரசியல்நாடகத்திற்கு நாம் அமைத்துக் கொடுக்கும் களமாகும். அரசியல் நடிகர்கள் களங்கள் கிடைக்கும் போது வீரவசனம் பேசிவிட்டுப் போய்விடுவர். நடைமுறையில் இவர்கள் எல்லோரும் ஒடுக்குமுறையாளர்கள் தான்.
இவ்வாறாக தமிழகபாசீஸ்டுகள் எல்லோரும் புலிகளை எதிர்க்கின்றார்கள் என்பதற்காக
புலியெதிர்ப்பாளர்களின் நண்பர்களாக இருக்கின்றனர். இந்த அரசியல் கோமாளிகளின்
கருத்துக்களை புலியெதிர்ப்பை நிலைநிறுத்துவதற்காக துணைக்கு அழைக்கப்படுகின்றனர்.
சோ,ஜெயலலிதா,இந்துராம், தமிழககாங்கிரஸ் எடுபிடிகள்,வணக்கத்துக்குரிய
சுப்பிரமணிசாமி மனித குல விரோதிகளாக இருக்கின்றார்கள் இவர்களிடம் இருப்பது
சாதியத்திமிருடன் கூடிய ஆணவக் கருத்துக்கள்.
புதிய பாதை ஒன்று இல்லையா?
இன்றைய நிலையில் எந்தச் சக்திகளின் பின்னால் செல்லமுடியதா நிலைதான் இருக்கின்றது. தமிழர்களே தமிழர்களே இறுதிப் போராட்டத்திற்கு வாருங்கள் என்ற அழைப்பையும் ஏற்றுக் கொள்ள முடியாதுள்ளது. இவர்கள் போடும் யுத்தவெறியில் இருந்து மக்களை காப்பாற்றுவது தான் முதன்மையான கடமையாகும். இனவெறி அரசின் பேச்சாளர் கூறிவிட்டார் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசம் எல்லாம் நியாயப்படுத்தப்பட்ட தாக்குதல் தளங்கள் என. இவ்வாறு இருக்கையில் புலிகள் தமது தலைமையை முதலில் காப்பாற்றியிருப்பார்கள். ஆனால் இங்கு அகப்பட்டிருக்கும் மக்கள் அங்கு இருப்பதற்கு பலகாரணங்கள் இருக்கின்றன. புலிகளின் நெருங்கிய உறவினர்கள்> காயப்பட்ட போராளிகள்> தடுத்துவைக்கப்பட்ட மக்கள்> இராணுவத்திடம் சென்று சாவதை விட புலியின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் இருந்துவிட்டு போவோம் என மக்கள் இருக்கத்தான் செய்வார்கள். புலிகளின் அடிமட்டப் போராளிகளைக் காப்பதும் முக்கியமான கடமையாகும்.
இன்றைய ஊடகங்கள் எல்லாம் எதிர்நிலைக்குச் செல்கின்ற வழிமுறைகளில் தான் பிரச்சாரங்களை செய்கின்றன. மக்களில் பலவிதமான நிலையில் உள்ளவர்கள் இருக்கின்றார்கள்.
"தமிழ் மக்களை எடுத்துக் கொண்டால் பல்வேறுபட்ட அனுபவங்களையும்; சோகம்; பலதுன்ப துயங்களினால் ஏற்பட்ட வடுவென்பது மக்களிடையே ஆழ வேர் ஊண்றியுள்ளது. இவ்வகையான கசப்பான உணர்வு என்பது அனைத்து மக்கள் பிரிவினரிடையேயும் இருக்கின்றது. இந்த சகப்புணர்வை தீர்ப்பது என்பது நீண்ட செயற்பாடுகள் மூலமாகவே சாத்தியமாகும்.
பிரதானமாக தமிழ் மக்களிடையே இருக்கின்ற புலியெதிர்ப்பாளர்களை எடுத்துக் கொள்வோம் அல்லதுஅரசின் மீதுள்ள நம்பிக்கையீனத்தால் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தினுள் இருக்கின்ற மக்களை எடுத்துக் கொள்வோம் அல்லது
முஸ்லீம் மக்களை எடுத்துக் கொள்வோம்
சிங்கள மக்களை எடுத்துக் கொள்வோம்
அல்லது சில தனிநபர்களின் நிலைப்பாட்டை எடுத்துக் கொள்வோம்.
இவைகள் அனைத்தும் ஏதோ ஒரு சிந்தனை அல்லது ஒரு கருத்துச் சார்ந்தே இருக்கின்றது.
எல்லோரும் உலகத்தை ஒவ்வொரு விதத்தில் உலகத்தைப் பார்க்கின்றனர். இந்தப் பார்வையான
அவர் அவர் சிந்தனைக்கு ஏற்றால் போல் ஒவ்வொருவரும் திடமாக தமது கருத்துக்களில்
உறுதியாக இருக்கின்றனர். ஆனால் இந்தக் கருத்துக்களில் உள்ள மனிதவிரோதத்தன்மைகளை
களைந்தெடுப்பது எவ்வாறு என்பது முக்கிய கேள்வியாகும். மனிதவிரோதத் கருத்துக்கள்
என்ன என்பது பற்றிய திறந்த விவாதம் என்பது தேவையானதாகும்.
இவற்றில் இருந்துதான் சமூகத்திற்குகான கருத்துக்களை சென்றடைய முடியும். "
இங்கு மக்களிடம் தோன்றியுள்ள ஐயப்பாட்டை தீர்க்கவல்ல ஒரு வேலைமுறையை மேற்கொள்வதற்கா நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். இவ்வகையாக வேலைகளில் ஈடுபடுவது என்பது தேவையானதும் அவசியமானதாகும். இவற்றை தவிர்த்து விட்டு யுத்தத்தின் முனைப்புக்கு கொம்புசீவும் நிலையானது அபாயகரமானதாகும். நாம் புலிகளின் பக்கமோ ஒடுக்குபவன் பக்கமோ நிற்க முடியாது. நாம் ஒடுக்குமுறையாளர்களுடன் துணைபோக முடியாது. ஆழவேர் ஊன்றியுள்ள கசப்புணர்வை அகற்றப் போராட வேண்டிய நிலையில் உள்ளோம். எம்முன்னே இருக்கும் கடமைகள் அனைத்து இனங்களுக்குமான ஜனநாயக உரிமையை அங்கீகரிக்க வேண்டிப் போராட வேண்டியிருக்கையில் யுத்தமானது. இன்னும் இன்றும் பாசீசத்தை ஆழவேர் ஊன்றி வளர்ப்பதாகவே இருக்கின்றது. இன்றைய மக்களிடத்தில் தோன்றியிருப்பது அரசியல் விழிப்புணர்வு அல்ல. இழப்புக்களினால் ஏற்பட்ட தன்னெழுச்சியான இரக்க உணர்வு இதில் இருந்து பெறப்படும் ஒவ்வொரு சிறிய சக்தியும் பாசீசத்தினை உயிரூட்டவல்ல விழைபொருட்களே.
புலிகளின் தளங்களை அழிப்பதில் மாத்திரம் கவனம் செலுத்த முடியாது. புலியை முடியடிப்பது என்பது பரந்துபட்ட மக்களின் அரசியல் விழிப்புணர்ச்சியினால் மாத்திரம் தான் சாத்தியமாகும். சில தளபாடங்களையும் தளங்களையும் கைப்பற்றுவதன் மூலம் புலிகளை அழிக்க முடியாது. புலிகள் பழைய மாதிரி கெரில்லா போராட்டத்திற்கு தயாராக இருக்கின்றனர்.
இதில் யுத்தத்தை ஆதரிப்பது கூட புலியை வளர்த்தெடுக்கும் முறையோயாகும். இன்று
நடைபெறும் யுத்தம் கூட புலியை முழுமையாக அழிக்கும் நோக்கம் கொண்டில்லை. மக்கள்
எவ்வளவு அழிகின்றார்களோ அவ்வளவுக்கு அவ்வளவு புலம்பெயர்நாடுகளில் புலியைப்
பலப்படுத்தும்.புலியெதிர்ப்பாளர்களினால் அரசின் இனவழிப்பிற்கு உதவுவதன் மூலம்
மக்களுக்கு உரிமையை பெற்றுக் கொடுக்க முடியாது.
இவற்றை எல்லாம் அம்பலப்படுத்தும் ஒரு போராட்டவடிவமே அவசியமாகும். இவற்றிற்கும் பாசீச சக்திகளை ஆதரிப்பதற்கும் நடுவே நிறையவே மாறபாடு இருக்கின்றது. இன்றிருக்கும் தனிமனிதனின் பழியுணர்ச்சி உட்பட இனங்களுக்கிடையே இருக்கின்ற ஐயப்பாட்டை தவிர்ப்பதான செயற்பாடுகளே மாற்றத்தை கொண்டு வரும்.
இதனால் யார்ரெல்லாம் மக்களின் எதிரிகளாக இருக்கின்றார்களோ அவர்களை நோக்கிய கோரிக்கைகள் முக்கியமானதாகும். இந்த இடத்தில் அனைத்து பிரிவினரையும் மக்களின் எதிரிகளாக வரையறுக்கப்படுகின்றது.
-புலிகள்
-புலியெதிர்ப்பாளர்கள்
-சிறிலங்கா அரசும் அதன் கூட்டாளிகளான இந்திய மேற்கு அரசுகளுமாகும
அல்லல்படும் மக்களுக்கு தேவையானது
யுத்த நிறுத்தம்
நிவாரணம்
படைகளை முடக்குவது
தமது உறவுகளுடன் மீள்இணைவது
அரசியல் பேச்சுவார்த்தையை தொடங்குவது
புலிகள் ஏகக் கொள்கையை விடு
புலிகள் மக்களை கேடயமாக வைத்துக் கொள்ளாது அவர்களை விடுத்து
மாற்றுவழிகளில் போராடு !
-நாதன்.

5 Kommentare:
மனநோய் முற்றிவிட்டது உங்களுக்கெல்லாம்.. வேறொனறும் சொல்வதற்கில்லை. தமிழ் நண்டு கதையில் முதலிடம் உமக்கே.
முதலில் தனி நாட்டை வாங்கும் வழியைப் பாருங்கள். பங்காளிச் சண்டையை அப்புறம் பார்க்கலாம்...
ராம்ஸ்
poda panni
intha pathivu vanthiruka veendiya neeram 1 varudathuku muthal thalaivare....
http://thee-sudum.blogspot.com/2009/02/blog-post.html
poda thevidiya mavane
ரஜா மீதான இ.பி.டி.பியின் விமர்சனம்
விபச்சாரம் ஆண்பால் பெண்பால்:
இதற்கு சமூகம் கொடுக்கும் அர்த்தம் என்பது பலவகைப்படுகின்றது. ஆண்பெண் உடல்வியாபாரம் என்பதற்கு அப்பால் பயன்படுத்தப்படுகின்றது. இதனை அறியாதவர்களாக நீங்கள் இருக்கமாட்டீர்கள் என்பது என் கருத்து. இருப்பினும் உங்களது சிந்தனை மிக ஆழ்ந்ததாக காட்டுவதற்காக இந்த வாதம் முன்வைக்கப்பட்டிருக்கின்றது என நம்;புகின்றேன்.
எடுப்பது துடக்கென்று விலக்கிவிட்டு இரயாகரனின் கூற்றின் படி இந்தியாவின் கைகூலிகளாக இருந்த ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கத்திடம் ஆயுதப்பயிற்சி எடுத்திருந்த வரலாற்றை மறந்துதான் போனாரா?… (இவ்வாறு பயிற்சி எடுத்தார்களா எனத் தெரியவில்லை இருப்பினும்) ஒரு விடுதலைப் அமைப்பில் பலவிதமான சக்திகள் இருந்திருக்கின்றது. அவ்வாறே அன்று ஈ.பி.ஆர்.எல்.எவ் இல் பரட்சிகர சக்திகள் இருந்திருக்கின்றனர். இவர்களின் ஒன்றிணைப்பு என்பது அவசியமானதாகும். இவ்வாறான சக்திகள் மத்தியில் தொடர்புகள் உதவிகள் பெறுவதில் என்ன தவறிருக்கின்றது. நீங்கள் பயிற்சியைப் பற்றி கதைக்கப் போய் தோழமை பற்றி கதைப்பதாக நீங்கள் எண்ணத் தேவையில்லை. அன்றைய காலத்தில் பல திசைப் பிரிவுகள் இயக்கத்தினுள் இருந்தன. இவர்களிடையேயான ஒற்றுமை என்பது தலைமைகளின் சுயநலப் போக்கிற்கு அப்பாற்பட்டு இருந்தது. சுயநலமற்றவர்களின் கூடாரமாகவும் இருந்தது. இதனைத் தவிர வரதர்> டக்கிளஸ்> சுரேஸ் போன்றவர்களின் பதவிவெறி குழிபறிப்;பு இவைகளும் இருந்தன. இந்த முரண்பாடுகளுக்கு நடுவே இருந்து நட்புறவு செயற்பாடுகள் உங்களுக்கு துடக்காக இருப்பதில் ஆச்சரியம் இல்லை.
“சமூக ஏகாதிபத்தியம் என்றும்இமுதலாளித்துவத்தை நோக்கிய சீனா என்றும் அன்று ஒருவருக்கொருவர் முரண்பட்டு கொண்ட பாரம்பரிய இடது சாரிகள் பலரும் இன்று தம்மை சுயவிமர்சனங்களுக்கு உட்படுத்தி வருகிறார்கள். ” இவ்வாறான முரண்பாடுகள் வரலாற்றில் இருந்தது. இதனை அறியாது நீங்கள் இருப்பதுதான் ஆச்சரியமாக இருக்கின்றது. இவ்வாறான முரண்பாடுகளிடையேதான் புலிகளுக்கு ஏகாதிபத்தியம் எம்.ஜி.ஆர் மூலமாக நிதிவழங்க> இந்திய ஆட்சியாளர்கள் மற்றைய இயக்கங்களுக்கு உதவி புரிந்தனர். சமூக ஏகாதிபத்திய வரையறையானது 1990 பிற்பட்ட காலத்தில் உலகப் பிரிப்பதற்கு அந்த வரைவிலக்கணம் அவசியமற்றதாகி விட்டன.
நுனிப்புல் மேயவில்லை:
ரயாகரன் நுனிப்புல் மேயவில்லை. அவருக்கு ஆழந்த மார்க்சீய படிப்பு பரீட்சயம் இருக்கின்றது. முடிந்தால் மார்க்சீயம் பிழையானது என்பதை நிரூபியுங்கள்.
ரயாகரன் கதைப்பது மார்க்சீயம் தான் அது ஏன் மற்றவர்களிடம் இருந்து மாறுபடுகின்றது என்றால் மார்க்சீய புரிதல்களை தனிநபர் அபிலாசைகளின் பொருட்டான புரிதலில் அடிப்படையில் இருந்து வந்தவையல்ல. மாறாக மார்க்சீய வரலாற்று பொருள் முதல்வாத> இயங்கியலில் இருந்து புரிந்து கொள்ளப்பட்டதாகும்.
தம் இருப்பை பேணிக் கொள்ள புலிஆதரவு என்றும்> புலியெதிர்ப்பென்றும் மார்க்சீயம் பேசியவர்கள் குடிகொள்ள ரயாகரன் போன்றவர்கள் தனித்தனி தீவுகளாக இருந்து ஈழத்தில் மார்க்சீயத்தை திரித்துக் கூறுபவர்களுக்கு எதிராக கடந்த 20 வருடங்களாக எழுதிவருகின்றார்.
“மாக்சிச சித்தாந்தம் என்பதும் ஒரு இயங்கியல் நோக்குடையது.அந்த வகையில் காலம்ää சூழல். இவைகள்தான் எவ்வாறு மாக்சிச சித்தாந்தத்தை பிரயோகிப்பது என்பதை கற்றுத்தர வேண்டும்” … இவற்றை புரிந்து வைத்திருக்கும் நீங்கள் ஈழப் போராட்டவரலாற்றில் நடைபெற்ற எதிர்ப்புரட்சிகரமான நடவடிக்கைகளை சீர்து}க்கிப் பாருங்கள் வேறு எங்கும் செல்ல வேண்டாம். ஈ.பி.ஆர்.எல்.எவ் நடைபெற்ற உட்கட்சிப் போராட்டங்களை எடுத்துப் பாருங்கள். இந்தியாவில் இருக்கின்ற போது நக்சல்பாரி அமைப்புக்களின் வெளியீடுகளை நீங்கள் மறைத்துப் படிக்க வேண்டிய நிர்ப்பந்தம் இருந்ததை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள். தடைசெய்யும் நிலைக்கு இருந்த போது இந்தியாவின் பக்கம் சார்ந்தீர்கள்எ என்பதை மறந்து விட்டீர்களா?
நீங்கள் ஈ.பி.ஆர்.எல்.எவ் வழிந்தவர்கள் உங்களால் என்ன புரட்சியை சாதிக்க முடிந்தது. ஆனாலும் நீங்கள் கூறும் உலகப்புரட்சி என்ற கருத்தியலுக்கு இங்கு யாரும் எதிரனாவர்கள் என்பது அர்த்தமல்ல.
நம்பிக்கை கொண்ட நீங்கள் புலிகளிடம் சென்று நாமும் சேர்ந்து போராடுவோம் என்று து}து அனுப்பியிருக்கமாட்டீர்கள்.
பின்னர் பிக்குணி சுட்டுக் கொல்லப்பட்டதும்>
பிரேமதாசாவின் அன்பு கிடைத்தது. வரலாறு. நீங்கள் என்ன செய்திருக்க வேண்டும். மக்களை நம்பி அல்லவா போராட்டத்தை தொடர்ந்திருக்க வேண்டும். எந்தப் போராட்டமும் எதிரிகளின் தயிவில் நடைபெற முடியாது. எமது பலத்தில் தங்கிநின்றே போராட்டத்தை கொண்டு செல்ல முடியும். இதை
“அதில் டக்ளஸ் தேவானந்தா அவர்களும் பிரதான பாத்திரம் வகித்திருந்தவர் என்பதும் உண்மை. ” தனிநபர் வழிபாடை அன்று எந்த இயக்கத்தவரையும் விடஈ.பி.ஆர்.எல்.எவ் இனர் எதிர்த்துவந்தனர். இவற்றிற்கு நேர் எதிராகத் தான் இன்று டக்கிளஸ் வழிபாடு இருக்கின்றது. இன்று புலிகள் தலைவனுக்கு நிகரான N
ஆயுதப்போராட்டத்தின் ஆரம்ப போராளிகளின் தானும் ஒருவர் என்பதால் இன்று மக்கள் அனுபவித்து வரும் அவலங்களுக்கு தானும் தார்மீகப்பொறுப்பை எடுப்பதாக டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பகிரங்கமாகவே கூறி வருகின்றார். ”
சரி இது உண்மையாயின் வையுங்கள் பிரச்சனைக்கான தீர்வை
யுத்தத்தை நிறுத்தக் கோருங்கள்.
சில பத்து உறுப்பினர்களைக் கொண்ட ஒரு அதிகார வர்க்கத்திற்காக ஒரு மக்கள் கூட்டம் அழிய வேண்டுமா? இவைகள் நீங்கள் படித்த மார்க்சீயப் புத்தகத்தில் இல்லையா? டக்கிளஸ் வசதிக்காக மறைத்துவிட்டாரா?
புரட்சி பேசிய ஈ.பி.ஆர்.எல்.எவ் தோழர்கள் தமது உயிருக்காக தப்ப வேண்டிய நிலை இருக்கவில்லையா? டேவிட்சன்> ரமே9; போன்றவர்கள் கடத்தப்படவில்லையா?
ஈழப்போராட்டத்தின் சிந்தரவதைகளின் பக்கத்தை கொண்டுவந்த கேசவன் புளொட்டின் கொலை வெறிக்கு உள்ளாகவில்லையா?
நெப்போலியன் கொல்லப்படவில்லையா?
புலிகளால் செல்வி> மணியண்ணன்> கேசவன்> ரமணி> விசு> போன்றவர்கள் கொல்லப்படவில்லையா? இவ்வாறு இருந்திருந்தால் ரயாவும் மண்ணில் தான் புதைந்திருப்பார். மேலும் தனிமனித பாத்திரம் என்பது ஒரு எல்லைக்குள் தான் மட்டுப்படுத்தப் படுகின்றது. இவைகள் ஒரு மக்கள் சக்திகள் தமது அடக்குமுறையை உணர்கின்ற போது வெளியில் இருந்து கொடுக்கப்படுகின்ற சிந்தனை வடிவமும் முழுநிறைவடைகின்றது. ஆகவே ரயாவெளிநாட்டில் இருப்பதால் உங்கள் துப்பாக்கிகளின் குண்டு மிகுதியாகியிருக்கின்றது.
“தானும் வெளிநாடொன்றிற்கு வந்து புத்தகங்களை புரட்டிப்பார்த்து விட்டு நிறம் நிறமாக கட்டுரைகள் வரைந்திருக்கலாம். “இவற்றைப் பார்க்கின்ற போது புதுவை ரத்தினம் வெளிநாட்டவர்களைப் து}ற்றியெழுதிய கவிதைதான் நியாபகம் வருகின்றது. பரவாயில்லை அதிகாரத்தில் இருப்பவர்கள் நீங்கள் வெளிநாட்டில் உள்ளவர்களைப் பற்றி இழிவாக கருத்துக் கூற ஜனநாயகம் இடம்கொடுக்கின்றது.
இவர்கள் கொண்டிருப்பது அரச சார்பு நிலைப்பாடு என்பதற்கு அப்பால் அரசோடு ஒரு பொது உடன்பாடு என்பதுதான் இதன் அர்த்தம். ”
சொந்த மக்கள் சாகக் கண்டும் காணாது இருப்பதா?
“குறிப்பிட்ட தமிழ் தலைவர்கள் எவரும் தமிழ் பேசும் மக்களுக்கு அரசியல் தீர்வு வேண்டாம் என்று எப்போதாவது கூறியிருக்கிறார்களா?….அல்லது தமிழ் பேசும் மக்களின் அரசியல் தீர்விற்கு குறுக்காக இவர்கள் யாரும் விழுந்து படுத்த வரலாறு உண்டா?… இல்லை!
அதனைத் தான் நாமும் சொல்கின்றோம் எதிரி வைக்கின்றான் இல்லை ஏமாற்றுகின்றான் என்று நாம் கருதுகின்றோம். புலியெதிர்ப்பாளர்களாகிய நீங்கள் தீர்வுத் திட்டத்தை வையுங்கள். தீர்வுத் திட்டத்தில் முன்வைத்து உங்களை நிரூபியுங்கள். இன்றைய நிலையில் இதுகூட அவசியமானதுதான். வையுங்கள் தீர்வுத் திட்டத்தை…….!
“யாருடன் பேசி இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டுமோ அவர்களுடன்தான் அவர்கள் பேசி வருகின்றார்கள். ”
இது எவ்வாறு சாத்தியமாகின்றது.? குறிப்பாக ராஜபக்சகுடும்பத்தின் ஆதிக்க முகம் என்பது சந்திரிக்காவின் ஆதிக்க முகத்தை விட மாறுபட்டது. இவர்கள் இன்று ஜனநாயக விழுமியங்களை நசுக்குவதில் ஒப்பிட்ட ரீதியில் கடுமையாக செயற்படும் ஒரு அரசாங்கம். இந்த அரசாங்கத்திடம் இருந்து உங்கள் கிழக்கு சகா கோரிக்கை விடுகின்றார். பொலீஸ்படை வேண்டும்> காணி> வரி விதிப்பு போன்ற உரிமை வேண்டும் எனக் கூறுகின்றார் என்ன நடந்தது. மறுபடியும் பிரித்தாளும் தந்திரம் கருணா எதிர் பிள்ளையான் என்ற நிலைக்கு மாற்றம் கட்டுள்ளது. (இவர்களுக்குள் இருக்கும் உட்பூசல் ஒருபுறமிருக்க) உங்களால் சாத்தியமாகின்றவைகள் ஏன் கிழக்குவிடிவெள்களிகளால் முடியவில்லை. இது என்ன மாயாஜாலம் எனக் கூறுவீர்களா?
யாழில் நடைபெற்ற கொலைகள் இருக்கின்றன .
தீவுப்பகுதியில் இடம்பெறும் பலவிரோதச் செயல் பற்றி உங்களுக்கு நன்றாகவே தெரியும். நாமும் தீவுப் பகுதி மாத்திரம் அல்ல இலங்கையில் பலபாகங்களில் உள்ள மக்களின் உணர்வலைகளைப் புரிந்துதான் எழுதுகின்றோம். புலியெதிர்ப்பு அணி> புலிகள்> அரசபடை இவைகளுக்கிடையோன உறவு எவ்வாறு இருக்கின்றது என்ற கள நிலையை சரியாக புரிந்து கொண்டுதான் எழுதப்படுகின்றது. மக்களுடன் பேசாதவர்கள் அல்ல. மக்களுடன் அன்றாடம் அவர்களின் அவலநிலையை அறியாது எதனையும் எழுதவில்லை.
“தயாகத்தில் வாழும் உங்கள் உறவுகளிடம் ஒரு முறை பேசிப்பாருங்கள். அந்த மக்கள் நீங்கள் கற்பனை செய்யும் உலகப்புரட்சிக்காகவா ஏங்கிக்கொண்டிருக்கிறார்கள்?.. மக்களின் அழிவை போக்கத்தான் யுத்த நிறுத்தத்தைக் கோருகின்றோம்.
“சோவியத்தில் நடந்த 5 ஆம் ஆண்டு புரட்சியில் இருந்து 17 ஆம் ஆண்டு புரட்சி வரை பாராளுமன்றத்தில் தங்கியிருந்த விளாதிமிர் இலியிச் லெனின் உங்களுக்கு சந்தர்ப்பவாதி.யப்பனை எதிர்த்து போராடுவதற்காக சீனத்து தேசிய முதலாளித்துவ சக்திகளோடு கரம் கொடுத்து நின்ற மாவோ சேதுங் அவர்களும் உங்கள் பார்வையில் சந்தர்ப்பவாதி! அதற்காக எமது தேதசத்து சூழலோடு இவைகளை ஒப்பீடு செய்து விட முடியாதது. ” முன்னர் பிரேமதாசாவுடன் குடித்தனம் நடத்திய புலிகள் இதைத்தான் சொன்னார்கள். குடித்தனம் நடத்த வேண்டும் என்றால் நீங்களும் மாவோ> லெனின் என உதாரணம் காட்டலாம்.
மக்கள் சலுகைக்காக பிச்சை எடுக்க வேண்டுமா?
ஒரு அரசாங்கம் மக்களுக்கான பாதுகாப்பு> வேலை> உணவு வழங்குவது அவசியமானதாகும். இவற்றை கொடுக்கத் தகுதியில்லாத நிலையில் இருக்கின்ற போது பிச்சை எடு என்று கூறுவது என்ன நியாயம். அரசாங்கம் என்பதே ஒரு ஒடுக்குமுறைச் நிறுவனம் அது மக்களை அடக்கும் அதனிடம் கேட்டு வாங்குவதால் சில பணக்கட்டுகள் தனிநபர்கள் பக்கம் மாறுகின்றது. இதனை சரியாகத் தெரிந்துதான் கூறுகின்றேன்.
“புலிகள் உட்பட தமிழ் பேசும் தலைமைகள் ஒரு ஆராக்கியமான சூழலை நோக்கி நகர்த்த முற்பட்டிருந்தார்களா என்பதுதான் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கேள்வி. ”
“1.இலங்கை அரசே! யுத்தத்தை நிறுத்து!
2.புலிகளே! மக்களை விடுவி!
3.சர்வதேச சமூகமே! மக்களை பொறுப்பெடு!
4.புலிகளே! மக்களை விடுவியுங்கள்! நீங்கள் உங்கள் வழியில் போராடி மீளுங்கள்!
என்பவை உள்ளடங்கியது. இதை புலிகள் இன்ற ஏற்பது> காலம் பிந்திய ஒருநிலை. இதனால்இ யுத்தத்தை நிறுத்தாது அல்லது தற்காலிமான நிலைக்குள் இவை நிறைவேறியுள்ளது.
தவறான காலத்தில்இ சர்வதேச நெருக்கடிக்குள் இந்த நிலைக்குள் புலிகள் வந்தது என்பதுஇ தவறான கோசத்தினதும்இ அதன் மூலமாக முன்னெடுத்த போராட்டத்தின் ஒரு விளைவாகும். தமக்குத்தாமே விலங்கை போட்டனர்.(hவவி://றறற.வயஅடைஉசைஉடந.நெவ/னைெநஒ.pரி?ழிவழைnஃஉழஅ_உழவெநவெரூஎநைறஃயசவiஉடநரூனைஃ5287:2009-02-25-09-13-19ரூஉயவனைஃ277:2009)
தற்காலத்தில் ஏற்பட்டுள்ள சர்வதேச சதி பற்றிய எச்சரிக்கையை உணர்கின்றோம். இதனை மக்களிடத்தில் கூறுகின்றார். ஆனால் சர்வதேச சதியில் எமது உரிமைகள் நசுக்கப்படப் போகின்றது என்பதை நீங்கள் உணரவில்லை. இவைகள் உங்களுக்கும் ரயாகரனுக்கும் உள்ள பெரும் வித்தியாசம்.
இந்தக் கோரிக்கைகள் எல்லாம் குண்டுச் சட்டிக்குள் குதிரை ஒட்டுவதற்காக அல்ல. அடுத்த கட்டத்திற்கு எவ்வாறு நகர்வது என்பது பற்றிய தேவையில் இருந்து வருகின்றது.
ஒடுக்குபவர்களிடம் இருந்து எமக்கு எதுவும் சும்மா கிடைக்கப் போவதில்லை. எமக்கு வேண்டியது சில சலுகைகள் அல்ல. உரிமை!
இன்று மக்கள் யாருடனாவது சார்ந்திருக்க வேண்டிய கட்டாய நிலை இந்த பரிதாபகரமான நிலையானது ஒன்று அவர்கள் விரும்பி ஏற்றது அல்ல. நிர்ப்பந்தம் அரச அடக்குமுறையாலும்> புலிகளின்> ஏன் உங்களின் அடக்குமுறையாலும் ஏற்பட்டதே. உங்களை பயம் கொள்ளாது இருக்க முடியுமா? மக்கள் உங்களைப் பார்த்தும் பயப்படுகின்றார்கள். இதனை நாம் கண்ணால் கண்டோம்.
மேலும் ரயாகரன் மீது அரசியலுக்கு அப்பாற்பட்டு தனிமனித தாக்குதல்கள் உங்கள் எழுத்துக்களில் தெரிகின்றது. இவைகள் ஏற்றுக் கொள்ள முடியாது. ரயாகரன் நாட்டில் இருந்திருந்தால் உங்கள் துப்பாக்கிக்கு இரையாகியிருப்பார்.
ஒரு அமைப்பு உருவாக்கம் என்பது தனி ரயாகரன் அல்லது எக்ஸ் என்ற நபர்களை தங்கியிருப்பதில்லை. வரலாறு தனது தேவையின் நிமித்தம் உருவாக்கிக் கொள்ளும். வாரும் வந்து அமைப்புக் கட்டும் என ஏளனமாக எழுதுவதன் மூலம் உமது உளவியல் தேவையை பூர்த்தி செய்து கொள்ளுங்கள்.
புலியெதிர்ப்பணிகளே தீர்வை முன்வையுங்கள். இதுதான் எம்முடைய தீர்வுத் திட்டம் என முன்வைக்கின்றது கூட இன்றைய நிலையில் அவசியமானது. வையுங்கள் நாமும் நியாயத்தின் பக்கம் நிற்போம்.
எமக்கு வேண்டியது பிச்சை அல்ல உரிமை!
வாழும் உரிமை வேண்டும் எனவே யுத்த நிறுத்தத்தை அறிவி!
உணவு வேண்டும் நிவாரணம் கொடு!
எமக்கு தெரிவு செய்யும் உரிமை வேண்டும் புலிகளே ஏகக் கொள்கையை விடு!
தீர்வு வை> பேச்சுவார்த்தைக்கான நிகழ்ச்சி நிரலை தயாரி!
ஆயுதங்களை காட்டி எம்மை பயமுறுத்தாதே - முடக்கு ஆயுதங்களை !
எம்உறவுகளைப் பிரிக்காதே எமது உறவுகளுடன் இணையவிடு!
Kommentar veröffentlichen