Samstag, 14. März 2009

ஐயா ஜெயபாலன்...

சேனனது பேட்டியைச் சோதிலிங்கம் கண்டு, தேசம் நெற்றில் விட்டிருக்கிறார்கள்.அதற்காககான எதிர்வினையை நாதன் தொடர்ந்து ஆற்றியபோது,அங்கே-இஃது மறுக்கப்படுகிறது-சுருக்கப்படுகிறது.ஜெயபாலனது கருத்தியல் தளமானது மிகவும் விரோதமான தளத்தைக் கொண்டிருக்கிறது?
இது,ஆரோக்கியமானதாகத் தெரியவில்லை.




எனவே, அப் பேட்டிக்கான விமர்சனத்தின் முழுமையும் இங்கே பிரசுரமாகிறது.


-உடைப்பு.







வணக்கம், ஐயா ஜெயபாலன்!

மீளவும் எழுத்தில் கைவைத்து விட்டீர்கள்.

ஏன் ,ஐயா உமக்க இந்த வேலை?

உமது புலமையை,வேறு நபர்களிடம் காட்டும்.

கீழ் எழுதியவற்றிற்கு,வினவு தளத்தின் தொடர்பை இணைத்திருந்தேன். தவிர்த்து விட்டீர்கள்.

பரீஸ் போராட்டம் பற்றி எழுதியிருந்தேன்,
உமது கருத்துப்பகுதியில் அதனைப் போடவில்லை.


உமது தளத்தில் இருக்கும் வாசகர்களுக்கு,
ஏன் தெரிவுச் சுதந்திரத்தை வழங்க மாட்டேன்
என்று அடம் பிடிக்கின்றீர்கள்?
ஒரு அமைப்பு உருவாக்கத்திற்கு குறுங்குழுவாதம் எவ்வாறு ,-தடையானது -ஒரு விடயமோஅதே போலதான், கருத்துக்களை மறைப்பாதாகும்!

இதற்கும், புலி கூறும் "ஏக" கருத்துக்கும் மாறுபாடு இருக்கின்றதா?
கருத்துகள் முட்டி மோதுகின்ற போதுதான் சரியான கருத்துக்களை வாசகர்கள் பெற்றுக் கொள்வார்கள். இந்த அணுகுமுறை தங்களிடம் இல்லாது ஏன்?
நீங்கள், அனுமதிக்கும் கருத்துக்கள், "வெறும் புலம்பல்கள் அல்லது அலட்டல்" கருத்துக்களை அனுமதிக்கும் நீங்கள்-ஒரு, கருத்தை முன்வைத்து ஒருவர் எழுதுகின்ற போது, முரண்பாடு இருப்பினும் வாசகனுக்கு அடைய வைப்பதுதான் மக்கள்நலன் கொண்ட ஊடக தர்மம்.

நீங்கள், உங்கள் மனவிருப்புக்கமைய கருத்துக்களை வெளியிடுகின்றீர்ள்.

இவை எமக்கு ஆச்சரியம் இல்லை. மாறாக, வாசகர்கள் இவ்வாறான ஜனநாயக மறுப்புக்களை அறிந்து கொள்ள வேண்டிய நிலை இருக்கின்றது.
இன்று, நேற்றல்ல புலிகளின் ஒற்றை அமைப்பு சிந்தனை கொண்ட நாட்களில் தெடாங்கி, மாற்றுக் கருத்துக்கு மக்களை அனுமதிக்கவில்லை. தான் விரும்பிய கருத்தைக் கூற ஒரு மனிதனுக்கு முழு உரிமையும் இருக்கின்றது. இதனை ஏன் தடைசெய்கின்றீர்கள்?
உங்கள் இணைய தளம் உங்கள் தனிச்சொத்து. அதில் உங்களுக்கு சொத்துரிமை உண்டு.

ஆனால் கருத்துக்கு மாற்று கருத்துக் கூறும் உரிமையை தடுப்பதற்கு அல்லது. அந்த கருத்தை வெட்டிக் கொத்துவதற்கு எவருக்கும் உரிமை இல்லை.
ஒருவர் இந்த தளத்தில் தான் எழுத வேண்டும் என்ற வரையறையும் இல்லை.

பொது மேடைகளில் பொறுப்புணர்வுடன் எவரும் எந்தக் கருத்தையும் முன்வைக்க முடியும்.

முன்னர் குறிப்பிட்டபடி,

நீஙகள் விரும்பும் முதலாளித்துவ ஜனநாயக சொல்லாடல்களுக்கு அமையவே எமது கருத்தை முன்வைக்கின்றோம்.
ஆயிரம் பூக்கள் மலரட்டும் வழிவிடுங்கள்...




***********************************************

சேனனது பேட்டிக்கான எதிர்வினையின் முழுமை:

http://thesamnet.co.uk/?p=8578



வன்னி மக்களுக்கான தமிழக மக்களின் போராட்டமும் தமிழக அரசியலும். -CWI உறுப்பினர் சேனனுடன் உரையாடல் : ரி சோதிலிங்கம்அவர்களின் பேட்டிக்கு ஒரு குறிப்புதமிழ் நாட்டில் குரல் கொடுக்கின்ற சக்திகளைப் பற்றிய செய்தியை இங்கு தருவது பொருத்தமாக இருக்கும்.

தமிழ் நாட்டைப் பொறுத்தவரை ம.க.இ.கவினரும் அவர்களின் தோழமை அமைப்புக்கள் இருக்கின்றன.

செங்கொடி (மா.லெ)
தீப்பொறி பத்திரிகை (மா.லெ வினோத் மிஸ்ரா)

மக்கள் யுத்தக்குழு

இவ்வாறான மாக்சீயக் அமைப்புகள் இருக்கின்றன. இதில் குறிப்பாக ம.க.இ.க ஒப்பிட்டளவில் தமிழகத்தில் செல்வாக்கை கொண்டிருக்கின்றது. ம.க.இ.க வினர் தில்லையில் தீட்சதர்களை வெற்றிகொள்வதற்கு சிவனடியார் ஆறுமுகம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற கோவில் போராட்டங்களுக்கு பங்களித்தனர். இன்று வெற்றியும் பெற்றுள்ளனர்.

இவைகள் செய்தியாக


இவ்வாறு மா.லெ இருக்கையில் சிவபக்தரான ஆறுமுகம் ஐயாவிற்கு தெரிந்திருந்த மா.லெ அமைப்பினரை வர்க்கப் புரட்சியை விரும்பும் உறுப்பினருக்கு தெரியாததை இட்டு வேதனைப் பட வேண்டியிருக்கின்றது.
இவை தெரியாமல் விட்டதற்கு குறுங்குழுவாதமே காரணம் எனக் கொள்ள முடிகின்றது. புலிகள் எவ்வாறு குறுங்குழுவாதிகளாக சீரளிந்தார்கள் என வரலாறு நமக்குக் காட்டிள்ளது. அடுத்தபாதையை உருவாக்கிக் கொள்வதற்கு குறுங்குழுவாதமும் ஒரு காரணமாகின்றது. "புலம்பெயர் குழுக்களின் அரசியல்.

மூன்றாவது அணியும்; மூக்கணாங் கயிறும்." சிறிரங்கன் ஒரு அமைப்பு உருவாக்கம் பற்றிக் பேசுகின்ற போது. இவ்வாறான குழுங்குழுவாதம் எவ்வாறு பாதமானது என்பதை தெரியப்படுத்துவது அவசியமானதாகும்.


ம.க.இ.கவினர் தில்லை வெற்றியின் போது தாம் நடத்திய போராட்டத்திற்கு பா.மா.க, வி.சிறுத்தைகள், பெ.தி.க போன்ற நட்புச்சக்திகள் பங்குபற்றினர் என தமது அறிக்கைகள் செய்திகளில் தெரிவித்தனர். இவ்வாறான பண்பை நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.ம.க.இ.க நடத்திய ஈழ ஆதரவுப் போராட்டங்களை பலதளங்களில் சென்று பார்க்க முடியும். உதாரணத்திற்கு http://vinavu.wordpress.com/2009/03/13/eelam29/



-நாதன்

Mittwoch, 11. März 2009

பரீஸில் நடைபெற்ற போராட்டமானது...

அடிப்படை உரிமை??


இலங்கைத் தமிழர்கள் மட்டில் பெயருக்காகவோ அல்லது தனது அரசியல் அந்தஸ்தின் பொருட்டோ புலிகளுக்கும், அல்லல்படும் தமிழ் மக்கள் மீது ஆதரவுக் கருத்துக்களை தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர். ஈழத்தமிழர்களுக்கு ஆதரித்தால் குண்டர் சட்டம், பொடா,தடா என பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் பயன்படுத்தப்படும் என எச்சரிக்கின்றனர்.

இன்று காலாவதியாகிவிட்ட புஸ்தலைமையில் அமைந்திருந்த அமெரிக்க ஆட்சியார்களால் புரட்டாசி 11 க்குப் பின்னர் உலகில் பலபாகங்களில் உள்ள நாடுகள் அனைத்தும் அமெரிக்க தேசத்தின் அழுத்தத்தின் காரணமாக பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை இயற்றி வந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக இந்தியாவிலும் எல்லை கடந்த பயங்கரவாதத்தை அடக்கிக் கொள்வதற்காக சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இச்சட்டம் தற்பொழுது பயன்படுத்தத் தொடங்கி விடப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தைப் பயன்படுத்திக் கொண்டு எவரையும் கைது செய்து விட முடியும். இச்சட்டம் எல்லா நாடுகளிலும் சாதாரண மக்கள் எதிர்க் கருத்து கொண்டிருந்தாலே போதும், அவர்களை கைது செய்ய முடியும் என்ற நிலையில் சட்டத்தில் இடம் உள்ளது. இந்தச் சட்டம் பயங்கரவாதிகளை அடக்கவென உருவாக்கப்பட்ட சட்டம் என்கின்ற போது போராடும் இனவகைகளைப் பாதிக்கக் கூடியதாகும். இந்த வகையில் மனித உரிமை சம்பந்தப்பட்டதாகும். இதன் காரணத்தினால் இவ்வகை பயங்கரவாதச் சட்டம் என்பது ஒரு உள்நாட்டு சட்டப்பிரச்சனை எனக் கொள்ள முடியாது. இது ஒவ்வொரு முற்போக்கு சக்திகளும் எதிர்க்க வேண்டும், அதன் மூலம் ஒடுக்கப்படும் மக்களுக்கு ஆதரவைத் தெரிவித்துக் கொள்வதாகும். ஜோஜ்புஸ்தலைமையில் அமைந்திருந்த அமெரிக்க ஆட்சியார்களால் உலக ஒழுங்கு உருவாகப்பட்டது. இதன்படியே எல்லா நாடுகளும் பயங்கரவாத இவ்எதிர்ப்புச் சட்டத்தையும் மேலதிகமாக உருவாக்கிக் கொண்டனர்.

இலங்கைப் பிரச்சனையில் பலகட்சிகளும் தத்தம் நலனை கவனத்தில் கொண்டு
செயற்படுகின்றனர். இவற்றினுள் மக்கள் கலை இலக்கியக் கழகம் (தோழமை அமைப்புகள்)
மாத்திரமே இலங்கை மக்களுக்கான விடிவின் அடிப்படையில் இருந்து செயற்படுகின்றனர்.
இவர்களின் செயற்பாட்டைப் பற்றி புலிகளின் ஆதரவாளர்கள்,புலிகள் இவர்களின்
செயற்பாட்டை வெளிக் கொணர்வதில்லை. இன்றையக் காலத்தில் ம.க.இ.க மீதுதான் பிரச்சனையை
தமிழக மக்களுக்கு முழுமையாக கொண்டு செல்லும் அரசியல் பார்வை இருக்கின்றது. இவர்கள்
தமது சொந்த நாட்டிலே தமது உரிமைக்காக போராட வேண்டியவர்களாக இருக்கின்றனர்.


இன்று ஈழமக்களுக்கான நம்பக சக்திகளாக போராடிக் கொண்டிருப்பவர்கள் தமிழகத்தில் வாழ்பவர்கள் உரிமைகள் மட்டுப்படுத்தப்பட்ட நிலையிலேயே அங்கே வாழ்கின்றனர். அகதிகளாக உள்ள மக்களுக்கு உதவி செய்யத் துடிக்கும் தமிழக மக்களுக்கு துன்பத்தை கொடுத்து வந்துள்ளன ஆட்சிக்கு வந்த கட்சிகள். தமிழக மக்களே துன்பத்திற்கு உள்ளாக்கப்பட்டு சிறையில் அகப்பட்டனர். இவ்வாறான கெடுபிடிகள் எல்லாம் பயங்கரவாதிகள் அகதிகளுடன் சேர்ந்து வந்து விடுவர் என்று காரணம் கூறப்பட்டது. இருந்த போதும் அன்று தொடக்கம் இன்றுவரை தமிழ் மக்களின் நலனுக்காக குரல் கொடுத்துக் கொண்டும், உழைக்கும் மக்களுக்காக போராடி வரும் அமைப்புக்களை அடுத்ததாக இந்த சட்டத்தின் மூலமாக ஒடுக்க முடியும். காங்கிரஸ் கட்சியை கலைஞர் திருப்திப்படுத்தும் நோக்கோடு ஏவப்படும் பாதுகாப்பும் படையும், சட்டங்களும் ஈழ ஆதரவுச் சக்திகள் மீது பாய்கின்றனர். உலகத் தமிழர்கள் என்று கூறிக் கொள்ளும் கலைஞர் இன்று தனது குடும்பத்தவர்களுக்கு பதவிகளை பெற்றுக் கொடுக்கவும், குடும்ப மூலதனத்தை வளம்படுத்தும் நோக்கில் அமைந்து செயற்பாடுகளால் இன்று ஈழத்தமிழர்களிடம் செல்லாக்காசாகி விட்டார்.


ஈழத் தமிழ் மக்களுக்காக போராட வேண்டும் என்றால் அந்தப் போராட்டத்தை
நடத்துவதற்குக் கூட உரிமை மறுக்கப்படுகின்றது. ஏன் திருமாவளவனுக்குக் கூட
கூட்டங்களை கூட்டுவதற்கு கட்டுப்பாடு விதிக்கப்படும் நிலையில் இவர்களுக்காக
உரிமைமறுக்கப்படுவது மற்றையவர்களை விட கடுமையானதாக இருக்கும்.


முதலாளித்துவ ஜனநாயக சமூகம் என்பது தேர்தலில் பங்குபற்றுவது,பேசுவதற்கான, எழுதுவதற்கான சுதந்திரம் போன்றவற்றை ஏற்றுக் கொள்கின்றன. இவ்வாறான அடிப்படைச் சுதந்திரத்தை முதலாளித்துவ ஜனநாயகம் அங்கீகரிக்கின்ற போது இந்திய ஆழும் வர்க்கம் நடைமுறையில் அழுத்தங்கள் கொடுத்து உரிமைகள் மீது தடையைப் போடுகின்றனர்.
கூட்டம் கூடுவதற்கு உருவாக்கப்படுகின்ற தடைகளை தமிழினத்தலைவர் காங்கிரஸின் நலன் கருதி மாத்திரம் இடையூறு செய்வதாக மாத்திரம் கருதிக் கொள்ள முடியாது. இவைகள் தொடர்ச்சியான தி.மு.காவில் உருவாகியுள்ள முதலாளிகளின் நலன்களும் காரணமாகின்றது.


கருத்துச் சுதந்திரம் மறுக்கப்பட்ட நிலையில் சீமான் சிறையில் அடைக்கப்பட்டார்.
இயக்குநர் சீமான் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக குற்றம்சாட்டப்பட்டு, தேசிய
பாதுகாப்பு சட்டம் என்கிற கடுமையான சட்டத்தின் கீழ் கைதாகிஇ புதுச்சேரி சிறையில்
இருக்கிறார். கொளத்து}ர்மணியும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இராஸ்வரத்தில் நடைபெற்ற கூட்டத்தின் பின்னர் இறையாண்மையைக் காட்டி பேச்சுத்
சுதந்திரத்தை மறுக்கின்ற நிலையில் பல கைதுகள் நடைபெற்றிருக்கின்றனர்.



இக்கைதுகள் மூலம் போராடும் மக்கள் மத்தியில் பயத்தைக் உண்டாக்குவதும், இதன் மூலம் போராட்டத்தின் வீரியத்தை அடக்குவதே தமிழக, மைய ஆட்சியாளர்களின் குறிக்கோளாக இருக்கின்றது. அதிகார வர்க்கத்திற்குரிய ஆணவத்துடன் திரு தங்கபாலு கூறுகின்றார் "சென்னை: வைகோ முரண்பாடுகளுக்கு சொந்தமானவர். இந்திய இறையாண்மைக்கு எதிரானவர். இந்தியன் என்று சொல்வதற்கே வைகோ தகுதியற்றவர் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு கூறினார்." ((http://thatstamil.oneindia.in/news/2009/03/10/tn-vaiko-is-unfit-to-be-an-indian-says-thangabalu.html ) இங்கு மறுக்கப்படுவது முதலாளித்துவ பொருளாதார அமைப்புக் கொடுக்க வேண்டிய பேச்சுரிமை இவற்றை மறுதலிக்கப்படுகின்றது.

இதேவேளை அரசியல் கோமாளிகளாக சுப்பிரமணிய சுவாமி> சோ போன்றவர்கள் எவ்வித கருத்துத் தெரிவித்தாலும் இவர்களின் கோமாளித்தனமாக கருத்துக்கள் அரசியல் ஆலோசனையாக அங்கீகரிக்கப்படுகின்ற வேளையில் மற்றவர்களின் பேச்சுரிமை மறுக்கப்படுகின்றது. சுதந்திர மறுப்பானது நிர்வனமயமாக்கப்பட்டிருப்பதையும் அவதானிக்க முடிகின்றது. அதாவது இவர்களை எல்லாம் பேச விட்டது தவறு> சூத்திரர்கள் பேச கற்றுவிட்டால் இன்னும் பிரச்சனை உருவாகும் என்ற கருத்தானது நிறுவனமயப்படுத்தப்பட்டிருப்பதைத் தான் சுப்பிரமணியின் மீதான முட்டையடியும், பின்னரான பொலிசாரின் மிருகத்தனமாக தாக்குதலுமாகும்.

இவ்வாறே வங்காள விரிகுடாவில் கடல்தொழிலாளர் சிறிலங்கா இராணுவத்தால் கொல்லப்பட்டால் மீனவர்கள் என்றும், ஜம்மு காஸ்மீரில் ஒருவர் இறந்தால் பண்டித் என்றும் கூறி பிரச்சனையில் பாரபட்சமாக நடந்து கொள்வதாக உணர்கின்றனர். (உரிகைள் கொடுப்பதில் எவ்வாறு சாதியம் http://mathimaran.wordpress.com/ மாறுபடுகின்றது என்பதை பார்க்க)

இன்றைய உலகில் இருக்கின்ற அரசுகளிடம் குறைந்தபட்சம் முதலாளித்துவ ஜனநாயகத்தினைக் வழங்க முடியாத நிலையில் தான் மேற்குதேசங்கள் தவிர்ந்த அனைத்து கண்டங்களிலும் தென்படுகின்றது. முதலாளித்துவ ஜனநாயகம் வழங்கும் பேச்சு, எழுத்து, தெரிவு செய்யும் சுதந்திரம்,வாக்குரிமை என முதலாளித்துவம் சுதந்திரமாக கொடுக்கின்றது. இன்றும் குறிப்பாக கொல்ல வேண்டுமென்றால் மனிதனை மனிதன் சுரண்டுவதற்கும் உரிமை கொடுக்கின்றது.

குறைந்த பட்ச கோரிக்கைகள்:

குறைந்த பட்சமாக இருக்கின்ற முதலாளித்துவ பொருளாதார அமைப்பில் மக்களுக்கு கொடுக்கக் கூடிய உரிமையை கொடுப்பற்கு மறுக்கின்றனர். இங்கே இரண்டு விடயங்களைப் பார்க்கின்றோம்.


1. அடிப்படைச் சுதந்திரம்
2- முதலாளிகளுக்கிடையே தத்தம் மக்களை சுரண்டுவதற்காக
சுதந்திரம்.

ஒன்று வன்னியில் மக்கள் வாழ்வதற்கான உரிமையை இழந்தது மாத்திரம் அல்ல அம்மக்கள் தமிழர் என்ற காரணத்திற்காக நித்தமும் கொல்லப்படுகின்றனர். இந்த அடக்குமுறைக்கு எதிராக தமிழகத்தில் போராடுகின்ற தமிழக அமைப்புக்களுக்கும்> தனிநபர்களுக்கும் வாய்ப்பூட்டு போடும் நிலையில் அங்கு அடிப்படைச் சுதந்திரம் மறுக்கப்படுகின்றது. இதில் குறிப்பாக புலிகளின் ஆதரவாளர்கள் என்ற காரணத்திற்காக அடிப்படை உரிமை மறுக்கப்படுகின்றதை நிர்வனமயப்பட்ட நிலையில் ஏற்றும் கொள்ளும் நிலைதான் இந்தியக் கண்டத்தில் இருக்கின்றது.
இந்த நிலையில் போராடுகின்றவர்கள் குறைந்தபட்சம் மக்கள் நலனில் இருந்து கோரிக்கைகள் முன்வைக்க வேண்டும். இதில் சுயநிர்ணய உரிமை என்பது அந்தந்த இனத்தின் வர்க்கங்களை சுரண்டுவதற்காக உரிமையை பெற்றுக் கொள்வதுதான். ஆனால் இங்கு இனம் என்ற வகையில் பாதிக்கப்படுவது சாதாரண மக்களே. இதனால் மக்களுக்கான ஜனநாயகக் கோரிக்கையாக முன்மொழியப்படுகின்றது. இதை மறுத்து நிற்கும் முதலாளித்துவ சமூக உறவிற்கு அமைய இனங்களுக்கு கொடுக்கக் கூடிய சுயநிர்ணய உரிமை இவைகளை கொடுக்க மறுப்பதுடன் தனது ஆயுதங்களினால் அடக்குகின்றது.


இனவொடுக்குமுறையை மேற்கொள்கின்ற சிறிலங்கா அரசும், அதன் பங்காளிகளாக தமிழ்
இயக்கங்களும்,புலிகளும் மக்களின் அடிப்படை உரிமையை மறுதலித்துக் கொண்டுதான
இருக்கின்றனர். இந்தக் காலகட்டத்தில் குறைந்தபட்சமாக மக்களின் ஜனநாயக உரிமையை
வலியுறுத்தும் கோரிக்கைள் முன்வைப்பது அவசியமானதாகும். பாதிக்கப்படுவது அதிகார
வர்க்கம் அல்ல. பாதிக்கப்படுவது பொதுமக்களே இவர்களைப் பாதுகாக்க வேண்டியது
அவசியமானதாகும்.

இந்த வகையிலேயே பரீஸில் நடைபெற்ற போராட்டமானது குறைந்தபட்ச கோரிக்கையை முன்வைக்கப்படவில்லை என விமர்சிக்கப்படுகின்றது. குறைந்தபட்ச ஜனநாயக் கோரிக்கையை ஏற்றுக் கொள்ளாத இடத்தில் போராட்டத்திற்கு ஆதரவு கொடுப்பது முடியாத காரியமாகும். குறிப்பாக சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தியதான கோரிக்கைகள் கூட அங்கு வைக்கப்படவில்லை. இதனைத் தான் விமர்சின்றார் தோழர் ரயாகரன்.

தமிழகத்திலும், புலம்பெயர்ந்த நாடுகளிலும், இலங்கையிலும் உழைக்கும் மக்களின் ஆதரவுடன் போராட்டம் நடத்தப் படவேண்டும். இவ்வாற நிலையில் தமிழகத்தில் உழைக்கும் மக்களுக்காக குரல் கொடுக்கும் சக்திகளே ஈழத்தில் இருக்கின்ற மக்களை இனத்துவ வேறுபாடுகள் இன்றியும், சுயநிர்ணம் பெற்றும் அனைத்துவிதமான ஒடுக்குமுறைக்கும் எதிராக போராடுவதுடன் எமக்கு துணை நிற்கக்கூடிய சக்திகளாகும். தமிழக அரசியல் கட்சிகளில் இனத்துவ ரீதியில் குரல் கொடுக்கும் சக்திகள் இனத்துவ வரையறைக்குள் நின்று விடுகின்றனர். இவ்வாறான வேளையில் பயங்கரவாதச் சட்டத்தின் மூலம் உண்மை நட்புச் சக்திகளையும் இவ்வாறான சட்டத்தை பயன்படுத்தி பழிவாங்கி சிறையில் அடைத்துக் கொள்ளப்படுகின்றனர். எனவே ஒடுக்குமுறை சட்டங்கள் ஒவ்வொன்றையும் எதிர்ப்பது மனிதவர்க்கத்திற்கு சேவை செய்வதாகும்.

-நாதன்.

Samstag, 7. März 2009

இளையோர் அமைப்பை தீவிரவாதத்திற்குள்...

சர்வதேச சதிகள் :

யுத்தம் தொடங்கிய பின்னர் சவங்களை உற்பத்தி செய்பவர்களும் இன்றும் சவங்களை உற்பத்தி செய்ய வேண்டும் எனத்துடிக்கும் மனித விரோதிகள் தெளிவாகவே தெரிகின்றனர். இன்று நாளாந்தம கொல்லப்படும் மக்களும் அவர்களை இழந்து துடிக்கும் அவர்களின் உறவினர்களும் என்ன செய்வது என்று தெரியாது.


தடைக்கற்கள்...

இந்திய பிராந்திய வல்லரசானது தனது பங்கிற்கு புலிகள் மேற்கொள்ளும் யுத்தநிறுத்தினை ஏற்றுக் கொள்ள வேண்டும் என கூறிக் கொள்கின்றது. இந்திய மையஅரசு தனக்கும் இப்போ நடக்கும் யுத்தத்திற்கும் சம்பந்தம் இல்லை என்பது போல சில அறிக்கைகளை விட்டு விடுகின்றனர். இன்று நடைபெறும் யுத்தமானது கூட்டுச் சதியின் ஊடாக அனைத்துத் தரப்புக்களின் ஆசீர்வாத்துடன் நடைபெறுகின்றது.


மனிதத்தை கொல்பவர்களும் கொல்ல துணைபோகின்றவளும் பல்வேறு தளத்தில் இருந்து தத்தம் கடமைகளை செய்துகொண்டிருக்கின்றனர். ஆனாலும் சில செயற்பாடுகளை செய்வதில் சுயமாக முடிவெடுக்கவும்> கருத்துக் கூறவதை தெளிவாக முன்வைக்கும் நிலையில் அமெரிக்கா இருக்கின்றது. சர்வாதிகாரிகளை உருவாக்கும் இந்த வல்லரசு தென்கிழக்காசியாவில் நடைபெறும் மனித அலவலத்தை காட்டி தன்னுடைய நேசமுகத்தை தமிழ் மக்களின் இழப்புக்கள் மூலமாக காட்ட எத்தனிப்பதையே இங்கு கணிக்க முடிகின்றது. அமெரிக்கா தனது படையின் மூலம் புலிகளின்கட்டுப்பாட்டுப் பகுதியில் இருக்கும் மக்களை வெளியேற்றமுனைவதாக வந்த தகவலானது இந்தியா பிராந்திய வல்லரசின் நிகழ்ச்சி நிரலுக்கு அப்பால் சுயமாக எடுக்கப்பட்ட முடிவாகவே கொள்ள முடிகின்றது. இவ்வாறு சுயமாக எடுக்கும் முடிவினை அமெரிக்கா கொண்டுள்ளதையும்> இந்திய அதிகாரிகள் ஒப்புக்கு அறிக்கை விடுவதையும்> இந்தியாவின் ஆதரவு தமக்கு கிடைக்கும் என்பதை சிறிலங்கா அரசு திடமாக நம்புகின்ற நிலையில் இந்த யுத்தத்திற்கு அமெரிக்காவே நோpடையாக பின்னிக்கின்றது.

மகிந்த அரசானது போர் நிறுத்தத்தை நிராகரித்துள்ளதால் வன்னி மக்களைக் காப்பாற்ற எங்களால் எதுவுமே செய்யமுடியாது - நெதர்லாந்தின் ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவிப்பு

பூட்டப்பட்ட பூட்டானது சாவி இன்றி இருக்கின்றது. பூட்டைத் திறப்பதற்கு சாவியாரிடம் இருக்கின்றது என்பதை தெரிந்தும் தெரியாது ஒரு நாடகம் நடக்கின்றது. இவ்வாறு சர்வதேச சதிகள் தமிழின அழிப்பிற்கு துணைபோகையில் சர்வதேச ஒத்துழைப்பின் மூலமே சதியினை முடியடிக்க முடியும். இந்த போராட்டமானது உலகில் வாழும் உழைக்கும் மக்களின் ஒத்துழைப்புடன் நடைபெறவேண்டியதாகும். இதற்கான வழிமுறைகளையும்> செயற்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டிய நிலையில் இலங்கைப் பாட்டாளிவர்க்கத்தின் தலையில் சுமத்தப்பட்டுள்ளது.






இளையோர்:





இவர்களைப் பற்றி பலமுறை எழுதப்பட்டிருக்கின்றது. இருந்த போதிலும் அங்கு அழிக்கப்படுவது மக்கள் என்பதை ஏற்க மறுப்பவர்களாகவும்> சவங்களை உருவாக்கத் துணைபோகின்றவர்களாக புலியெதிர்ப்பாளர்கள் இருக்கின்றனர். இன்று புலம்பெயர்நாடுகளில் நமது மக்களுக்காக போராட்டத்தில் குதித்துள்ள இளையோர்கள் முன் தியாகிகளாக ஒரு விமானப் ஓட்டிகளான ரூபன் அல்லது சிரித்திரன் ; இவர்களோ பிரபாகரன் வீரர்களாக அல்லது உதாரண புருசர்களாகத் தெரிவர். இன்றைய இளையோர் பெரும்பான்மையானர்கள் இங்கு சிறுவயதில் வந்தவர்கள் மற்றும் இங்கு பிறந்தவர்களாவர். இவர்களுக்கு வரலாற்றினை தெரிந்து கொள்ளச் சந்தர்ப்பம் இ;ல்லை. இவர்களைப் பொறுத்தவரை அவர்கள் வாழும் காலத்தில் தமிழ் மக்களின் அவல நிலை என்ன> அவர்களுக்காக யார் போராடுகின்றார்கள் என்பதேயாகும். இவர்களுக்கு எமக்கு தெரிந்த 30 வருட கால வரலாறு இளையோருக்கு தேவையற்றதாக இருக்கின்றது. இளையோரின் போராட்ட உணர்வை புலியெதிர்ப்பாளர்கள் எவ்வாறு சொச்சைப்படுத்துகின்றார்கள் என்பதைப் பார்ப்போம்.

ஜெர்மனியில் உள்ள பிரித்தானிய அமெரிக்க ஜப்பான் தூதரங்கள் மீதான புலிகளின் வன்முறைகள்.

"இளையோர் அமைப்பை தீவிரவாதத்திற்குள் உந்திவிடும் புலிகளின் நடவடிக்கைக்ள்"

""இத்தகைய ஊர்வலங்களுக்கு இளம்பராயத்தினர் தற்போது முன்னிலைப்படுத்தப்படுகின்றனர். 24.02.09 அன்று ஜெர்மனி டுசல்டோர்வ் நகரத்தில் புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட ஊர்வலத்தில் பெருமளவு இளம்பராயத்தினர் புலிக்கொடிகளுடனும் பிரபாகரனின் புகைப்படங்களுடன் கலந்து கொண்டதுடன் பிரிட்டிஷ்இ மற்றும் ஜப்பான் தூதரங்களிற்கு எதிராக முட்டை வீசி தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர். அத்துடன் ஸ்ரீலங்காவின் தேசியக்கொடி எரிக்கப்பட்டு ராஜபக்ஷாவின் பொம்மை உருவம் பகிரங்கமாக எரிக்கப்பட்டிருக்கிறது. இது போன்ற நடவடிக்கைகளில் புலிகளினால் இளம்பராயத்தினர் பயன்படுத்தப்படுவதால்; மொத்த தமிழ்மக்கள் மீதான விமர்சனங்கள் ஏற்படும் எனவும் கருத்தரங்கில் முன்வைக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது. hவவி://வாநநெந.உழஅ/hவஅட/290209-4.hவஅட ""


இளையோரைப் பொறுத்தவரை வரலாறு தேவையற்றவையாக இருக்கின்றது. இளையோரின் தேசத்தின் மீதான பற்றுதல் மதிக்கப்பட வேண்டியதாகும். இவர்களைத் து}ற்றுவதால் தமிழ் மக்களுக்கான உரிமைப் போராட்டத்தை மழுங்கடிக்க முடியும் என்பதையே புலியெதிர்ப்பாளர்களின் அறிக்கை காட்டுகின்றது. இழையோர் அவர்களின் வயதுக்குரிய துடிப்புடன் போராடுகின்றார்கள். இவர்களை வழிநடத்துவதற்கு சரியாக அமைப்பு இல்லை என்பதே உண்மை. தவிர்க்க முடியாதகாரணத்தினால் தான் தலைவர்> தேசியம்> தமிழீழம் என்ற மட்டத்தினுள் இருந்து கொண்டு போராடுகின்றதினால் இவர்களின் உழைப்பு என்பது வீன் விரையமாகின்றது. முன்னர் கூறியதுபோல தேசத்திற்காக உயிரைக் கொடுப்பவர்கள் தான் உதாரண புருசர்களாக இருக்க முடியும். இழையோரின் போராட்டப் பாதையை நெறிப்படுத்துவதை விட்டுவிட்டு எதிரியுடன் துணைபோகும் குழுக்கள் ஒரு இந்த இழையோரின் உதாரண புருசர்களாக உருவாக மாட்டார்கள்.






இன்னெரு விடயத்தையும் இங்கு கவனிக்க வேண்டும். அதாவது போராட்டம் என்பது மாலை நேரவிருந்தல்ல போராட்டங்கள் பலவகை உண்டு. அதேவேளை உணர்வுகள் வெளிப்படுவதிலும் பல வகை உண்டு. இவைகள் அரசியல் உணர்விற்கேற்ப மாறுபடும். இன்று போராட்டத்தை ஐரோப்பிய வடிவத்தில் கொண்டு செல்ல வேண்டும் என எண்ணுபவர்கள் உண்டு. இவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்தச் சமூத்துடன் எவ்வித தொடர்பும் அற்றவர்களாக இருக்கின்றனர். குறிப்பாக புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் போது மேற்கொள்ளப்படுகின்ற இனவாதத்திற்கு எதிரான எந்தப் போராட்டங்களிலும் பங்கெடுக்காதவர்கள்> உலகில் போராடும் இனங்களின் போராட்டங்களுக்கு தார்மீக ஆதரவைக் கொடுக்காதவர்கள்> தொழிற்சங்கப் போராட்டங்களில் பங்கெடுப்பதில் ஆர்வமின்மை> வாழுகின்ற நாடுகளில் மேற்கொள்ளப்படுகின்ற பொதுப்பிரச்சனைக்கான போராட்டங்களில் பங்கெடுக்காதவர்கள் இவற்றை வெறுத்து ஒதுங்கினர். போராட்டத்தில் பங்கு பற்றினால் அவர்களைப் பற்றி கீழ்தரமாக கணித்துக் கொண்டனர்.


நாம் ஊர்வலங்களுக்கு செல்வதில்லை. அவ்வாறானவர்கள் வேறுவிதமான சிந்தனை கொண்டவர்கள்:

இடதுசாரி அமைப்புக்களுடன் ஏற்படுத்தப்படும் தொடர்புகளின் மூலம் தமது நலன் பாதிக்கப்படும் என ஒதுங்கியவர்கள். இடதுசாரிகளுடனான தொடர்பு என்பது தீண்டத்தகாத சாதியுடன் கூட்டு வைப்பது போல புலம்பெயர்ந்தவர்கள் பலரின் நிலைப்பாடு இருந்தது. ஏன் பிரித்தானிய தமிழர் பேரவையின் ஏற்பாட்டாளர்கள் தீபத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் தமிழர்களுக்கு என்று ஒரு பெயர் உண்டு அதனை காப்பாற்றுவது போல நடந்து கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனர். இதனையும் மீறி லண்டன் ஊர்வலத்தில சில அசம்பாவிதம் நடைபெற்றது. இவ்வாறான நிகழ்வுகள் கூட இவர்களின் போராட்ட விதிமுறைக்கு அப்பாற்பட்டதாக போராட்ட ஒழுங்கிணைப்பாளர்களுக்கு இருந்தது.


நாம் எமது மக்களுக்காக போராட வேண்டுமென்றால்; எமக்கு தார்மீக ஆதரவு பெறவேண்டுமென்றால் நாம் இந்த நாட்டவர்களுடன் சேர்ந்து இங்குள்ள பிரச்சனைக்களுக்காக போராடுவதன் மூலமே புலம்பெயர்ந்த நாடுகளின் பூர்வீக மக்களை ஆதரவாக இணைத்துக் கொள்ள முடியும். தொழிற்சங்கம் போராட்டம்> இனவாதத்திற்கெதிரான போராட்டம்> ஒடுக்கப்பட்ட மக்களுக்காக நடத்தப்படுகின்ற போராட்டம்> புலம்பெயர்ந்த நாடுகளில் நடைபெறும் போராட்டத்தில் பங்குபற்றுதல் வேண்டும்.


இன்று மக்கள் செத்துக் கொண்டிருக்கின்றார்கள் இவ்வேளையில் இங்கு நடைபெறும் போராட்டங்களில் பங்குபற்றுவது எப்போ? ஆதரவு திரட்டுவது எப்போ எனக் கேள்வி கேட்கப்படுவதும் இயல்பானதே. ஆனால் புலிகளின் ஆதரவாளர், ஆய்வாளர் எனக் கூறிக் கொள்ளும் பிரேம் என்பவர். மக்கள் மீது குற்றம் சுமத்துகின்றார். அதாவது கடந்த காலத்தில் தனியே இராணுவ வெற்றிகளை இட்டு சந்தோசமடைந்தவர்கள். (இதற்கு யூதர்களைப் போல மூலதனத்தைப் பெருக்கி பெரும் பணக்காரர்கள் ஆகி> மேற்கு அரச யத்திரத்தை அசைக்கும் அளவிற்கு பொருளாதாரத்தில் வளரும் படி தீர்வை முன்வைத்தார்.) இன்றைய இராணுவத் தோல்விகளை இட்டு விரக்தி கொள்வதற்கு மக்களே காரணம் எனக் கூறுகின்றார். மக்கள் தேசத்தின் விடுதலை பற்றி ஆழமாகச் சிந்திக்கவில்லை என்வும் கூறினார்.


ஆனால் புலிகளின் தலைமை மீதுதான் இந்த விமர்சகர் குற்றம் சுமத்தியிருக்க வேண்;டும் ஆனால் அதற்கு லாயக்கில்லாது அப்பாவிகளான மக்கள் மீது தனது வெறுப்பைக் காட்டினார். இவ்வாறானவர்களின் பேச்சுக்களை மாற்றியமைப்பதற்கு இங்கு வாழ்து போராடுவதன் மூலமே போராட்டத்திற்காக பாதைகளை நீங்கள் உணர்ந்து கொள்ள முடியும். எமது போராட்டம் இன்றோ நாளையே முடியப் போவதில்லை. இன்று சர்வதேச சதியினால் எமது மக்களின் போராட்டம் மழுங்கடிக்கப்படப் போகின்றது. உரிமைகள் மறுதலித்து> மழுங்கடிக்கப்படுகின்ற போகின்ற நிலையில் புதிய தலைமுறையாகி நீஙகள் நடைமுறைப் போராட்டத்தின் மூலம் உங்கள் எதிரிகள் யார் என்பதை போராட்டங்களே கற்குக் கொடுக்கும். வன்னியில் இனவழிப்பு யுத்தம் ஆரம்பித்த காலம் முதலே உங்கள் போராட்டத்திற்கு தகுந்த பலன்கிடைக்கவில்லை என உங்கள் மனம் குமுறுகின்றது. இவைகளை உணர முடிகின்றது. இங்கு சர்வதேச சதி என்பது பொருளாதார நலனின் அடிப்படையில் இருக்கின்றது என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். சுரண்டும் பொருளாதார அமைப்பை பற்றி அறிந்து கொள்ள அதற்கான தேடலை உருவாக்கிக் கொள்ளுங்கள்.


நாம் எதிர்காலத்தை தீர்க்கமாக அறிந்து கொள்ள எமக்கு அரசியல் அறிவைப் பெருக்கிக் கொள்ள வேண்டும். இல்லாது போனால் தமிழ் பேசும் மக்களுக்கான போராட்டம் என்பது உரிமைகள் மறுதலித்து, மழுங்கடிக்கப்படுகின்ற நிலையை போக்குவதற்கான போராட்ட நுணுக்கம் உங்களுக்கு ஏற்படும்.

-நாதன்.

தடைக்கற்கள்


ஆரியர் - திராவிட உறவும்,
யூத பெருமையும்

வரலாறு பற்றிய பிரச்சனைகளுக்கு சில கருத்துக்கள் கூறவேண்டிய தேவையுள்ளது. குறிப்பாக யூதர்களை உதாரணம் காட்டுவதையும்> ஆரிய திராவிட மோதல்கள் பற்றிய கருத்துக்கள் பல வரலாற்றுத் தவறுகளை உள்ளடக்கியதாக இருக்கின்றுது. இவற்றை வரலாறு பற்றி தவறான புரிதலை போக்க வேண்டியதும் அவசியமான தேவையாக இருக்கின்றது. இறுதிக் கட்டம் என்று புலம்பெயர் புலிகளால் பிரச்சாரம் செய்யப்படுகின்ற வேளையில் ஆரிய திராவிட முரண்பாடு என்பது 3500 வருட வரலாறு கொண்டதாக பிரச்சாரப்படுத்தப் படுகின்றது. இதுபற்றி புரிதல் சமூகத்தில் இல்லை. இவ்வாறான வேளையில் வரலாற்று திரிபுகள் சமூகத்தில் பல வேண்டாத பிரச்சனைகளைக் கொண்டுவந்துவிடும்.

திராவிட ஆரிய சிந்தனையை தற்பொழுது முதலில் கிளறிவிட்டது சிறிலங்கா இராணுவ அதிகாரியாகும். இவரே தற்பொழுது இலங்கை சிங்களவருக்கே சொந்தம் எனக் கூறினார். இவரின் வரலாற்றுக் கூறு கண்டிக்கப்பட வேண்டியதே. இத்துடன் இவர்களின் ஆரிய திராவிட இனக்கூறுபற்றிய மிகைப்படுத்தல் பற்றிய வெளிப்பாடு என்பது சிங்கள மக்கள் மத்தியில் ஊறியிருப்பதும் இனப்பிரச்சனை தீர்ப்பதற்கு பாதக இருக்கின்றது. ஆயுதங்களை விட ஆபத்தானது விசமத்தனமாக கருத்துக்களாகும். இவ்வகையாக விசக் கருத்துக்களை பல்முனைச் செயற்பாடுகள் மூலமே எதிர்த்துப் போராட முடியும்.

இன்று எம்மக்கள் மத்தில் இருக்கின்ற ஆரியச் சிந்தனை அல்லது ஆரியவகை உலகக் கண்ணோட்டம்> சமஸ்கிருதமயமாதல் இவைகளை எமது சமூத்தில் இருந்து எதிர்கொள்வதும்> இலங்கையில் இருக்கின்ற சிங்களவர்கள் எல்லோருமே ஆரிய இனத்தின் வழித்;தோன்றல்கள் என்ற கருத்தியலையும் எதிர்க் கொள்வதானது போராடும் சமூகமாகிய எமக்கு அவசியமானதாகும். இவை மாத்திரம் அல்ல யூதச் சிந்தனை எமது மக்கள் மத்தியில் மதம் மூலமாக எம்மிடையே ஆழ வேர் ஊண்றியுள்ளது.
யூதர்களே தமிழர்களின் உதாரணம்??????

யூதர்களின் எவ்வாறு ஒரு தேசத்தை உருவாக்கினார்கள் என்பது பற்றிய வரலாற்றுப் பார்வையை இங்கு முழுமையாக கொடுக்கவில்லை எனினும் சில சாரம்சத்தை இங்கு தருகின்றறேன். யூதர்கள் சர்வதேசத்தின் உதவியுடன் ஒரு தேசத்தை உருவாக்கிக் கொண்ட உண்மையைத் தான் நாம் தெரிந்து வைத்திருக்கின்றேம். அதற்கு பின்னால் இருக்கும் வரலாற்றை நாம் எம்மவர் தெரிந்து வைத்திருப்பதில்லை.

யூதர்களின் இஸ்ரேல் -பலஸ்தீன வரலாறுயூதர்களின் உலகக் கண்ணோட்டும் எவ்வகையானதுஅவர்களின் வாழ்க்கை முறையூதர்கள் புலம்பெயர்ந்த நாடுகளின் வரலாறு


சமகால அரசியல் (எவ்வாறு கிறிஸ்தவ நெறியை பின்பற்றும் ஏகாதிபத்திய உலகத்தின் பாதுகாப்பு அரணின் கீழ் யூததேசம் இருக்கின்றது என்பதையும்> எவ்வாறு யூததேசம் எவ்வாறு மத்தியகிழக்கில் ஏகாதிபத்திய நலனைப் பாதுகாக்கின்றது என்பதை தெரிந்திருத்தல் வேண்டும்)இவைகளை அறிவதன் மூலமே யூதர்களின் உண்மையான வரலாற்றை அறிந்து கொள்ள முடியும்.
விவிலியத்தில் யூதரின் வரலாறு பற்றி பல ஆகமங்களாக பிரிக்கப்பட்டும்> பல ஆசிரியர்களை எழுத்தாளர்களாக் கொண்டும் உள்ளது. வரலாற்றினை தொகுத்த போது முன்னுக்குப் பின்னாக வரலாறு கூறப்படுவதினால்> அதன் காலமும் மாற்றம் கொண்டுள்ளது.
கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள்:

கடவுள் வாக்களித்த தேசம் எனதமது மேலான்மைக் கருத்தை முன்வைக்கின்றனர்.

காயின் ஆபேல் ஆகிய சகோதரர்களுக்கிடையேயான முரண்பாடு கூட இரண்டு வகை சமூகத்தின் உலகக் கண்ணோட்டத்திற்கும் இடையில் இடம்பெற்ற முரண்பாடுகளை பிரதிபலிக்கின்றது. மக்கள் பொருளாதார வளர்ச்சியடைந்த பிற்பாடு ஏற்பட்ட மாற்றாத்தினால் ஏற்படும் வர்க்க வர்க்க வளர்ச்சியினால் கீழ் நிலைக்கு வருகின்றனர்.

இவற்றிற்கு எகிப்து தேசத்தில் உருவாகிய நிலப்பிரபுத்துவச் சமூதாயத்தின் அரசியல் பொருளாதார அமைப்பானது யூதர்களின் இருப்பை கேள்விக் குறியாக்கியது.
'எந்த நாட்டில் நீ புகுவாயோ> அந்த நாட்டுக் குடிகளை எல்லாம் கலங்கடித்து> நீ வரக் கண்டவுடன் உன் பகைவர் எல்லோரும் புறமுதுகுகாட்டியோடச் செய்வோம். நீ அவர்களுடைய நாட்டில் புகுவதற்கு முன்னர்> நாம் பெரிய குளவிகளை அனுப்பி ஏனையரையும் கானானையரையும் ஏத்தையரையும் துரத்தி விடுவோம். அந்த நாடுகள் பாழாய்ப் போகாதபடியும்> காட்டு விலங்குகள் பல்கி உன்னைத் துன்புறுத்தாதபடிக்கும்> நாம் ஒராண்டிற்குள்ளே உன் முன்னின்று அவர்களைத் துரத்திவிடமாட்டோம். நீ பெருகி அந் நாட்டை உரிமையாக்கிக் கொள்ளும் வரை> அவர்களைச் சிறிது சிறிதாய் உன் முன்னிலையினின்று துரத்தி விடுவோம். (மேலும்) செங்கடல் தொடங்கிப் பிலித்தியரின் கடல் வரையிலும்> பாலைநிலம் தொடங்கி ஆறு வரையிலும்> உன் எல்லைகளை உங்கள் கைகளில் ஒப்படைப்போம். அவர்களோடும் அவர்களின் தெய்வங்களோடும் நீ உடன்பட வேண்டாம். அவர்கள் உன்னை எமக்கு எதிராகப் பழிசெய்யும்படி து}ண்டாவண்ணம்> அவர்கள் உன் நாட்டிலேயே குடியிருக்க வேண்டாம்" (யாத்தியர் ஆகமம் 23;-27-33)

பொருளாதார வளர்ச்சியினால் உயர் வர்க்கத்தின் (ஆழுமை கொண்ட இனத்தின்) தாக்குதல்களுக்கு ஈடு கொடுக்க முடியாத காரணத்தினால் போராட தொடங்குகின்றனர். மக்களை ஒன்றுதிரட்டிப் போராடுவதற்கு உண்மை எனக் கொள்ளக் கூடிய கருத்துருவத்தை உருவாக்க வேண்டியது அன்றைய காலத்தில் தேவையாக இருந்திருக்கலாம். இவ்வாறாக உருவாக்கப்பட்டதாக

இவ்விரண்டு சின்னங்கள் இருந்திருக்கலாம். இந்த இரண்டு கருத்துக் கொண்ட சின்னங்கள் யூத> கிறிஸ்தவத்திலும் முக்கிய இடம் பெறுகின்றது. இந்த இரண்டு முக்கிய கருத்துக்கள் தமிழ் மக்களை மாத்திரம் அல்ல மற்றைய இனங்கள் எதனையும் சமத்துவமான இனவகை என்பதை ஏற்றுக் கொள்ளவில்லை.

புறவினத்தாரிடம் சென்று நற்செய்தியைப் போதியுங்கள் என்ற கோட்பாட்டுக்கமைய தமது கருத்துருவாக்கத்தை பரப்பி மற்றைய மக்களின் உலகக் கண்ணோட்டத்தை அழித்து தமது உலகக் கண்ணோட்டத்தை பரப்பு வதன் மூலம் தமது மேலாதிக்கத்தை ஏற்படுத்துகின்றனர். இதனை தமிழ் தேசிய வாதிகள் எவ்வாறு ஏற்றுக் கொள்கின்றார் என தெரியவில்லை. யூதர்களின் இனவெறி மிருகத்தனமானதாக உருவெடுத்துள்ளது.





வாக்களிக்கப்பட்ட தேசம்> தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் என்ற கருத்தியலின் காரணமாக இஸ்ரேல் நாட்டவருக்கும் பலஸ்தீனர்களுக்கும் இடையிலே ஒரு (வல்லரசுகளால் திணிக்கப்பட்ட) சமாதான தீர்வை நடைமுறைப்படுத்த முடியாமல் இருக்கின்றது. இஸ்ரேலிய நாட்டவரின் எதேர்ச்சாதிகாரத்தை நிலைகொள்ள வைப்பது அமெரிக்க> ஐரோப்பிய தேசத்தவர்களுடன்> கிறிஸ்தவ உலகத்தவர்களின் உதவிகளேயாகும். ஒரு இனத்தினை தாழ்த்தி> தம்மை உயர்த்திக் கொள்ளும் தேசிய உணர்வுகள் ஏற்றுக் கொள்ளப்படக் கூடியவையா என்பதை நவீன உலகில் உழைக்கும் மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டுமா என்ற கேள்வி எழுப்புகின்றது. கிறஸ்தவ இறையியலைக் கொண்டு ஏன் பல நூற்றாண்டுகளாக தொடரும் யூத-பலஸ்தீனப் பிரச்சனையைத் தீர்க்க முடியவில்லை?

யூதரின் வரலாற்றை மாத்திரமே உண்மை எனக் கொண்டு அதனை ஏற்றுக் கொள்வதுடன்> மற்றவர்களிடத்தில் வலியுறுத்துவதை இன்னும் சாதாரண மக்கள் மத்தியில் மாத்திரம் அல்ல> படித்த மக்களிடத்திலும் ஆழமாக ஊன்றியிருக்கின்றது. பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் தாம் வாழ்ந்த பூமியைத் தவிர மற்றைய தேசங்கள்> இடங்கள் பற்றி அறிவு இருந்திருக்க நியாயம்

உலகின் ஒவ்வொரு முனைகளிலும் இருந்த மக்கள் தமக்கேயுரித்தான வரலாற்றைக் கொண்டு தான் இருந்திருக்கின்றனர். நாம் ஒவ்வொரு கண்டத்தை எடுத்துக் கொண்டாலும் பழமையான வரலாற்றைக் கொண்டிருப்பதை அறியலாம்.

யூதர்கள் தங்கள் முன்னோர்கள் பற்றி கூறும் போது ~~இவ்விதமாய் உண்டான தலைமுறைகளெல்லாம் ஆபிரகாமிற்கு தாவீது வரைக்கும் பதினாலு தலைமுறைகளும்> தாவீது முதல் பாபிலோனுக்கு சிறைப்பட்டுப் போன காலம் வரைக்கும் பதினாலு தலைமுறைகளும்> பாபிலோனுக்கு சிறைப்பட்டுப் போன காலம் வரைக்கும் முதல் கிறிஸ்து வரைக்கும் பதினாலு தலைமுறைகளுமாம்.~~ (பக்கம் 1.மத்தேயு> 1. அதிகாரம். 17 வசனம்) நாம் யூதர்களின் வரலாற்றை அறிந்து கொள்ளாது யூதர்களை எமக்கு உதாரணமாக எடுத்துக் கொள்வது மிகபெரும் வரலாற்றுத் தவறை நாம் புரிகின்றோம்.

சியோனிசச் சிந்தனை இவ்வாறே வாக்களிக்கப்பட்ட தேசம் என்ற கருத்தமைவில் ஒரு தேசத்தை உருவாக்கிக் கொள்ளும் சிந்தனை உருவாகியது. யூத உலகக் கண்ணோட்டம்> இனப்பாதுகாப்பு> வாக்களிக்கப்பட்ட தேசத்தை உருவாக்கிக் கொள்வது> தேர்த்தெடுக்கப்பட்ட மக்கள் கூட்டம் இவைகள் உள்ளடக்கியதே சியோனிச சிந்தனையாகும். இந்த சியோனிசச் சிந்தனையாது இஸ்ரேலிய தேசத்தை பலஸ்தீனத்தில் உருவாக்கிக் கொள்வதாக சியோனிச கொங்கிரஸ் தீர்மானம் கொள்ளவில்லை. ஆனால் இன்று உருவாகியிருக்கும் இஸ்ரேல் தேசம் என்பது மேற்கு உலகினால் கருத்திக்கப்பட்ட ஒரு சிசுவாகும்.

உலக மக்கள் யூதர்கள் மீது கொண்ட அனுதாபம் நாசிச அழிவின் எதிர்வினையாக உருவாகியது. இதனால் யூதர்களை தமது தேசங்களில் வைத்திருப்பதை தவிர்த்துக் கொள்ளும் பொருட்டு அன்று பிரித்தானியாவசம் இருந்த பலஸ்தீனத்தை துண்டாக்கி இஸ்ரேல் தேசத்தை உருவாக்கிக் கொண்டனர். இவர்கள் இன்று பலஸ்தீனர்களை உலகின் பலபாகங்களுக்கும் அகதிகளாக செல்ல காரணமாகி இருக்கின்றது.

திராவிடத்தின் வரலாறு 5500 வருடங்கள் பழமையானது சிந்து வெளி நாகரீகத்தினை உருவாக்கி பெருமையுடன் வாழ்ந்த இனம். தமிழினம் தன்னை கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தில் முன் தோன்றிய மூத்த குடி என பெருமைப்பட்டுக் கொள்கின்றது. லெமூரியா கண்டத்தில் பிறந்த மனித இனம் என்று பெருமை கொள்கின்றது. விவிலியம் பரவுவதற்கு முன்னரே இயக்கர்> நாகர் ஆகிய இனங்கள் இலங்கையில் இருந்ததாக வரலாறு கூறுகின்றது. அவர்கள் தமக்கென தனியான கலாச்சாரத்தைக் கொண்டு இருந்திருக்கின்றனர்.

யூதர்களின் சிந்தனையே மதமாற்றுத்திற்கு உட்பட்ட சமூகத்தில் புரையோடிப் போய் உள்ளது எம்மவர்கள் தமது சொந்த சரித்திரத்தை தெரிந்து வைத்திருப்பதிலும் பார்க்க யூதர்களின் வரலாற்றை பக்கம் பக்கமாக தெரிந்து வைத்துள்ளனர். கிறிஸ்தவ உலகத்தின் சிந்தனை மேலேடி இருப்பதினால் பலஸ்தீனர்களின் அலவத்திற்கான காரணம் விவிலியத்தில் இருந்து பெறப்பட்டது என்பதை அறிய முயற்சிக்காது இருக்கின்றனர். பலஸ்தீனத்தின் அவலம் இன்னும் தொடர்ந்தவண்ணமாக இருக்கின்றது. ஏன் சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற நோட்டே நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் மட்டத்தில் நடைபெற்ற கூட்டத்தொடரில் இஸ்ரேலின் பாதுகாப்பிற்கும்> அவர்களின் செயற்பாட்டிற்கும் ஆதரவைத் தெரிவுத்துக் கொண்டது கிறிஸ்தவநாடுகளைக் கொண்ட நோட்டே அமைப்பு. இதேவேளை கமாஸ் தனது ஆயுதப் போராட்டத்தை கைவிட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டது.

புலிகளின் ஆதரவாளர்> ஆய்வாளர் எனக் கூறிக் கொள்ளும் பிரேம் என்பவர்ஜிரிவியில் மக்கள் மீது குற்றம் சுமத்துகின்றார். அதாவது கடந்த காலத்தில் தனியே இராணுவ வெற்றிகளை இட்டு சந்தோசமடைந்தவர்கள். (இதற்கு யூதர்களைப் போல மூலதனத்தைப் பெருக்கி பெரும் பணக்காரர்கள் ஆகி> மேற்கு அரச யத்திரத்தை அசைக்கும் அளவிற்கு பொருளாதாரத்தில் வளரும் படி தீர்வை முன்வைத்தார்.) யூதர்கள் பொருளாதாரத்தில் வலிமையாக இருந்தார்கள்> இருக்கின்றார்கள். இவர்கள் போல தமிழர்களின் மூலதனம் வளர முடியுமா? இதற்கு பொருளாதார அமைப்பு இடம் கொடுக்குமா? சரி இன்றைக்கு தமிழ் முதலாளிகள் இருக்கின்றார்கள் இவர்கள் கொடுக்கும் சம்பளம் எவ்வாறு கணிக்கப்படுகின்றது. தமிழ் முதலாளிகளே தமிழ் தொழிலாளிகளை சுரண்டுவதை அனுமதிகக் கோருகின்றனர்.

தமிழ் மக்களிடையேயும்> சிங்கள மக்களிடையேயும் இருக்கும் வரலாற்று உண்மைகள் பற்றி மயக்கம் என்பது ஆழ வேர் ஊண்றி இருக்கின்றது. இவற்றினை போக்குவது என்பது ஆழமாக சிந்தித்து உருவாக்கப்படும் வேலை முறைகளின் மூலமே இனங்களுக்கிடையிலான ஒற்றுமையை உருவாக்க முடியும்.

இதேவேளை அன்னிய வரலாறே மனித குலத்தின் வரலாறாக கற்பிக்கும் கிறிஸ்தவ> யூத வரலாற்றை தமிழ்தேசியம் எவ்வித கேள்வியும் முன்வைக்கவில்லை.
இதேபோல ஆரியக் கடவுள்கள் திராவிடக்கடவுகள்களை அகற்றிவிட்டு ஆரியக் கடவுகள்கள் முன்வருவதையும் தமிpழ் தேசியத்தைப் போற்றுபவர்கள் புரிந்து கொள்ளவில்லை.

ஆரியச் சிந்தனையாகிய வண்ணாசிரமச் சிந்தனை எம்மீது ஆழவேர் ஊண்றியுள்ளது.

இன்று இராம வழிபாட்டின் மூலமாக ஆரியச் சிந்தனை மென்மேலும் ஆழமாக வேர் ஊண்றுகின்றது. இவ்வாறு எம்மிடம் எமது வரலாற்றைத் தவிர மற்றைய சிந்தனைகளை உள்வாக்குயிருக்கின்றோம். இந்த சிந்தனையில் எதுவும் முற்போக்கான சிந்தனை இருக்கின்றனவா?

-நாதன்.